வெள்ளி, 18 மார்ச், 2016

ஊழல் உருவாகவில்லை உருவாக்கப்பட்டது..!!


Image result for ஊழல்

ஊழல் உருவாகவில்லையா..??உருவாக்கப்பட்டதா..??அப்படினா அதற்கு காரணமானவர்கள் யார்..??எதனால் உருவானது..??எதற்காக உருவாக்கபட்டது..??அதை ஒழிக்க முடியாதா..??அதற்கு என்ன தீர்வு..??ஊழலுக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?? என்ற பலவிதமான கேள்விகள் அனைவருக்கும் தோன்றும் காரணம்.

ஊழலால் உருவாக்கபட்டது தான் நம் இந்தியா.இந்திய ஊழலில் கடந்த  வருடம் உலக நாடுகளின் கணக்கெடுப்பின்படி 76-வது இடத்தில் உள்ளது என்பது அறியப்பட்டுள்ளது.முதல் இரண்டு இடத்தில் சீனா மற்றும் அமெரிக்கா நாடுகள் தான்.சீனா நம் இந்தியா நாட்டைவிட சிறிய நாடு தான் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.ஆனால் நம் நாட்டு அப்படி என்ன பண கஷ்டமோ தெரியல..??ஊழல் ,இலஞ்சம்,சூது,கொலை,கொள்ளை மற்றும் கற்பழிப்பு என்ற அனைத்திலுமே முதல் பத்து இடத்தில் இடம் பிடித்துள்ளோம்.இது நமக்கு பெருமையா..???அடுத்த தலைமுறைக்கும்,மற்ற நாடுகளுக்கும்  முன்மாதிரியாக இருக்க வேண்டிய நம் நாடு ஏன் பின் உதாரணமாக இருக்கிறது என்று யோசிப்பதுண்டா..??யோசித்தாலும் அதை மாற்ற நினைத்துண்டா..??

Image result for ஊழல்

ஆனால் நம் அனைவருக்கும் தெரிந்த உண்மை தான்.இப்ப சாதாரணமா துப்புரவு வேலையிலிருந்து துப்பறியும் வேலை வரை அனைத்திற்கும் இலஞ்சம் தரவேண்டிய சூழலை உருவாக்கியுள்ளோம்.பணம் படைத்தவன்   இலஞ்சம் தந்து வேலை முடித்துக் கொள்கிறான்.ஏழை இலஞ்ச பெருசாளிகள் இடம் மாட்டிக்கொள்கிறார்கள்.

இது மட்டுமா இல்லையே.பஞ்சாயத்துல இருந்து சட்டமன்றம் வரை அனைத்திலும் ஊழல்.பொதுமக்களுக்கு சேவை செய்யும் அரசோ,அரசியலோ இரண்டுமே அதே பொது மக்களிடமிருந்து அவர்களுக்கு சேவை செய்ய வேண்டுமென்றால் பணம் தரவேண்டிய ஒரு சூழலை உருவாக்கியுள்ளனர்.

Image result for ஊழல்

இப்படி தாங்க  நாடு பொருளாதாரம்  முன்னேறுதோ இல்லையோ.நல்ல அரசாங்க  வீடுகளும் அரசியல் வீடுகளும் பொருள் தாராளமாக வளர்ச்சியடைந்து வருகிறது.இவ்வளவு ஊழல் வாங்கியுமே பணப்  பற்றாகுறையால் நம் இந்திய அரசு உலக வங்கிகளிலும் கடன் வாங்குகிறது.
அப்படி என்னங்க இவ்வளவு பணமிருந்தும் நம் நாடு வல்லரசாக மாறவில்லை.என்னிடம்  நா.முத்துநிலவன் ஐயா கூறிய கருத்து ஒன்றை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.நம் நாடு வல்லரசாவது பிறகு இருக்கட்டும் முதலில் நல்லரசு ஆகட்டும் என்று கூறினார்.இந்த வரிகளில் எவ்வளவு உண்மையுள்ளன.நம்மை பார்த்து தான் அடுத்த தலைமுறை வளரும் அதை கருத்தில் கொண்டு ஊழல் ஊழல் என்று சொல்லாமல் ஊழலுக்கு வழிவகைக்காமல் ஊழலை தகர்த்து உடைத்திடுவோம்.

Image result for ஊழல்

இனிப்  பிறக்கும் குழந்தையாவது கடன் சுமை இல்லாமல் பிறக்கட்டும்.
ஒரு தேசம் ஊழலில்லாமலும்,அறிவாளிகளின் தேசமாகவும்  இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்ற இயலும் தந்தை,தாய் மற்றும் ஆசிரியர் தான் அந்த மூன்று பேர் என்று அண்மையில் விதைக்கப்பட்ட அப்துல் கலாம் ஐயாவின் கூற்றுபடி நம் தேசத்தை ஊழலில்லா நாடாக மாற்றிட  முயற்சி செய்வோம்.
மாற்றம் ஒன்றே மாறாதது.ஒவ்வொருவரும் தன்னை மாற்றினால் கட்டாயம் நம்மை சுற்றி மாற்றங்கள் நிகழும் இது எனது தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா எனக்கு கூறியது.

இப்ப சொல்லுங்க ஊழலால் உருவானதா நம் தேசம்..??அல்லது தேசத்தை ஊழல் நிறைந்தாய் மாற்றப்பட்டதா.??

Image result for ஊழல்


3 கருத்துகள்:

 1. மக்கள் மனதில் மாற்றுச் சி்ந்தனை வரவேண்டும் வருமா ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஜி.அது தான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது ஐயா.எப்போது அனைவரும் இது எனது தேசம் எனது தேசத்திற்கு ஒரு அவமானம் என்றால் அது என்னுடையது என்று நினைக்கீறார்களோ அன்று தான் மாறும் ஐயா.வாழ்கைக்கு பணம் தேவை தான் ஆனால் பணமே வாழ்கை என்று மாறியதன் விளைவு தான் இன்று இலஞ்சம்,ஊழல் என்று வளர்ந்து நிற்கிறது ஐயா.பார்க்கலாம் ஐயா இனி வரும் தலைமுறையினருக்கு ஊழல் இல்லா நாடாக மாற்ற வேண்டி விதையை பெற்றோர்களும்,ஆசிரியர்களும் விதைக்கட்டும்.

   மீண்டும் நன்றி ஐயா.

   நீக்கு
  2. வாங்க ஜி.அது தான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது ஐயா.எப்போது அனைவரும் இது எனது தேசம் எனது தேசத்திற்கு ஒரு அவமானம் என்றால் அது என்னுடையது என்று நினைக்கீறார்களோ அன்று தான் மாறும் ஐயா.வாழ்கைக்கு பணம் தேவை தான் ஆனால் பணமே வாழ்கை என்று மாறியதன் விளைவு தான் இன்று இலஞ்சம்,ஊழல் என்று வளர்ந்து நிற்கிறது ஐயா.பார்க்கலாம் ஐயா இனி வரும் தலைமுறையினருக்கு ஊழல் இல்லா நாடாக மாற்ற வேண்டி விதையை பெற்றோர்களும்,ஆசிரியர்களும் விதைக்கட்டும்.

   மீண்டும் நன்றி ஐயா.

   நீக்கு