அன்புடையீருக்கு வணக்கம்,
இன்பத்தை பகிரும் போது பல மடங்கு அதிகரிக்கும் என்று கூறுவர்,அது உண்மையே.உலக மகளிர் தினத்தை முன்னிட்டு எங்கள் கல்லூரியில் மகளிர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.மகளிர் தினம் என்பது அனைத்து மங்கையரின் உரிமை மற்றும் அன்பு இது கிடைக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நாள் தான் மகளிர் தினம்.மங்கையராக பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்ற கவிமணி வரிகளின் படி,
இத்தினம் அனைத்து மகளிரும் பெருமிதம் கொள்ளத்தக்க ஒரு நாளாக விளங்குகிறது.காரணம் ஒரு பெண் பல பரிணாமங்களை அடைகிறாள் அதாவது ஒரு சேயாக,மனைவியாக மீண்டும் தாயாக போன்ற பல்வேறு பரிணாமங்கள் அடைகிறாள் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது ஒரு பெண்ணே.
பல நூறு பேர்கள் சேர்ந்து பெரிய மாடமாளிகையை கட்டலாம் ஆனால் ஒரு இல்லம் இல்லமாக்க ஒரு பெண்ணால் மட்டுமே முடியும்.ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால் என்ற பழமொழி கேட்டதுண்டு அனைவருமே.ஆம் ஒரு பெண் நினைத்தால் உலகையே உருவாக்க முடியும் அதே பெண் நினைத்தால் அவள் உருவாக்கியதையே அழிக்கவும் முடியும்.
பொறுமையில் ஒரு பெண் சீதா பிராட்டியாகவும்,அன்பிலும் கருணையிலும் அன்னை தெரஸாகவும்,வீரத்தில் ஜான்ஸி ராணியாகவும் இருப்பாள்.இப்படி ஒரு பெண் பலவாக மாற முடியும் என்றால் அவளுக்குள் இருக்கும் தயக்கம் என்ற ஒரு கொடிய நோய் தீர வேண்டும் அப்போது தான் ஒரு பெண் வெற்றி என்னும் பாதைக்கு செல்ல முடியும்.
மகளிர் தினத்திற்கு(08.03.2016) சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருமதி.அனுராதா கிருஷ்ணமூர்த்தி(கருநாடக பாடகி மற்றும் சின்னத்திரை நடிகை) மற்றும் திருமதி.கௌசல்யா (மகப்பேறு மருத்துவர்) இதுப்போன்ற பல்வேறு வகையில் அவர்கள் சந்தித்ததை மாணவியர்களிடம் பகிர்ந்து கொண்டனர்கள்.பெண்கள் விழிப்புணர்வு மற்றும் பல்வேறு கேள்விகளை மனதில் பதித்துவிட்டுச் சென்றனர்.அவர்களின் வாழ்க்கையில் அவர்கள் சந்தித்த சில தடைகளும் அனுபவங்களையும் எங்களோடு பகிர்ந்தனர்.
இப்படி பெண்களை கௌரவிக்கும் வகையில் இம்மகளிர் தின நிகழ்ச்சி எங்களுக்கு மறக்க முடியாது நிகழ்வாக இருந்தது.இதை ஏற்படுத்தி எங்களை இன்ப வெள்ளத்தில் மூழ்க வைத்தது மறக்க முடியாத விழாவாக அமைத்து தந்த எங்கள் கல்லூரி முதல்வர்.திரு.முனைவர்.ம.கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கு அனைத்து மாணவிகள் சார்பாகவும் மிகப் பெரிய நன்றிகள் ஐயா.
தங்களின் உறுதுணையும்,ஊக்கமும் இருக்கையில் கட்டாயம் நாங்கள் அனைவரும் எங்கள் திறமைகளை வெளிகொணருவோம் ஐயா.நன்றிகள் பல..தொடர்ந்து ஊக்கமளித்து எங்களை ஒரு வெற்றி பாதையை நோக்கி கொண்டு வழி நடத்தவும் ஐயா. நன்றி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக