அன்புள்ள கலாமுக்கு
கோடி மக்களில் ஒருத்தியாய் பல கோடி மனங்களின் பிரதிபலிப்பாய்
நான் யார் எனக் கூட அறிந்திராத உனக்காக நான் எழுதும் சில வார்த்தைகள் இதோ`……..
இந்த எழுத்துக்கள் யாவும்
உன் அஞ்சலிக்காகவோ
சாதனைக்காகவோ
சிறந்த விஞ்ஞானிக்காகவோ
சாதனைகளின் சொந்தக்காரன் என்பதற்காகவோ
குடியரசு தலைவன் என்பதற்காகவோ
உன் மனித நேயத்திற்காகவோ அல்ல…
காரணம் ஒன்று மட்டுமே
என் கலாம் ஒரு
ஆசிரியர் என்பதுவே அது என் கண்கள் ஒரு முறை கூட உன்னை நேரில் கண்டதில்லை.
ஆனால் உன்னை பற்றி
நான் எழுதுவதை எண்ணி நானும் என் பேனா முனையும்
பெருமை கொள்கிறோம்.
உலகின் மாசுபாட்டை
பற்றி சிந்தித்தாய்
இளைஞர்களை பற்றி
சிந்திதாய், கனவுளை பற்றி சிந்தித்தாய்
நீ ஒருவன் இல்லையெனில்
நாங்கள் அனைவரும் என்ன செய்வோம்
என்பதை மட்டும்
சிந்திக்க மறந்து விட்டாயா?
நான் கேள்வியுற்றேன்.
உன்னை நேசிக்கும் ஒரு சிறு மாணவி கூறினாளாம்…..
கலாமை ஒரு முறை
கண்டிராத
நான் ஏன் ஒரு கலமாக
மாறி
நம் நாட்டிற்க்கு
சேவை செய்யக்கூடாதென?
உன் மீது எத்தனை
அன்பு பார்த்தாயா!.....
மிகவும் அருமையாக உள்ளது தோழி
பதிலளிநீக்கு