செவ்வாய், 8 மார்ச், 2016

கிழக்கு மத்திய ரயில்வேயில் 246 பணி.!!

கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 246 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Image result for east central railway hajipur


மொத்த காலியிடங்கள்: 246

பணி: கான்ஸ்டபிள்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2016 தேதியின்படி 18 - 25க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை இந்திய அஞ்சல் வில்லையாக அல்லது வங்கி வரைவோலையாக Financial Advisor & Chief Accounts Officer, East Central Railway, Hajipur என்ற பெயருக்கு எடுத்து அனுப்ப வேண்டும். எஸ்சி, எஸ்டி, பெண்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்திறன் தேர்வு, உடல் அளவீட்டு தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.2,000

விண்ணப்பிக்கும் முறை: www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

IG-Chief Security Commissioner,

East Central Railway, Hajipur,

Pin Code- 844 101, Bihar

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 11.04.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ecr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

2 கருத்துகள்:

  1. என்னைப்போல படிக்காத கூமுட்டைகளுக்கு பயனில்லை என்றாலும் படித்த மாணவர்களுக்கு பயன் அளிக்கட்டும் பகிர்வுக்கு நன்றி சகோ - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  2. வருக ஐயா.தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு