வெள்ளி, 4 மார்ச், 2016

தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர்..!!


புதிதாக வந்திருக்கும்ஐபோன் 6’-ல் தமிழில் தட்டுவது நமக்கு இன்றைக்கெல்லாம் சர்வ சாதாரணமாக இருக்கிறது. ஆனால், 30 வருடங்களுக்கு முன் கணினிக்குள் தமிழைக் கொண்டுவரும் கனவு சாத்தியமாவது அத்தனை எளிதாக நடக்கவில்லை. உலகின் வெவ்வேறு மூலைகளில் இருந்த, விரல் விட்டு எண்ணிவிடக் கூடிய எண்ணிக்கையிலான தமிழ் இளைஞர்கள் சிலர் அதற்கான முயற்சியில் இறங்கியிருந்தனர். அர்ப்பணிப்பு மிக்க அசாதாரணமான உழைப்பினால் இறுதியில் அதைச் சாத்தியமாக்கினர்; ‘யூனிகோடு' வரை கூட்டிவந்தனர். அவர்களில் ஒருவர் முத்து நெடுமாறன். கணினிக்குத் தமிழ் எழுத்துரு தந்த முன்னோடிகளில் முதன்மையானவர். மலேசியத் தமிழர்.


Image result for முத்து நெடுமாறன்
Image result for முத்து நெடுமாறன்


முரசு அஞ்சல் புதிய பதிகையில் சில குறிப்பிடத்தக்க புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளை முத்து நெடுமாறன் புகுத்தியுள்ளார்.இதுக் குறித்து அவர் கூறியது,
முதல்நிலைப் பதிப்பில் ‘அஞ்சல்’ மற்றும் ‘தமிழ் 99’ விசைமுகங்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. முழுநிலைப்பதிப்பில் ஏற்கனவே உள்ள அனைத்து விசைமுகங்களும் வழக்கம்போல் இயங்கி வரும்.
செல்லினத்தின் 4.0ஆம் பதிகையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய ‘அஞ்சல்’ விசைமுகம் இரண்டு பதிப்புகளிலும் சேர்க்கப்பட்டுள்ளது.

Image result for முத்து நெடுமாறன்

முரசு அஞ்சல் இலவசப் பதிப்பில் ‘இணைமதி’ எழுத்துரு இணைக்கப்பட்டுள்ளது. மிக அழகிய வடிவிலான இந்த எழுத்துரு ஆப்பிள் கருவிகளிலும், எச்.டி.சி ஆண்டிராய்டு கருவிகளிலும், மெக்கிண்டாஷ் கணினிகளிலும் இயல்பாகச் சேர்க்கப்பட்டுள்ள எழுத்துரு.
விண்டோசுக்கான இலவச முரசு அஞ்சல் பதிகையில் இந்த எழுத்துரு சேர்க்கப்பட்டதன் வழி அதிகப் புழக்கத்தில் உள்ள அனைத்துக் கருவிகளிலும் கணினிகளிலும் ‘இணைமதி’ தமிழ் எழுத்துகளை அழகாக வழங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இணைமதியம் எழுத்துருவைக் கருப் பொருளாகக் கொண்டுதான் இன்றைய நிகழ்ச்சிக்கும் “இணைமதியம்” என்ற தலைப்புப் பெயர் சூட்டப்பட்டது.

Image result for முத்து நெடுமாறன்
விண்டோஸ்  இயங்குதளத்தை எல்லா நிலைகளிலும் பயன்படுத்தும் அனைத்துக்  கணினிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் இனி முரசு அஞ்சல் மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வண்ணம் புதிய பதிகை மேம்படுத்தப்பட்டுள்ளது.
சில அனைத்துலக இயங்கு தளங்களில் தமிழ் மொழி இயல்பாகவே இலவசமாகப் பயன்படுத்தும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தாலும், அவற்றில் குறிப்பாக ‘லதா’ போன்ற அழகு குறைந்த எழுத்துருக்கள்,சரியான முறையில் அமையவில்லை என்பதைக் கருத்தில் கொண்டுதான் தாங்கள் முரசு அஞ்சல் மென்பொருளை அனைவருக்கும் இலவசமாகவே வழங்கும் அதிரடி முடிவை எடுத்ததாகவும் முத்து நெடுமாறன் தெரிவித்தார்.
அதேவேளையில் தமிழ் ஆர்வலர்கள் ஆர்வத்துடன் தமிழ் மொழியைக் கணினியில் பயன்படுத்துவதற்கு அதன் விலை ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணத்தோடும், கணினிகளிலும், கையடக்கக் கருவிகளிலும் உலகம் எங்கிலும் தமிழின் பயன்பாடு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடும் தாங்கள் மேற்கொண்ட முடிவுதான் அனைவருக்கும் முரசு அஞ்சல் மென்பொருளை இலவசமாக வழங்கும் முடிவு என்றும் முத்து நெடுமாறன் அறிவித்தார்.

Image result for முத்து நெடுமாறன்

இவர் தான் தமிழ் எழுத்துருக்களை  தந்த முன்னோடிகளில் ஒருவராக இருந்த முதல்  தமிழர்  என்பதில் பெருமிதம் கொள்ளலாமே..!!

11 கருத்துகள்:

 1. முரசு அஞ்சல் பற்றிய நல்ல தகவல்கள். நானும் ஆரம்பத்தில் முரசு அஞ்சல் பயன்படுத்தியதுண்டு.

  பதிலளிநீக்கு
 2. தமிழ் எழுத்துருக்களை தந்த முன்னோடிகளில் ஒருவராக இருந்த முதல் தமிழரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 3. பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 4. நல்ல தகவல்கள். முரசு அஞ்சல் முதலில் உபயோகித்ததுண்டு. பின்னர் இப்போது அழகியில் தான் தட்டச்சு செய்கிறோம். தொடர்கின்றோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.நானும் அழகி கேள்விப்பட்டதுண்டு உபயோகித்துப் பார்க்கிறேன் ஐயா.நான் இப்பொழுது என்.எச்.எம்.ரைடரை உபயோகித்து வருகின்றேன் ஐயா.

   நன்றி.

   நீக்கு
 5. அரிய தகவல் அறிந்தேன் சகோ நன்றி
  தங்களது பதிவு ஏன் இப்பொழுது எனது டேஷ்போர்டில் வருவதில்லை மீண்டும் இணைத்திருக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருக ஜி வருக..தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.
   ஏன் வருவதில்லை என்று பார்க்கிறேன் ஐயா.நன்றி..

   நீக்கு
 6. வணக்கம் ஐயா. நானும் இணைமதி என் கணினியில் பதிவிறக்கம் செய்தேன். மேற்கொண்டு என் பயன்பாட்டிற்காக நான் மின்னஞ்சலில் பதிவு முயன்ற போது அது சீரியல் எண்ணைக் கேட்கின்றது. எந்த சீரியல் எண்ணைக் கேட்கின்றது என்றே புரியவில்லை.

  பதிலளிநீக்கு