சனி, 5 மார்ச், 2016

யாஹூ உருவான கதை..!!


Image result for yahoo



யாஹூ  இது  உலகம் முழுவதும் இணைய சேவையை வழங்கி வரும் ஓர் அரிய தேடுபொறியாகும்.இந்த தேடுபொறியானது அமெரிக்காவின் ஸ்ரான்போட் (ஸ்டார்ன்ஃபோர்டு) பல்கலைக் கழகப் பட்டதாரிகளான டேவிட் ஃபிலோ மற்றும் ஜெரி யாங் என்பவர்களால் 1994-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட்டு 1995-ம் ஆண்டு மார்ச் 2-ல் ஒருங்கிணைக்கப்பட்டது.

இதன் தலைமை அலுவலகம் கலிபோர்னியாவில் உள்ளது.தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் JERRY AND DAVID’S GUIDE TO THE WORLD WIDE WEB என்பதாக இருந்தது.1994-ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது.ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலின்  YET ANOTHER HIERARCHICAL OFFICIOUS ORACLE  என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO  என்பதைப் பயன்படுத்தினார்.இந்த பெயர் மிக முரட்டுத்தனமான நாகரீகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும்.

Image result for yahoo jerry and david

யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரி யாங் மற்றும் டேவிட்  ஃபிலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களை தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.2010 ஆம் ஆண்டின் தரவின் படி இந்நிறுவனத்தின் ஆண்டு வருமானம் அமெரிக்க ரூபாய் மதிப்பில் $6.324 பில்லியன் மதிப்பை எட்டுகிறது.

மேலும் யாஹூவானது யாஹூ மின்னஞ்சல்,மெசன்ஜர்,கணினி விளையாட்டு,வர்த்தகம் போன்ற சேவைகளை வழங்குகிறது.அதுமட்டுமல்லாமல் இது இந்திய மொழிகளான தமிழ்,இந்தி,குஜராத்தி,தெலுங்கு,கன்னடம்,பஞ்சாபி மற்றும் மலையாளம் போன்ற ஏழு மொழிகளுக்கு ஆதரவு அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 


2 கருத்துகள்: