சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 18 ஏப்ரல், 2017

ஆசிரியர்




பிலிப் என்கின்ற மன்னனுக்கு ஒரு ஆண்
குழந்தை பிறந்தது
ஊர்
மக்களை ஓன்று திரட்டி தனது உப்பரிகை மேல்
நின்று கொண்டு
தங்க
நாணயத்தை திரண்டு நின்று கொண்டு இருந்த
மக்கள் வீது அள்ளி வீசினான்
அங்கு நின்று கொண்டு இருந்த
கடைசி மனிதன் கையில் நாணயம் கிடைக்கும்
வரை
வீசி கொண்டே இருந்தான் அப்போது மக்கள்
எல்லாம் மகிழ்ச்சி பொங்க
மன்னனின்
குழந்தையை வாழ்த்துவது கண்டு மனம்
பூரித்தான்
மன்னனின் அமைச்சர் ஒருவர் சொன்னார்
மன்னர் ஆண் குழந்தை பிறந்த
சந்தோசத்தை மக்களிடம் தங்க காசு கொடுத்து
அதனை தெரிவித்து மகிழ்கிறார்
என்று சொன்னபோது
மன்னன் குறிக்கிட்டு சொன்னான்
இல்லை இல்லை எனக்கு ஆண்
மகவு பிறந்ததற்காக நான் தங்க
காசு கொடுக்கவில்லை
எனக்கு பாடம் நடத்தி என்னை புத்தி சாலியாக
ஆக்கிய ஆசிரியர் அரிஸ்டாட்டில்
இருக்கும்போது என் மகன் பிறந்து விட்டான்
அவர் என் மகனை மிக பெரும் அறிவாளியாக
இந்த உலகத்திற்கு உருவாக்கி தருவார் என்ற
சந்தோசத்தில் தான் இந்த பொற் காசுகளை
அள்ளி தூவுகிறேன் என்று சொல்லி மீண்டும்
அள்ளி தூவினான் அவன் சொன்னபடி
பிற்காலத்தில் மிக பெரும் அறிவாளியாக
உருவெடுத்தவந்தான் பிலிப் என்ற மன்னனின்
மகன் மாவீரன் அலெக்சாண்டர்
ஒரு சிறந்த ஆசிரியரால்
மட்டுமே ஒருவனை மிக சிறந்த ஒருவனாக
மாற்றமுடியும்
என அன்றே பிலிப் மன்னன் நம்பினான்
ஆசிரியர் அரிஸ்டாட்டிலும்அவன்
நம்பிக்கைக்கு பங்கம் விளைவிக்காமல்
அவன் நம்பிக்கையை காப்பாற்றினான்.
Always Teachers are Wondering in the world.

வியாழன், 6 ஏப்ரல், 2017

எடிசன் குறிப்பு

                           
  ஒரு நாள் பள்ளியிலிருந்து  வந்த தாமஸ் ஆல்வா எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே  கொடுக்க வேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான். அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தம் ஆக தன் மகன் கேட்கும்படி இப்படி படித்தாள்.
 “உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன் எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது” என்று பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகி விட்டார்.
  எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார். இப்படி இருக்கையில் ஒரு நாள் தனது வீட்டின் பழைய சமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பு  ஒரு முறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சை ஆக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்.
அதில் இப்படி எழுதியிருந்தது
     ”மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்ப வேண்டாம்.” என்று இதைப்படித்த எடிசன் கதறி அழுதார்” பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
      மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன்  தனது “தாயாலேயே” மாபெரும் கண்டுபிடிப்பாளனான். என்று தன் பிள்ளைகள்  மீதான “உயர்வான எண்ணங்கள்”. அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்.

எஸ்.பவித்ரா,

முதலாம் ஆண்டு கணினிப் பயன்பாட்டியல் துறை.  

முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல



நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல விவசாய விஞ்ஞானிகள்....

ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்..

விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால்
மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்...

சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும்.

தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது.

ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

அறிவியல் வளர்ந்து விட்டது எங்களால் எதையும் சாதிக்க முடியும்ன்னு சொல்லி மக்களை நோயாளியாக்கி அவன் உயிரை காப்பாற்ற அவனையே மிரட்டி காசு பறிப்பதுதான் உங்கள் உண்மையான அறிவியல் வளர்ச்சி.

ஆனால் இயற்கையை கடவுளாக பாவித்து வணங்கி இயற்கையோடு வாழும் மனிதன் உங்களுக்கு படிப்பறிவில்லாதவன்.

கற்றுக்கொள்ளுங்கள் இதுபோல் நம் பாட்டன்,பூட்டன் இன்னும் ஒளித்து வைத்துள்ளான் பல விஷயங்களை...!!!

உழைப்பின் உன்னதம்




ஓர் அழகான கதை. உழைப்பின் உன்னதத்தை உணர்த்துகின்ற கதை-

கடற்கரை ஓரமாக பெரிய மரம் ஒன்று வளர்ந்திருந்தது. அதன் கிளை ஒன்று மிக நீண்டு கடல் நீருக்கு மேலாக நீட்டிக் கொண்டிருந்தது. அதன் உச்சியில் கடற்குருவி ஒன்று கூடு கட்டியது. அதனுள் நாலைந்து முட்டைகளை இட்டு அடைகாத்து வந்தது. ஆண் குருவியும் பெண் குருவியும் அதே கூட்டில் வசித்தபடி தங்கள் குஞ்சுகள் வெளிவரும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தன.

ஒரு நாள் பெரும் காற்று வீசியது. பெரிய அலைகள் பொங்கி எழுந்தன. கிளையில் இருந்த கூடு நழுவி காற்றின் வேகத்தில் கடலில் விழுந்து மூழ்கியது. குருவிகள் மனம் பதறிக் கதறின. கடல் நீரில் விழுந்து கூடு மூழ்கிய இடத்திற்கு மேலாக கீச், கீச் என்று கத்தியபடியே சுற்றிச் சுற்றி வந்தன.

பெண் குருவி மனம் உடைந்து சொல்லியது. எப்படியாவது முட்டைகளை மீண்டும் நான் காண வேண்டும். இல்லையேல் நான் உயிர் வாழ மாட்டேன் என்றது .

ஆண் குருவி சொன்னது. அவசரப்படாதே ஒரு வழி இருக்கிறது. நமது கூடு கரையின் ஓரமாகத் தான் விழுந்துள்ளது. கூட்டுடன் சேர்ந்து முட்டைகள் விழுந்ததால் நிச்சயம் உடைந்திருக்காது. அதனால் இந்த கடலிலுள்ள தண்ணீரை வற்றவைத்து விட்டால் போதும். முட்டைகளை நாம் மீட்டுவிடலாம்.என்று பெண் குருவிக்கு தன்னம்பிக்கை ஊட்டியது .

கடலை எப்படி வற்றவைப்பது?

முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவர இன்னும் பல நாட்கள் ஆகலாம். எனவே நாம் இடைவிடாமல் சில நாட்கள் முயல வேண்டும். நம் வாயில் கொள்ளும் மட்டும் தண்ணீரை எடுத்துக் கொண்டு பறந்து சென்று தொலைவில் கொட்டுவோம். மறுபடியும் திரும்பி வந்து மீண்டும் நீரை நிரப்பிக் கொண்டு போய் தொலைவில் உமிழ்வோம். இப்படியே இடைவிடாமல் செய்து கடல் நீரை வேறு இடத்தில் ஊற்றினால் கடல் நீர் மட்டம் குறைந்து தரை தெரியும். நமது முட்டைகள் வெளிப்படும்.

இதையடுத்து இரண்டு குருவிகளும் தன்னம்பிக்கையுடன் ஊக்கத்துடன் செயலில் இறங்கின. விர்ரென்று பறந்து போய் தங்களது சிறிய அலகில் இரண்டு விழுங்கு நீரை நிரப்பிக் கொண்டன. பறந்து சென்று தொலைவில் போய் உமிழ்ந்தன. மீண்டும் பறந்து வந்து இரண்டு வாய் தண்ணீரை அள்ளின. கொண்டுபோய் தொலைவில் கக்கின.

இப்படியே இரவு பகல் நாள் முழுவதும் இடைவிடாமல் நடந்து கொண்டிருந்தது, இவற்றின் நீர் அகற்றும் படலம்.

அப்போது அந்தக் கடற்கரை ஓரமாக முனிவர் ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். மகா சக்திகள் நிறைந்த மகான் அவர். ஆளில்லாத அந்தப் பகுதியில் கீச் கீச் என்ற சப்தம் கேட்கவும் அவர் திரும்பிப் பார்த்தார். இரண்டு குருவிகள் பறந்து போவது கண்டு சிரித்தபடி மேலே நடந்தார்.

மீண்டும் கீச் கீச் என்ற சப்தம். குருவிகள் கடலுக்கு மேல் பறந்தன. எதையோ அள்ளின. மீண்டும் பறந்தன. இப்படி பலமுறை நடைபெறவும், முனிவருக்கு வியப்பு. கடலில் இருக்கும் எதைக் கொத்துகின்றன இவை? அங்கு இரை ஏதும் இல்லையே என்று நினைத்தார் அவர்.

உடனே அந்த மகான் கண்களை மூடினார். உள்ளுக்குள் அமிழ்ந்தார். மறுகணம் அவர் மனதில் எல்லா நிகழ்ச்சிகளும் படம்போல் ஓடின. அவர் மனம் உருகியது. முட்டைகளை இழந்த தாயின் தவிப்பும் கடலையே வற்ற வைத்தாவது முட்டைகளை மீட்க வேண்டும் என்ற அதன் துடிப்பும் அவரது உள்ளத்தை நெகிழச் செய்தன.

உடனே தனது தவ பலத்தை ஒன்று திரட்டிய முனிவர் கையை உயர்த்தினார். மறுகணம் கடல் சில அடிகள் பின் வாங்கியது. அங்கே கூட்டுடன் இருந்த முட்டைகள் தென்பட்டன. குருவிகள் அதைப் பார்த்து குதூகலத்துடன் கீச்சிட்டன. ஆளுக்கொன்றாக முட்டைகளை பற்றிக் கொண்டு போய் வேறிடத்தில் சேர்த்தன.

நான் அப்போதே சொன்னேன் பார்த்தாயா? நமது ஒரு நாள் உழைப்பில் கடல் நீரை குறைத்து முட்டைகளை மீட்டு விட்டோம் பார்த்தாயா? என்றது ஆண் குருவி பெருமிதமாக.

முனிவர் சிரித்தபடி தொடர்ந்து நடந்தார். இங்கே குருவிகள் முட்டைகளை மீட்டது அவற்றின் உழைப்பாலா? இல்லை. முனிவரின் அருளால். ஆனால் அந்தக் குருவிகளுக்கு முனிவர் என்ற ஒருவரைப் பற்றியோ தவ வலிமை என்றால் என்ன என்பது பற்றியோ, எதுவுமே தெரியாது.ஆனால் தன்னம்பிக்கையுடன் கடல் நீரை அள்ளின .

அதே சமயம் குருவிகள் மட்டுமே கடல் நீரை மொண்டு சென்று ஊற்றிக் கொண்டிருக்காவிட்டால் முனிவர் தம் வழியே போயிருப்பார்.
அவரை மனம் நெகிழ வைத்தது எது? அவற்றின் உழைப்பும் முயற்சியும்தான். ஆக இங்கே முட்டைகள் மீட்கப்பட்டது, குருவிகளாலும் தான். முனிவராலும் தான். முனிவரின் ஆற்றல் அவற்றுக்குப் பக்க பலமாக வந்து சேர்ந்தது. குருவிகளின் உழைப்புத்தான் அதற்கு அடிப்படையாக அமைந்தது.

அன்பு நண்பர்களே .

எல்லையில்லா ஆற்றல் பெற்றவர்களே இளமைப் பருவம் வாழ்வின் இன்றியமையாப் பருவம்.
பருவத்தே பயிர் செய் என்பார்களே. இளமையில் வியர்வை சிந்தாவிட்டால் முதுமையில் கண்ணீர் சிந்த வேண்டி இருக்கும்.

எனவே விழித்திருக்கும் நேரமெல்லாம் உழைத்துக் கொண்டிருங்கள். வாழ்வில் எல்லா நேரமும் நல்ல நேரம்தான். உழைக்காத நேரம்தான் ராகு காலம். திட்டமிடுங்கள். ஒவ்வொன்றையும் திட்டமிட்டு உழைத்திடுங்கள் .

இந்த கதை பாலகுமாரன் அய்யாவின் கடலோர குருவிகள் நாவல் புத்தகத்தில் படித்தவை .

பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன்





பூமியை விழுங்கி விடும் ஆவேசத்துடன் ஆக்ரோஷமாய் தனது அனகோண்டா நாக்குகளை நீட்டியது மழை. பெருமழை என்பதையும் பேய்மழை என்பதையும் வாசித்துப் பழகிய சென்னை வாசிகளுக்கு நேரில் பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் வாய்த்தது. அது பேரச்சம் கலந்த வாய்ப்பு.

நிமிடம் தோறும் ஒரு இஞ்ச், அரையடி என உயர்ந்த தண்ணீர் சாலைகளை விழுங்கி ஏப்பம் விட்டு, வீட்டு வாசல்படிகளில் அழையா விருந்தாளியாய் நுழையத் துவங்கியது. நதிகள் தங்கள் கழுத்துவரை நீர் வளையங்களை ஏற்கனவே மாட்டியிருந்ததால் துளிகளுக்கே அது தளும்பத் துவங்கியது.

நதிகளிடம் அனுமதிவாங்காமல் மனிதர்கள் காங்கிரீட் மரங்களை நட்டிருந்தார்கள். தண்ணீர், மனிதர்களிடம் அனுமதி வாங்காமல் நதிகளின் பாதையை உருவாக்கிக் கொண்டன. எங்கும் தண்ணீர். எங்கும் பதட்டம். சென்னையில் மழை பெய்யவில்லை என்பதே நீண்டநாள் கவலையாய் இருந்தது. ஏன் கடவுள் மழையை சென்னைக்கு அனுப்பவில்லை என்பது இப்போது தான் புரிகிறது.

மழை பல பாடங்களையும் கற்றுத் தந்தது. மனிதாபிமானத்தின் கதவுகளை அறைந்து சாத்தியிருந்த வீடுகள் கூரைகளையும் சேர்த்தே திறந்தன. தங்கள் பெயருக்குப் பின்னாலும், முன்னாலும் பட்டங்களையும், பதக்கங்களையும் குத்தி வைத்திருந்த மக்கள் கழுத்துவரை தண்ணீரில், சாக்கடைகளை உதாசீனப்படுத்தி நடந்தனர்.

போர்ட்டிகோவில் முழங்காலளவு நீரில் தெரு நதியை வேடிக்கை பார்த்தபடி வாசலில் நின்றிருந்த என்னிடம் ஒருவர் வந்து இரண்டு பால் பாக்கெட்களை நீட்டினார். "உடனே காய்ச்சிடுங்க... இல்லேன்னா கெட்டுடும்" என்றார். யாரது.. நம்மைத் தேடி வந்து பால் பாக்கெட் தருவது ? பால் பாக்கெட் கிடைக்காமல் ஊரே நெட்டோட்டம் ஓடும் இந்த நேரத்தில் என மனதில் குழப்ப ரேகைகள்.

'... நீங்க ?...'  என இழுத்தேன்.

பக்கத்து வீடு தான். மாடில குடியிருக்கேன். என்றார். என் வீட்டை ஒட்டியபடி இருந்தது அந்த வீடு. நாலடி இடைவெளியில் இருந்தது வீட்டுச் சுவர். கூனிக் குறுகினேன்.

'நன்றி.. என்ன பண்றீங்க.. ' என முதன் முறையாக விசாரித்தேன். கால்களுக்குக் கீழே கிடந்த ஈரம் இதயங்களிடையே பரவியது.

மின்சாரம் செத்துப் போய் இரண்டு நாளாகியிருந்தது. நான்கு நாட்கள் அது உயிர்த்தெழவேயில்லை. வீட்டுக்குள் ஒற்றை மெழுகுவர்த்தியைச் சுற்றியமர்ந்து குழந்தைகளுடனும், மனைவியுடனும், வீட்டிலுள்ளவர்களுடனும் கதைபேசிய கணங்களில் உணர்ந்தேன் வெளிச்சம் எவ்வளவு தூரம் எங்கள் உறவுகளுக்குள் இருட்டை விரித்திருக்கிறது என்பதை. இருட்டு எங்களுக்கிடையே வெளிச்சத்தை அதிகரித்திருந்தது.

சுற்றியிருந்து கதைபேசி, விளையாடி, சாப்பிட்டு செலவிட்ட நான்கு நாட்கள் கால்நூற்றாண்டுகளுக்கு முன் நான் வாழ்ந்த வாழ்க்கைக்குள் என்னை இட்டுச் சென்றது. அம்மாவும், அப்பாவும், சகோதர சகோதரிகளும், எங்கள் கிராமத்துத் திண்ணையும் மனதுக்குள் இதமாய் வந்திறங்கியது.

வெளிச்சம் வீட்டில் மூலைகளுக்குள் மனிதர்களைத் துரத்தும். இருட்டோ, ஒற்றைப் புள்ளியில் எல்லோரையும் இணைக்கும் எனும் உண்மையை நான் உணரும் வாய்ப்பாய் அது அமைந்தது.

தொலைக்காட்சி அமைதியாய் மூலையில் கிடந்தது. லேப்டாப்கள் மரத் துண்டுகளைப் போல வீட்டில் மூலைகளில் கிடந்தன. வரிக்குதிரை போல கம்பீரமாய் நிற்கும் செல்போன் சிக்னல், வட்டத்திற்குள் விட்டம் வரைந்து வெறுமனே கிடந்தது. கைப்பிடிக்குள் இருந்த உலகம் சட்டென கைவிட்டுப் பறந்த ஒரு பட்டாம் பூச்சியைப் போல பறந்து மறைந்தது.

மீண்டும் ஒரு முறை தகவல் தொடர்புகள் இன்லென்ட் லெட்டர்களின் முதுகில் பயணித்த காலத்தில் பயணித்த அனுபவம். செல்போன்களும், வாட்ஸப்களும், மின்னஞ்சல்களும் இல்லாத நான்கு நாட்கள் வாசிக்கவும், நேசிக்கவும், எழுதவும் கிடைத்தவை குடும்ப உறவுகள் மட்டுமே. பாசமிகு மனங்கள் மட்டுமே.

புள்ளி வைத்து வட்டம் வரைந்த ஸ்மைலிகளல்ல வாழ்க்கை, இதழில் விரியும் புன்னகை என்பதை புரிந்து கொள்ள இறைவன் அனுப்பிய வரப்பிரசாதமே பெருமழை.

அவசரமாய் ஓடிப் பழகிய கால்கள் ஓய்வெடுத்தன. நேரமில்லை என புலம்பிய மனது அடிக்கடி சொன்னது, "அட அஞ்சு மணி தான் ஆச்சா.. வாங்க கதை சொல்லி விளையாடலாம்...".

நேரம் எப்போதும் நம்மிடம் இருக்கிறது. அதை டிஜிடல் ஸ்ட்ராக்கள் உறுஞ்சிக் கொள்கின்றன என்பது புரிய வைத்த நிகழ்வாய் அது இருந்தது.

ஐந்து நாட்களுக்குப் பின் மீண்டும் மின்சாரம் வீட்டுக்குள் நுழைந்தபோது ஏதோ விரோதி வீட்டுக்குள் நுழைந்தது போல முதன் முறையாய் உணர்ந்தேன். மனைவி சொன்னார்,

"கரண்ட் இல்லாம இருந்ததே நல்லா இருந்துச்சு...".

பிள்ளைகள் சொன்னார்கள், "என்ன டாடி.. நெட்வர்க் வந்துச்சா... போச்சு.. இனிமே லேப்டாப்பைத் தூக்கிடுவீங்க..."

அது மழையல்ல,

பிழைகளைப் புரியவைத்த இறைவனின் இழை !

இந்த ஒரு பதிவை மட்டும் எழுதிவிட்டு லேப்டாப்பை ஒதுக்கி வைப்பதென முடிவு செய்து விட்டேன்.

காதல்...

                                                                           
         

டேய்   கிஷோர்  !   உமா ,சங்கவி   ரெண்டு   பேர்ல   யாருக்கு  ஓ.கே  சொல்லப்போற    எனக்கு   குழப்பமா   இருக்குடா !”  என்றான்   மணி.
“ரெண்டு   பேருமே   என்னை   காதலிக்கறாங்கா… உமா   நல்லவ   ஆனா   நடுத்தர   குடும்பத்த சேர்ந்தவ   சங்கவி   ரொம்ப    வசதி   அதனால   நான்    சங்கவிக்கே   ஓ.கே   சொல்லப் போறன்.”என்றான்   கிஷோர்.
இவருக்கு    கல்யாணம்    நடந்து    கிஷோர்    வீட்டோடு     மாப்பிள்ளையானான்   6  மாதங்களுக்குப்    பிறகு ,
கிஷோரும் ,மணியும்   சந்திக்கிறார்கள்  
என்னடா   கிஷோர்     எப்படியிருக்க  ?சங்கவி   எப்படி   இருக்கா  ?என்றான்    மணி  ஆவலாக
“என்  வாழ்க்கையே    நாசம்மா     போச்சுடா” என்று  கூறினான்    கிஷோர்.
“என்னடா   ஆச்சு   ஏன்    அழற    டேய்   கிஷோர்…”  என்று    பதறினான்.
“அவளக்  கல்யாணம்    பண்ணினது   உண்மைதான்டா    ஆனா   அவ  என்னை    மதிக்கவேயில்லை  ,  ஏன்   கேட்க   ஆரமிச்சேன்   இப்ப   விவாகரத்துல    வந்து   முடிஞ்சிருச்சி”   என்று     அழுதான்   கிஷோர்.
ஏன்டா   பணம்   ,வசதி   அவளக்   கல்யாணம்     பண்ணி   நீ   நாசமாப்   போயிட்ட   ஆனால்       உனக்குத்    தெரியுமா?   கிஷோர்    உன்னைக்   காதலிச்சாளே      உமா ,   நடுத்தரக்   குடும்பம்னு   நீ      ஒதுக்கனவ     இன்னைக்கு     அவ  பெற்றோர்     சொன்ன     மாப்பிள்ளையை     கட்டிக்  கிட்டு    நிம்மதியா     வாயறா.   இதுக்    கெல்லாம்       காரணம் ,    உன்னோட      பேராசைதாண்டான்னு      சொல்லிட்டு    சென்று விட்டான்       மணி.
கிஷோருக்கு      எல்லாம்     புரிந்தது,  ஆனால்   காலம்    கடந்துவிட்டது.   என்பது      தாமதமாத்தான்       தெரியவந்தது.


மகள்[ன்]

                                                                             

           கடசியா   என்ன   முடிவெடுத்துருக்கிங்க ?    என்றார்    பஞ்சாயத்துத்    தலைவர் .
            ஆளுக்கொரு    மூளையில்      அமர்த்திருக்க    வண்ணாத்தா    நடு    முற்றத்தில்  அழுது     கொண்டிருந்தாள். 
           இதைப்   பாருங்க     பிள்ளைகளா,      மூத்தவனுக்கு    இந்த  வீடும்    வயக்காடும் ,  இரண்டாவது  மகனுக்கு   தோட்டத்தில    இருக்க   வீடும்     தோப்பும்     மூனாவது   மகனுக்கு      ரைஸ்   மில்லும்       பக்கத்தில      இருக்க   மாடி  வீடும்        கடைசிய       இருக்கறது     உங்காத்தா     மட்டுந்தான்     கடைசி    காலத்தில    யார்    பாத்துக்கப்    போறீங்க.
            இதுவரைக்கும்      அதுவேணும்    இதுவேணும்    இருந்த   பயளுங்க      இப்ப   ஊமை    மாதிரி      பேசாம    இருந்தானுங்க.
             வண்ணாத்தாவுக்கு    செத்து   போலாம்     போலத்   தோணுது    அப்போ    ஒரு   ஆட்டோ    வந்து   நிக்குது      அதுவ  இருந்து      வரவங்களப்   பாத்து   அந்த   வீடே    அதிர்ச்சில    பேய்   பாப்த்த      மாறி    நிக்கராங்க.
           மருமவகாரிகளுக்கெல்லாம்       சொத்துல    பங்கு    கேட்டு      வராங்ளோன்னு    பயம்.
         எனக்கு   என்னோட    அம்மா    மட்டும்    போதும்னு   வண்ணாத்தாக்கைய    புடிச்சி    கூட்டிட்டு    போறாங்க        வண்டில    வந்தவங்க  
          தான்     பெத்த    பையன்       திருநங்கைனு      தெரிஞ்சதும்     வீட்ட  விட்டு   துரத்தினதையும்       இன்னைக்கு   அவனே   தன்னை    காப்பதறதையும்     நினைச்சி  கண்ணீர்    சிந்தினாள்    அத்தாய். 





                                                                                                         

ஊசி

                                   
                         
            “ஏங்க   பிள்ளைக்கு   ரொம்ப  உடம்பு  சரியில்லை  நான்  மருத்தவமனைக்கு  கூட்டிட்டு  போறேன்”  என்று தன் கணவரிடம்   சொல்லிவிட்டு  மூன்று  வயதான  மெளோடு  மருத்துவமனைக்குச்  சென்றாள்.
            பாப்பா   உன்  பேர் என்ன?  என்று  அக்குழந்தையிடம்   கேட்டார் டாக்டர்.
            “பூமிதா”  என்றாள்  குழந்தை 
            “பாப்பாவுக்கு   என்ன  பிடிக்கும் “
            “சாக்லேட், கேக், ஐஸ்கீரீம்  எல்லாம்  பிடிக்கும்.
            `’சாதராண  காய்ச்சல்  தான்  , ஊசி  போட்டா  சரியாயிடும்  கவலைப்படாதீங்க  “ எனெறு  மேகலாவிடம்  கூறினார்  டாக்டர்.
            “அம்மா… அம்மா  ஊசி  வேணாம்மா”.
            “ஒண்ணுமில்லா  பூமிதா வலிக்காது  என்றாள்  மேகலா.
            “நர்ஸ் பாத்து  போடுங்க  குழந்தைக்கு  வலிக்காத  மாதிரி…”
            அழுது கொண்டே  ஐயோ…அம்மா  வலிக்குதுன்னு  டாக்டரை  முறைத்தாள்  பூமிதா.
            டாக்டர்  தன்  நலத்திற்காக தான்  செய்கிறார்  என்பதை  அறியாமல்   அவர்  புதுசா  வாங்கின  கார்  சாவியை  எடுத்து  கொண்டுபோய்  தன்  வீட்டருகில்  உள்ள  கிணற்றில்  போட்டு விட்டாள்   அக்கழந்தை இதையறியாத  டாக்டர்  திணறி  கொண்டிருந்தார்.  தன்  மனைவி கூறிய  சொற்பொழிவை  கேட்டபடி .

            தேர்வு   நன்றாக  எழுதினாயா? என்று  கேட்டு  கொண்டே.   

பிச்சைக்காரன்

                                       


            டேய்     கோவிந்தா  என்ன   கோலம்டா    இது ?    என்ற   பதறினார்  ராமன், கோவிலுக்குள்   போகும்போது   தெரியவில்லை  , வந்த   பொழுதுதான் கவனித்தார்   அங்கு   பிச்சையெடுப்பவர்களில்   தன்னுடைய   ஆருயிர் நண்பனும்   இருக்கிறானென்னு.
            வாடா   வீட்டுக்கு   என்று   கூப்பிட்டார்   ராமன்   .ஆனால்    ,ராமன், கோவிந்தன் வர   மறுத்து   விட்டார்   எனவே   அவரை   வற்புறுத்தி   தன்   வீட்டுக்கு அழைத்துச்   சென்றார்.
            சுமதி ,  இது   என்னோட   நண்பன்    கோவிந்தன்.  இனி   இவர் நம்முடன்தான்   தங்குவார்    என்றுத்  தன்   மருமகளிடம்   கூறினார்   ராமன்  அப்பொழுது   அவள்  ஒன்றும்   கூறாமல்   உள்ளே   சென்றுவிட்டாள்.
மாலை;
            சேகரிடம்   ,ஏங்க   உங்கம்மா   இறந்தப்பவே   உங்கப்பாவை   முதியோர்     இல்லத்தில்   சேர்த்து   விட்டுருக்கனும்   ,போனாப்  போவுது விட்டா   இப்ப   போற   வரவுங்கள   எல்லாம்   கூட்டிட்டு   வந்து   நிக்கறாரே இதுக்கு   மேல   பொறுக்க    முடியாது  உங்கப்பாவை   முதல்ல   எங்கவாது கொண்டு   போய்   விட்டுவிட்டு   வாங்க   , என்று   பொறிந்து   தள்ளினாள் சுமதி.

            இதக்   கேட்ட   ராமனிடம்   கோவிந்தன்  கூறினான்  டேய்   ராமா , இப்ப  இதே   நிலைமையில்    தான்டா   நானும்    இருந்தேன்   ,என்   மருமவ  கையில  சோறு    வாங்கி    சாப்பறதுக்கு    கோயில்    உட்கார்ந்து    பிச்சையெடுத்து  புண்ணியத்தைத்    தேடிக்கிலாம்    என்று    நிறுத்தி   நிறுத்தி    கூறினார்.  இதனுடைய    மறுமொழி   ராமனுடைய   கண்ணிராகவே   வெளிவந்தது .

நண்பன்


                  

                      
யாரோ  கதவு  தட்டப்படும்  ஓசை  கேட்டு நித்திரையிலிருந்து கண் விழித்தார் ராஜ்.
            யார்  நீங்க? என்றார் கண்ணை  கசக்கிக் கொண்டே.
            டேய் ராஜ் !  நான் திவாகர்  சின்ன  வயசுல  ஒன்னா படிச்சோமே ஞாபகமில்லையா ? என்றார் .அந்த நபர்         
            ஓ!திவாகர் எப்படி இருக்க பார்த்து ரொம்ப வருஷமாச்சே, ஆமா  ஏன் இந்த ராத்திரி நேரத்தில்  ,என்னைத்  தேடி வந்திருக்க என்ன விஷயம்? என்று ஆச்சிரியத்துடன்  வினவினார்.
            ஒன்னுமில்லை ஒரு அவசர விசயமா இந்தப் பக்கம் வந்தேன் அப்படியே உன்னைப் பாக்கணும்னு தோணுச்சி அதான் வந்துட்டேன் உங்கட்ட ஒரு உண்மைய சொல்லணும் என்னன்னா, சின்ன வயசுல நீ காதலிச்சியே ஒரு பொண்ணு யமுனா ,அவ யாரையோ காதலிக்கலடா .என்னை தான் காதலிச்சா .உன் மேல பிரியத்தினால , நீ கஷ்டபடுவேன்னு நான் இதை உங்கட்ட சொல்ல இப்ப அவ என் மனைவிடா தப்பா நினைக்காதன்னு  சொல்லிட்டு விறுவிறுவென நடந்து சென்று விட்டார் . தன் நண்பன் அதிர்ந்து நின்றதைக் கூடக் கவனிக்காமல்.
            மறுபடியும் தூங்கப்போனபோது தூக்கமே பிடிக்காமல் சோபாவில் வந்தமர்ந்து  தொலைக்காட்சியைப் பார்த்து கொண்டிருந்தார் திடீரென பதறியடித்து எழுந்து நின்றார்,அந்த ஏ.சிக் குளிரிளும் அவர் மகத்தில் வியர்வைத்துளிகள் மின்னத் தொடங்கின.
            அந்த தொலைக்காட்சியில் ஒரு பெண் இன்று இரவு 10.30 மணிக்கு காரில் சென்றுகொண்டிருந்த போது ஏற்பட்ட வபத்திளால் திவாகர் என்னும் நபர் உயிரிழந்தார் என்று உருக்கமாக வாசித்துக் கொண்டிருந்தாள். திவாகர் தன்னை  சந்தித்தது இரவு 11.00 என்பதை எண்ணிப் பார்த்த போது ராஜ்க்கு மூச்சே நின்றுவிடுவது போல தோன்றியது.

              

            

கல்வி

               

                                           
            கல்வி அமைச்சர் கண்ணனைப் பார்த்து நிருபர் ஒரு கேள்வி கேட்டார் .
            ”மதிப்பிற்குரிய கல்வி அமைச்சர் அவர்களே ! பெண்கள் கல்வி கற்க என்ன முயற்சிகள் நீங்க எடுத்திருக்கீங்க, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க? “ என்றார்..
            “பெண்கள் இந்த நாட்டின் கண்கள் , அவர்களே இந்த நாட்டின் செல்வங்கள் … அவர்களுக்குக் கல்வி என்பது மிக முக்கியமான ஒரு அரண் கல்வியை கட்டாயம் அவர்களுக்குத் தரப் பட வேண்டும். மேடைப்பேச்சு ஒரு மாதிரியும் வீட்டில் ஒரு மாதிரியும் நடப்பவனல்ல நான் பெண் கல்விக்காக உயிரையும் கொடுப்பவன் . என்று கூறினார்.அதைக் கேட்ட பெண்களின் கோஷம் விண்ணைத் தாண்டியது.
மாலை;
            அப்பா! நீங்க மனம் மாறுவீங்கன்னு நான் நினைச்சு கூட பார்க்கவில்லை ரொம்ப நன்றிப்பா இனி நான் சந்தோஷமா கல்லூரிக்குப் போவேன் என்று கூறினாள் ராணி உவகையுடன் .
            ஆமா யாரு உன்ன கல்லூரிக்கு போகச் சொன்னது ?
            அப்பா நீங்க தான இன்னைக்கு அந்த நிருபர்கிட்ட அப்படி சொன்னீங்க என்றாள் கலக்கத்துடன்
            அது நிருபர்களுக்காக,மக்களை ஏமாத்தரத்துக்காக…
            அப்ப பெண்கல்விக்காக உயிரையும் கொடுப்பதாக சொன்னது…
            அதுவும் பொய்தான்நீங்க ஏல்லாம் படிச்சி எண்ணத்த பண்ணப் போறீங்க பேசாமல்  பெத்தவங்கள பாக்கற பையன கட்டிட்டு ஒழுக்கமா வாழுங்க.
இரவு;
            சார் , நீங்க சொன்னது உண்மைதான், இனி தாமதிக்க வேணாம் நான் மறைவா எடுத்த காணொலியை நாளைக்கு உங்க சேனலுக்கு தரேன் அதைப்போட்டுபெண்களைக் காப்பாற்றுங்கள் என்று தன் மகள் நிருபரிடம்  பேசிக் கொண்டிருக்க நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார் . கல்வியமைச்சர்.

            

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பொறுமை


           


நான் படித்ததில் என் மனம் கவர்ந்த ஒரு குட்டி கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.
அந்த கதை;
      அது ஒரு இனிய காலைப்பொழுது. மனைவி தன் கணவருக்கும் மகனுக்கும் உணவு பரிமாறுகிறார். மகன் வேலைக்குச் செல்ல தாமதமாகிவிட்டதால் வேகமாக உணவு எடுத்துக் கொண்டு இருக்கிறார். அப்பொழுது வெளியில் ஒரு சிட்டுக் குருவி இறை தேடிக் கொண்டு இருக்கிறது. அப்பா அந்தக் குருவியை சுட்டிக் காட்டி ’இதன் பெயர் என்ன என்று?’ கேட்கிறார். அதற்கு மகன் சிட்டுக் குருவி’ என்று பதில் அளிக்கிறார். சிறிது நேரத்துக்குப் பிறகு தந்தை மீண்டும் மகனிடம் அந்தப் பறவையை சுட்டிக் காட்டி ‘இதற்கு பெயர் என்னவென்று?’ கேட்கிறார். சற்று பொறுமையை இழந்த மகன் ‘சிட்டுக் குருவி’ என்று கோபமாக கூறினார். மீண்டும் தந்தை அவ்வாறு கேட்க கோபமடைந்த மகன் ‘அம்மா! அப்பாவுக்கு வேலையே இல்லையா? கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்கிறார்.’ அம்மா நீங்களாவது அப்பாவிற்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று கூறிவிட்டு வேலைக்குச் சென்றான்.
          அவன் சென்ற பின்பு கணவன் தன் மனைவியிடம் கூறினார் ‘இது போலத் தான் அவன் சிறு வயதில் கேட்டபொழுது நான் பொறுமையை இழக்காமல் பதிலளித்தேன்.’ ஆனால் இந்த காலத்து இளைஞர்களிடம் பொறுமை என்பதே இல்லை என்று கூறினார்.
            இந்தக் கதை என் மனம் கவரக் காரணம் இதில் சொல்லப்பட்ட கருத்தே. எனவே பொறுமையுடன் செயல் பட்டால் எதையும் வெல்ல முடியும்.
















ஞாயிறு, 26 பிப்ரவரி, 2017

திருக்குறள் கதை


                      
                                                 

குறள் :

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்.

குறள் விளக்கம் : 

வரப்போவதை முன்னே அறிந்து காத்துக் கொள்ளவல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

குறளுக்கான கதை :

சுவாமிநாதன் அந்த கிராமத்தில் பண்டிதர். அவர் சிறந்த அறிவு கொண்டிருந்ததோடு, அன்பும் அடக்கமும் மிகுந்தவராக விளங்கினார். ஏழைக் குழந்தைகளுக்காக இலவச பாடசாலை ஒன்றை அமைத்து கல்வி போதித்து வந்தார். மக்கள் பண்டிதரின் மீது நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

கண்ணப்பன் என்ற செல்வந்தனும், அதே கிராமத்தில் வசித்து வந்தான். முரடனாகிய கண்ணப்பன் மீது கிராம மக்களுக்கு மதிப்போ, மரியாதையோ இல்லை. செல்வந்தனாக இருந்தும் தனக்கு கிடைக்காத மதிப்பும், மரியாதையும் பண்டிதருக்கு கிடைக்கிறதே? என்று கண்ணப்பன் பண்டிதரின் மீது பொறாமை கொண்டான்.

பண்டிதரை எங்கு கண்டாலும், கண்ணப்பன் வம்புக்கு இழுப்பான். அவமானப்படுத்த நினைப்பான்.

ஒருநாள் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்த பின் பண்டிதர் சுவாமிநாதன் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது கண்ணப்பன் தன் தோட்டத்திலிருந்து பறித்த பூசணிக்காயோடு வந்து கொண்டிருந்தான். கண்ணப்பனுடன் அவனது இரு தோழர்களும் வந்தனர்.

கண்ணப்பனையும், அவனது தோழர்களையும் கண்ட பண்டிதர் ஒதுங்கி நடந்தார்.

ஆனால் அவர்களோ, என்ன, பண்டிதரே பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறீர்களா? என்று வழியை மறித்தபடி கேட்டு வம்பிழுத்தனர்.

ஆமாம் கண்ணப்பா. நான் சீக்கிரம் வீட்டுக்குப் போக வேண்டும் வழியை விடு என்றபடி பண்டிதர் விலகி நடக்கத் தொடங்கினார். நீங்கள் பெரிய அறிவாளி என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியானால் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் விட்டுவிடுகிறோம். இந்தக் கேள்விக்கு மட்டும் நீங்கள் சரியாகப் பதில் சொல்லிவிட்டால் உங்கள் வழிக்கே நான் வரமாட்டேன் என்று வீம்பாகப் பேசினான்.

சரி, உன் கேள்வி என்னவென்று கேளு கண்ணப்பா! எனக்கு நேரமாகிறது என்றார் பண்டிதர்.

என் கையிலுள்ள இந்த பூசணிக்காயின் எடை எவ்வளவு? நீங்கள் சொல்லும் எடை சரியாக இருக்கிறதா? என்று நாங்கள் நிறுத்திப் பார்ப்போம். சரியாக சொல்லாவிட்டால் நீங்கள் முட்டாள் என்று ஒத்துக் கொள்ள வேண்டும் என்று திமிராகப் பேசினான் கண்ணப்பன்.

பண்டிதர் ஒரு கணம் யோசித்தார். கண்ணப்பா இந்த பூசணிக்காய் உன் தலையின் எடைதான் இருக்கிறது. வேண்டுமானால் நிறுத்துப் பார்த்துக்கொள் என்று பதில் சொன்னார் பண்டிதர்.

இதை கேட்ட கண்ணப்பனும், அவனது கூட்டாளிகளும் அதிர்ந்து போனார்கள்.

அட பண்டிதர் நம்மை மடக்கிவிட்டாரே? பு+சணிக்காயின் எடையை சரி பார்க்க நம் தலையை கொய்தால் அல்லவா முடியும். தலையை கொய்ய முடியுமா? பூசணியை எடைபோட முடியுமா? என்று திகைத்த கண்ணப்பன், தன் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு ஓடியே போனான். அதன்பின் அவன் பண்டிதரிடம் வம்பு செய்வதே இல்லை! 

வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

உணர்வுகள்...!!!


Image result for smiley face

                      
          அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சுஹாசினி மகேந்திரன். நான் வலைப்பதிவில் எழுதும் முதல் கட்டுரை இது தான். உணர்வுகள் என்ற தலைப்பு சற்று வித்தியாசமானது தான்.
                        உணர்வுகள் உள்ளவர்கள் மனிதர்கள், அந்த உணர்வுகளை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள் மாமனிதர்கள். எல்லா உணர்வுகளையும் சரி சமமாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை என்பதே இல்லை.
                        இதற்கு ஒரு உதாரணம் கூற ஆசைப்படுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த தருணம் அது. அவரைக் காணச் சென்ற சுவாமி விவேகானந்தர் தன் குருவிடம் சில கேள்விகளைக் கேட்கிறார்.
                        அதில் முதலாவது. மக்கள், கடவுள் எனக்கு மட்டும் ஏன் துன்பத்தைத் தருகிறார்? என்று துன்பம் வரும் வேளையில் கவலை கொள்கிறார்களே அது ஏன்? என்று கேட்க, அப்போது ராமகிருஷ்ணர் சொல்கிறார், மக்கள் தனக்கு இன்பம் வரும் போது கடவுள் ஏன் எனக்கு மட்டும் இன்பம் தருகிறார் என்று வினவுவதில்லை. ஆனால் துன்பம் வரும் வேளையில் மட்டும் அக்கேள்வியை எழுப்புகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எந்த உணர்வையும் சரிசமமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதே.
             மேலும் அவர் கூறியதாவது, தங்கம் நெருப்பில் பட்டு உருகும் போது அது மிளிர ஆரம்பிக்கும். அது போலத் தான் மனிதனும் துன்பங்களை அடையும் போது தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.
             துன்பம் வரும் வேளையில் இதுவும் கடந்து போகும் என்று மனதில் கொள்வதே சிறந்தது.