வணிகவியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வணிகவியல் துறை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 ஆகஸ்ட், 2018

பிறப்பின் வலி


நடந்து கொண்டிருக்கிறது பாலியல் பிரச்சினைகளுக்கெல்லாம் என்னுடைய தீர்வு என்னவென்றால்
இனிமேல் ஒவ்வொரு பெண்ணின் பிரசவ அறைகளிலும் கணவன் அணுமதிக்கப் பட வேண்டும்.அந்தப் பெண் படுகின்ற வேதனை காட்சிப் படுத்தப் பட வேண்டும்.
தன்னுடைய மனைவி இவ்வளவு கஷ்டப்பட்டு தன் பிள்ளையைப் பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த ஆணும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
தன்னுடைய தாய் இவ்வளவு வேதனைகளைத் தாங்கி தன்னை பெற்றிருக்கிறாள் என்பதை அறிந்த எந்த பிள்ளையும் வேறொரு பெண்ணின் வாழ்வை சிதைக்க மாட்டான்.
வெளிநாடுகளில் இருக்கிற மருத்துவமனைகளிலெல்லாம் கணவர்கள் அணுமதிக்கப் படுகிறார்கள்.
தமிழகத்திலும் இதை அமுல்படுத்தினால் பாலியல் பிரச்சனைகள் குறையும்.

செவ்வாய், 5 டிசம்பர், 2017

பன்னாட்டுக் கருத்தரங்க அறிவிப்பு


கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில்,வணிகவியல் துறை சார்ப்பில் நடத்தும் முதலாமாண்டு பன்னாட்டுக் கருத்தரங்கம்.
தலைப்பு - "EARNINGS MANAGEMENT PRACTICES IN INDIA"
கருத்தரங்க நாள் - 05.01.2018


கட்டுரை வழங்க இறுதி நாள் - 20.12.2017

தொடர்புக்கு - 8807473229 ( Dr.R.Vasuki - Head, Department of Commerce )

தாங்கள் கட்டுரை வழங்கி கருத்தரங்கை சிறப்பிக்குமாறு 

அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.




திங்கள், 27 நவம்பர், 2017

சாணக்கியா 2017





அன்புடையீர் வணக்கம்,

இந்த வருடத்திற்கான சாணக்கியா தேடல்.கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையின் சார்பில் ஒவ்வொரு வருடமும் சாணக்கியா என்ற தலைப்பில் வணிக வினாடி வினா மற்றும் சிறந்த மேலாளர் போன்ற  போட்டிகள் நடைபெற்று வருகின்றன.இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 14,2017 அன்று சாணக்கியா நடைபெற உள்ளது.இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.அனுமதி இலவசம். பங்கேற்பவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழும் உண்டு.மேலும் பார்வையாளர்களுக்கும் சிறந்த பரிசு உண்டு. வணிகவியல் சார்ந்தும் சாராமலும் அனைத்து பாடப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்.

பெண்கள் வணிகத்திலும் சாணக்கியர் தான் என்பதை நிரூபிக்க சிறந்த ஒரு வாய்ப்பாக அமைய  உள்ளது.ஆர்வமுள்ள கல்லூரி மாணவிகள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தொடர்புக்கு,
ஆர்.வாசுகி - 8807473229
(வணிகவியல் துறைத்தலைவர்)



வியாழன், 6 ஏப்ரல், 2017

எந்த வயதில் எவ்வளவு சேமிப்பு..




ஒரு தனிநபரின் நிதியில் அடிப்படை விதியாக சொல்லப்படுவது, இளம் வயதிலேயே சேமிக்கத் துவங்குங்கள் என்பது தான். கூட்டு வட்டியின் பலனை ஒருவர் முழுமையாக பெற வேண்டும் என்பதே, இதற்கான காரணம்.

ஒருவர் தனக்கு தானே ஊதியம் அளித்துக் கொள்ளும் முறையே சேமிப்பு ஆகும். நாம், நமக்காக சம்பாதிக்கும் போது, அதில் முதல் செலவானது தனக்காக செய்வதே சரியாக இருக்கும். எனவே தான், ஊதியத்தில் ஒரு பகுதியை, முதலில் சேமிப்பாக, உங்களுக்காக எடுத்து வையுங்கள் என்கின்றனர்.

சேமிப்பின் பயன் சேமிப்பதன் அடுத்த கட்டம், அதை கொண்டு என்ன செய்கிறோம் என்பது. சேமிப்பதற்கு இரண்டு முக்கிய நோக்கம் இருக்கிறது.

சேமிக்கப்படும் தொகையில், ஓய்வூதிய நிதி மற்றும் அவசர கால நிதிக்கான தொகை கட்டாயம் ஒதுக்கப்பட வேண்டும்.

ஓய்வூதிய நிதி, பணி வாழ்க்கைக்கு பின் கைகொடுப்பது. அவசர கால நிதி, எதிர்பாராத நெருக்கடிகளை சமாளிக்க உதவும்.

ஒருவரின் வாழ்வியல் மற்றும் நிதி இலக்குகளுக்கு ஏற்ப மாறக்கூடியது என்றாலும், பொதுவாக எல்லோரும் பின்பற்றக்கூடிய ஒரு வரையறை இருக்கவே செய்கிறது. வயதிற்கேற்ப இந்த தொகை அமையும். இதை எளிதாக ஒரு பட்டியல் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

20 வயது துவங்கி ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் ஒரு தனிநபர் தன்னுடைய சம்பளத்தில் சேமிக்க வேண்டிய பட்டியலை காண்போம்.

ஒவ்வொரு பருவத்திலும் சேமிக்க வேண்டிய தொகை :

ஓய்வு கால நிதிக்கான தொகை

20கள் மொத்த வருமானத்தில் 10 சதவீதம்

30கள் மொத்த வருமானத்தில் 12.5 சதவீதம்

 40கள் மொத்த வருமானத்தில் 15 சதவீதம்

50கள் மொத்த வருமானத்தில் 20 சதவீதம்

 60கள் இப்படி சேமித்து வந்திருந்தால் இந்த வயதிற்கு பின், சுதந்திரமாக அதன் பலனை அனுபவிக்கலாம்.

அவசரகால நிதிக்கான தொகை :

20கள் குறைந்தது 3 மாத அடிப்படை செலவுக்கான தொகை

 30கள் 3 முதல் 6 மாத கால செலவுக்கான தொகை

40கள் 6 முதல் 12 மாத கால செலவுக்கான தொகை

 50கள் 12 முதல் 24 மாத கால செலவுக்கான தொகை

 60கள் 3 முதல் 5 ஆண்டு கால செலவுக்கான தொகை










வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

திறமைக்கான வரவேற்பு அழைப்பிதழ்..!!


கே.எஸ்.ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 24.02.2017 அன்று வணிகவியல் மற்றும் வணிகக் கணினிப்பயன்பாட்டியல் துறை இணைந்து நடத்த இருக்கும் சாணக்கியா என்ற தலைப்பில் வினாடி வினாப் போட்டி நடைபெறவுள்ளது.வணிகவியல் துறையைச் சார்ந்த இளங்கலை மூன்றாமாண்டு பயிலும் மாணவிகள் மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கலாம்.போட்டியின் இறுதியில் பரிசுத் தொகையும், சான்றிதழும்  வழங்கப்படும்.

போட்டிகளுக்கான குறிப்பு; மாணவிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு.தேநீர் வழங்கப்படும்.

முன்பதிவிற்கான கடைசி தேதி ; 21.02.2017


அனுமதி இலவசம்..   

                                         

புதன், 14 செப்டம்பர், 2016

நல்ல நோட்டுக்களுக்கென்றே சில பாதுகாப்பு அம்சங்கள்...!!!

இன்று நான் பகிரவுள்ள தகவல் எனது நண்பர் மூலம் எனக்கு அறிய கிடைத்தவை..இதனை தங்கள் பார்வைக்கும் கொணர்வதன் நோக்கமே இப்பதிவு..

திங்கள், 12 செப்டம்பர், 2016

சனி, 16 ஏப்ரல், 2016

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கங்கள் எப்படி..??

அன்புடையீருக்கு வணக்கம்,

கடந்த வாரம் பங்குச் சந்தையில்  ஈடுபடுவர்களை பற்றி பார்த்தோம்.இப்பொழுது  பங்குச் சந்தையில் எவ்வாறு ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகிறது என்பதை பற்றி காணலாம்.

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

பங்குச் சந்தைக்கு நேரமாச்சு.. (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

பங்கு வர்த்தகம் என்றால் என்ன என்பது தெரியாமலும் தெரிந்தும் அதை எப்படி பயன்படுத்திக் கொள்வது அதில் இலாபம் அதிக அளவில் கிடைக்குமா..???அல்லது நஷ்டம் தான் அதிகளவில் கிடைக்குமா..???இல்லை அதில் முதலீடு செய்வது எந்த அளவிற்கு பயனை நம்மால் அடைய முடியுமா என்ற எண்ணத்தோடு குழம்பி தவிப்போருக்கான ஒரு சிறிய தெளிவை  ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் பங்கு வர்த்தகத்தின் அடிப்படைகளை மட்டும் பார்த்து வருகிறோம்.இந்த வாரம் பங்குச் சந்தையில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு வகைக்களாக பிரிக்கலாம் என்பதை பற்றி  காணலாம்.

ஞாயிறு, 27 மார்ச், 2016

வாங்க போலாம் பங்குச் சந்தைக்கு..!! (தொடர்ச்சி)

அன்புடையீருக்கு வணக்கம்,

இந்த வாரம் பங்குச் சந்தைக்கு தயார் ஆயிட்டிங்கனு நினைக்கிறேன் நட்புகளே.சரி கடந்த வாரங்களாக பங்குச் சந்தை பற்றிய தகவல்களை சிறிது சிறிதாக பார்த்து வருகிறோம்.இந்த வாரம்  பங்குத் தரகர்களிடம் எவ்வகையான கணக்கை உருவாக்க வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

Image result for பங்கு சந்தை


பங்குத் தரகர்கள்;

பங்குச் சந்தையில் பங்குகளை நேரடியாக வாங்கவோ விற்கவோ இயலாது.அதற்கென இருக்கும் பங்குச் சந்தையில் உரிமம் பெற்ற உறுப்பினர்களிடம் மட்டுமே பரிவர்த்தனை செய்ய இயலும் அவர்களே தரகர்கள்.இத்தகைய தரகர்களிடம் இருவகையான கணக்குகளை உருவாக்க வேண்டும் அவை,

1.டீ-மேட் கணக்கு(demat account)
2.வியாபார கணக்கு(trading account)

டீ-மேட் கணக்கு என்றால் என்ன..?? 

                    வங்கிகளில் நாம் பணத்தை வரவு செலவு செய்வது போல, நாம் வாங்கும்/விற்கும் பங்குகளின் வரவு செலவைப் பராமரிக்க, தரகர்களிடம் நாம் தொடங்கும் கணக்கே 'டீ-மேட்' கணக்கு ஆகும். முந்தைய காலத்தில் பங்குகள் காகிதத்தில் இருந்தன. இப்பொழுது பங்குகள் Electronic Format இல் பேணப்படுகின்றன. இதனால், பரிவர்த்தனைக்கான காலம் மிகக்குறைவதோடு, வீட்டில் இருந்தவாறே பரிவர்த்தனை செய்யவும் இயலுகிறது. அது மட்டுமில்லை, Physical Share மூலம் பரிவர்த்தனை செய்வது மிகக் கடினமாக இருந்ததோடு, அப்பரிவர்த்தனைக்கு முத்திரைக் கட்டணம் வேறு செலுத்த வேண்டியிருக்கும். Demat Share Transactionஇல் இத்தகைய தொல்லைகள் இல்லை. தவிர, பங்குகளுக்காக நாம் விண்ணப்பம் அனுப்புகையில், நமது Demat Accountஇன் விவரத்தைப் பூர்த்தி செய்து அனுப்பினால், பங்குகள் நேரடியாக, நமது கணக்கில் வரவு வைக்கப் படும்.
விற்கவோ, வாங்கவோ அல்லது நம் பங்குகளை அடகு வைக்கவோ விரும்பினால், நாம் Demat Account வைத்திருப்பது அவசியம்.

Demat Account தொடங்க, (இந்தியாவில்), வருமான வரி எண் (Permanent Account Number) கண்டிப்பாகத் தேவை. வங்கிக் கணக்கு தொடங்கத் தேவைப்படுவது போலவே நமது அடையாள அட்டை, தற்போதைய முகவரிக்கான சான்றிதழ், புகைப்படங்கள் ஆகியவை இத்தரகர்களிடம் (நிறுவனங்கள்) Demat Accountக்கான விண்ணப்பத்துடன் கொடுக்கப்பட்டால், நமக்கான கணக்கு துவங்கப்பட்டு, கணக்கு எண் கொடுக்கப்படும். அதற்குப் பின், நாம் ஏற்கனவே வைத்திருக்கும் Physical Share-களை, Demat Share-களாக மாற்றிக்கொள்ளவும், புதிய பங்குகளை வாங்க/விற்கவும் முடியும். 


வியாபார கணக்கு  என்றால் என்ன? 

                            Demat Account நமது கணக்கில் உள்ள பங்குகள், பராமரிக்கப் படும். அவ்வளவே! நாம் வாங்கி விற்க வேண்டுமானால், வர்த்தகத்திற்கான தனிக்கணக்கு (Trading Account) தொடங்கியாக வேண்டும். Demat Account உள்ளவர்கள் மட்டுமே Trading Account தொடங்க முடியும். வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாகக் கூட பங்குப் பரிவர்த்தனை செய்யலாம். அதற்கான கணிணி மென்பொருளைப் பங்குத் தரகு நிறுவனத்திடம் பெற்று ( ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி) நமது கணிணியில் நிறுவிக் கொள்ளலாம். இதைச் செய்தோமானால், சந்தை நிலவரத்தை உடனுக்குடன் அறிந்து வாங்குவதா / விற்பதா என்று முடிவெடுப்பதும் வியாபாரம்  செய்வதும் எளிதாக இருக்கும். ஆனாலும், நமது பங்கு வணிகம், அப்பங்குத் தரகர் வழியாகவே நடைபெறுகிறது. ஆகவே, நமது பரிவர்த்தனைகளுக்கு ஏற்றவாறு, நாம் அவர்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியிருக்கும். 

பங்குச் சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடும் தனிநபர்களை இரண்டு விதமாகப் பிரிக்கலாம்.
                          01.  முதலீட்டாளர் (Investor)
                           02.  நாள்வணிகம் செய்வோர் (Day Trader) 

அடுத்த வாரம் இதுக் குறித்து விரிவாக பார்க்கலாம்.நன்றி.




ஞாயிறு, 20 மார்ச், 2016

பங்குச் சந்தைக்கு தயாரா..??(தொடர்ச்சி)

Image result for பங்கு சந்தை

அன்புடையீருக்கு வணக்கம்,

இந்த வாரம் பங்குச் சந்தையின் வகைகளை பார்க்க உள்ளோம்.அதற்கு முன்னர் கடந்த பதிவுகளை சற்றுத் திருப்பிப் பார்க்க விரும்புவோர் நினைவுக்கு அவற்றின் தலைப்புகளை கீழே பார்க்கலாம்.

1.மூலதனம் என்றால் என்ன..??
2.ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு..??
3.பங்குச் சந்தை வர்த்தகம்.
4.பங்குச் சந்தை வர்த்தகம்(தொடர்ச்சி)
5.பங்குச் சந்தைக்கு போலாமா(தொடர்ச்சி)

சரி ஒவ்வொரு வாரமும் பங்குச் சந்தை குறித்த விவரங்களை தாங்கள் எளிதில் அறியும் வண்ணம் இங்கு ஓவியம் தீட்டி வருகிறேன்.தொடர்ந்து படித்து தாங்களும்  பங்குச் சந்தையின் பங்குகள் குறித்து தகவல்களை தெரிந்துக் கொள்ளுங்கள் நட்பூக்களே.வாங்க சந்தைக்குள் போகலாம்,


பங்குச் சந்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.அவை,

1.முதன்மைப் பங்குச் சந்தை.
2.இரண்டாம் நிலை பங்குச் சந்தை.


முதன்மைப் பங்குச் சந்தை;

    ஒரு நிறுவனம் நேரடியாகப் பங்குகளை வெளியிடுவதற்கு முதன்மைப் பங்குச் சந்தை என்று பெயர். பொதுப்பங்கு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் முதலியவை, நிதி திரட்டும்பொருட்டு, பங்குகளை வெளியிடுகின்றன. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்க விரும்புபவர்கள், அதற்கான படிவங்களை நிரப்பி, முதலீடு செய்ய விரும்பும் தொகைக்கான காசோலை  அல்லது வரைவோலையை (Demand Draft) இணைத்து, முகவர்கள் மூலமாக விண்ணப்பிப்பார்கள். அவ்விண்ணப்பங்கள் பரிசீலிக்கப் பட்டு, பங்குகள் ஒதுக்கீடு செய்யப் படலாம் அல்லது விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படலாம். ஒரு நிறுவனம் முதன்முதலில் பங்குகளை விற்பனை செய்வதை 'முதல் பங்கு வெளியீடு' என அழைப்பர். அதற்குப் பின்னர் வெளியிடும் பங்குகளை 'தொடர் பங்கு வெளியீடு'  என்பர்.

பங்குகளின் அடிப்படை விலை 'முக மதிப்பு ' என அழைக்கப்படும். அதாவது, ஒரு பங்கின் விலை ரூபாய் 10 என நிர்ணயிக்கப்பட்டால், அப்பங்கின் முக மதிப்பு ரூ.10.00 ஆகும். மீண்டும் பங்குகளை விற்கும் பொழுது, அப்பங்குகளுக்கான தேவை அல்லது தேவை  (Demand) எவ்வாறு உள்ளதோ அதற்கேற்றவாறு முக மதிப்பைவிட அதிகமாகவோ (Premium),குறைவாகவோ (Discount) அதே அளவிலோ (At Par) நிர்ணயிக்கப் படலாம்.

இரண்டாம் நிலை பங்குச் சந்தை;


முதன்மைச் சந்தையில் பங்குகளை வாங்கியவர்கள், தம் பங்குகளை விற்கவோ, மற்றவர்கள் வாங்கவோ அணுகுவது இரண்டாம் நிலைப் பங்குச் சந்தை அல்லது வெளிச்சந்தை ஆகும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளை மட்டுமே வாங்கவோ விற்கவோ இயலும். அதாவது, பங்குகளை வெளியிட்ட நிறுவனங்கள், விதிமுறைப்படி பங்குச் சந்தையில் தங்கள் பங்குகளைப் பதிவு செய்து, பட்டியலில் சேர்க்கச் செய்ய வேண்டும். பின்பே அப்பங்குகளின் பரிவர்த்தனை நடைபெறும். பங்குகளின் விலை, நிறுவனத்தின் தரத்திற்கும், சந்தையின் பல்வேறு காரணிகளைப் பொறுத்தும், சந்தையில் அப்பங்குகளுக்கான தேவையைப்  பொறுத்தும் மாறிக்கொண்டே இருக்கும் (volatile). பரிவர்த்தனை செய்ய விரும்புபவர், சந்தை நிலவரத்திற்கேற்ற விலையைக் கொடுத்து பங்குகளை வாங்கவோ, அல்லது விலையைப் பெற்றுக்கொண்டு விற்கவோ செய்வார்.

ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தின் பங்குகளை வைத்திருப்பவர் அந்நிறுவனத்தின் பங்குதாரர் எனப்படுவார். பங்குதாரருக்கு, நிறுவனத்தின் லாபத்தைப் பொறுத்து ஈவுத்தொகை/பங்காதாயம் (Dividend) கிடைக்கும். தேவையான பொழுது, தரகர்கள் மூலமாக, பங்குகளை விற்றுப் பணமாக்கிக் கொள்ளவும் செய்யலாம்.
அடுத்த வாரம் பங்குத்தரகர்கள் மற்றும் அவர்களிடம் நாம் இரண்டு வகையான கணக்குகளை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.நன்றி..!!

ஞாயிறு, 13 மார்ச், 2016

பங்குச் சந்தைக்கு போலாமா..!! (தொடர்ச்சி)



Image result for பங்கு சந்தை

அன்புடையீருக்கு வணக்கம்,

பொருளாதார வளர்ச்சி தேசத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.அதற்குச் சிறந்த பண மேலாண்மையும்,சரியான முதலீடும் நிச்சயமாக நாட்டின் பொருளாதாரத்தை நல்ல வளர்ச்சிக்குக் கொண்டு செல்லும்.அந்த வகையில் தான் வார வாரம் ஞாயிறு அன்று பங்குச் சந்தை குறித்த தகவல்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த  எளிமையான முறையில் பதிவுகளை பகிர்ந்து வருகிறேன்.தவறாமல் படியுங்கள்.எனக்கும் பங்குச் சந்தை பற்றி ஒன்றுமே தெரியாது அதைப் பற்றி இப்போது தான் சிறிது சிறிதாக கற்றுக் கொண்டு வருகிறேன்.எனக்கு தெரிந்ததை தங்களோடு பகிர்வதில் மகிழ்ச்சியாக உள்ளது நட்பூக்களே..!! 

கடந்த பதிவுகள்;

1.ஏன் தேவை பங்குச் சந்தையில் முதலீடு..??
2.பங்குச் சந்தை வர்த்தகம்.
3.பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்ச்சி.

கடந்த பதிவுகளை படிக்காதவர்களும் படிக்கலாம்.இன்று எல்லாமே வணிகமாக மாறிவிட்டது.அதைக் குறித்த விழிப்புணர்வு இல்லாமல் அனைவருமே ஏமாந்து வருகின்றோம்.சரி வாங்க பங்குச் சந்தைக்கு போகலாம்.

தனி நபர் நிறுவனம் (proprietorship concern) :

                   
ஒரே ஒருவர், தனது கைப்பணத்தை (அல்லது தான் கடன் வாங்கிய பணத்தைப்) போட்டு ஒரு நிறுவனத்தைத் துவங்கி, நடத்திவருகிறார் என்று கொள்வோம், அந்நிறுவனத்தின் லாபமோ நட்டமோ அவரை மட்டுமே சேர்ந்தது. அந்நிறுவனத்தின் முழுப்பொறுப்பும் அவரையே சாரும். இத்தகைய நிறுவனத்தை ' தனி நபர் நிறுவனம் ' (proprietorship concern) என்று அழைப்போம். அந்நிறுவனதாரர் 'உரிமையாளர்' (proprietor) என்று அழைக்கப்படுவார்.


கூட்டு நிறுவனம் (Partnership company) :

                       
ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் கூட்டுச் சேர்ந்து நடத்தும் ஸ்தாபனம், கூட்டு நிறுவனமாகும் (Partnership company). இதன் உரிமைதாரர்கள் கூட்டாளிகள்(partners) எனப்படுவர். லாபம், நட்டம் எதுவாயினும், சமமாகக் கூட்டாளிகளுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும். நிறுவன நடவடிக்கைகளுக்கு, அனைவரும் பொறுப்பாவார்கள். நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளால், ஏதேனும் கடன் ஏற்பட்டாலோ, நிறுவனம் திவாலானாலோ, கூட்டாளிகளின் தனிப்பட்ட முறையில் வைத்திருக்கும் சொத்தைக்கூட பறிமுதல் செய்ய, கடன் கொடுத்தவருக்கு உரிமை உண்டு.



வரையறுக்கப்பட்ட (பங்கு) நிறுவனம். (Limited Company) :

                       
மேற்கூறியவாறு ஒரு கூட்டு நிறுவனம் செயல் படும்பொழுது, தனிப்பட்ட முறையில் கூட்டாளிகள் அந்நிறுவனத்தின் கடன் சுமைக்குப் பொறுப்பாவார்கள் என்று கண்டோம். ஒரு நிறுவனம் விரிவாக்கப் படும்பொழுதோ, பெரிய அளவில் தொடங்கப்படும்பொழுதோ, இத்தகைய பொறுப்புக்களைத் தவிர்க்கவும், மற்றும் பல நிர்வாக வசதிகளுக்காகவும் வரையறுக்கப்பட்ட பங்கு நிறுவனங்கள் தொடங்கப் படுகின்றன. அதாவது கம்பெனியின் கடனுக்கு, பங்குதாரர்கள் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில், கம்பெனி என்பது ஒரு தனி நபராகக் (பங்குதாரர்களிடம் இருந்து வேறுபட்ட) கருதப்படுகிறது. இவற்றை மேலும் இரண்டு விதமாகப் பகுக்கலாம். அவையாவன:


தனியார் பங்கு நிறுவனம் (Private Limited Company) :

                   
அனேகமாக கூட்டு நிறுவனங்கள் விரிவு செய்யப்படும்பொழுது, இவ்வகையான தனியார் நிறுவனங்களாக  மாற்றப் படுகின்றன. இந்நிறுவனத்தின் பங்குதாரர்கள் அநேகமாக, நண்பர்களாகவோ, உறவினர்களாகவோதான் இருப்பர். பொதுமக்களுக்கு பங்குகளை வினியோகம் செய்வதிலிருந்து, தனியார் பங்கு நிறுவனங்கள் தடுக்கப் பட்டுள்ளன. எனினும், தமது முதலீட்டின் அளவு வரை மட்டுமே, பங்குதாரர்கள் கம்பெனியின், கடன்களுக்குப் பொறுப்புடையவர்கள் ஆவர்.
  • Image result for பங்கு சந்தை


பொதுப் பங்கு நிறுவனம் (Public Limited Company) :

                           
தனியார் பங்கு நிறுவனங்கள் காலப்போக்கில் மிகவும் விரிவாக்கம் பெறும்பொழுது அல்லது ஏற்கனவே சந்தையில் நன்மதிப்பைப் பெற்ற நிறுவனங்கள் ஒரு கிளை/புதிய கம்பெனி துவக்கும்பொழுது, பொதுப் பங்கு நிறுவனம் உருவாகிறது. இத்தகைய நிறுவனங்கள் பல சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு, தமது நிறுவனத்தின் பங்குகளைப் பொதுமக்களுக்கு விற்பனை செய்கின்றன. வேறு விதமாகச் சொல்ல வேண்டுமாயின், பொதுமக்கள் பங்குதாரர்களாக, மூலதனத்திற்கும், நிறுவனத்தின் லாப நட்டத்திற்கும் உரியவர்களாக உள்ள நிறுவனமே பொதுப்பங்கு நிறுவனம் ஆகும்..

அடுத்த வாரம் பங்குச் சந்தையின் வகைகள் பற்றி பார்க்கலாம்.தொடர்ந்து இணைந்திருங்கள்.நன்றிகள்..!!