வெள்ளி, 18 மார்ச், 2016

தமிழ் விக்கிப்பிடீயாவை உருவாக்கியது ஒரு தமிழன்..!!

Image result for e.mayooranathan writer photo

தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாறு 2003, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இன்று தமிழ் விக்கிப்பீடியாவில் பக்கங்கள் 2,47,367, கட்டுரைகள் 85,133, கோப்புகள் 9,020, தொகுப்புகள் 21,16,060, பயனர்கள் 96,425, சிறப்பு பங்களிப்பாளர்கள் 292, தானியங்கிகள் 182, நிருவாகிகள் 37, அதிகாரிகள் 4 என வளர்ந்து நிற்கின்றது. இதன் ஆரம்பக் காலம் எப்படி இருந்திருக்கும் எனும் கேள்வி விக்கிப்பீடியாவுக்குள் நுழையும் ஒவ்வொரு பயனருக்கும் ஏன் எனக்கும் மட்டுமன்றி, தமிழ் விக்கிப்பீடியா பற்றி அறிந்துக்கொள்ள முற்படும் ஒவ்வொருவருக்கும் ஏற்படுகின்றன. அதேவேளை விக்கிப்பீடியா குறித்தக் கருத்துக்கள், கட்டுரை எழுதுதல், உரையாடல்கள், ஆய்வுகள் நிகழும் போதும் இக்கேள்விகள் முதன்மையாகின்றன.

தமிழ்  விக்கிப்பீடியாவைப் பொருத்தவ வரையில்  இ. மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்ப வளர்ச்சிக்கு வித்திட்டார். ஆரம்பக்காலங்களில் சிலர் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கும், இடைமுகத்தை உருவாக்குவதற்கும் என சிற்சில முயற்சி செய்துப்பார்த்துள்ளனர். இருப்பினும் இலங்கை, யாழ்பாணத்தைச்  சேர்ந்த இ. மயூரநாதன் என்பவரே 2003 நவம்பர் 20 ஆம் தேதி இணைந்து தமிழ் விக்கிப்பீடியாவின் இடைமுகத்தை உருவாக்கி, முறைமைப்படுத்தி ஆரம்பம் முதல் முனைப்புடன், தமிழ் விக்கிப்பீடியாவை ஒரு வளர்ச்சிப் பாதை நோக்கி கொண்டுவந்தவராவர். இன்றோ உலகெங்கும் வாழும் தமிழர்களின் முன்னெடுப்பால் தமிழ் விக்கிப்பீடியா ஒரு குறிப்பிட்ட வளர்ச்சியை அடைந்து, மேலும் முன்னேற்றத்துடன் முன்னோக்கிச் செல்கிறது.

மயூர நாதன் வரவின் பின்னரே தமிழ் விக்கிப்பீடியாவுக்கான ஒரு இடைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. அவரின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 20 ஆம் தேதி பதிவாகியுள்ளது. அவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தை வடிவமைத்தப்போதும், ஏற்கெனவே பயனர்கள் செய்த தொகுத்தல் முயற்சிகளை அழிக்காமல் அப்படியே விட்டுள்ளார். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றத்தின் போது மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் மயூரநாதன் முன்மாதிரியாக நின்று, அவற்றை முறையாக நெறிப்படுத்தி வந்திருப்பதை, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுப் பக்கங்கள் சான்றுகளாக  காட்டுகின்றன. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் 96,425 பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் 292 உள்ளனர். இப்போதைக்கு அனைத்துப் பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 85,133 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% கட்டுரைகள் இ. மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டின்படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 எனும் எண்ணிக்கையினை கடந்துச் செல்கிறது.

இவரது பயனர் பக்கம் 2003 நவம்பர் 25 ஆம் திகதி தொகுக்கப்பட்டுள்ளது. இவரது பயனர் பேச்சு தொடக்கம் 2005 மே 2 ஆம் திகதி என காணப்படுகின்றது.

தமிழன் என்று தலைநிமிரலாமே..!!தமிழன் கண்டுபிடிக்காதவை என்று எதுவுமில்லை இன்று..!!


6 கருத்துகள்:

 1. திரு. மயூரநாதன் அவர்களை வாழ்த்துவோம்...
  நல்ல செய்திகள் தொகுப்பாய்... தொடரட்டும் உங்கள் பணி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.தொடர்கிறேன் ஐயா.

   நீக்கு