அனைவருக்கும் வணக்கம். என் பெயர் சுஹாசினி மகேந்திரன். நான் வலைப்பதிவில் எழுதும் முதல் கட்டுரை இது தான். ’உணர்வுகள்’ என்ற தலைப்பு சற்று வித்தியாசமானது தான்.
உணர்வுகள் உள்ளவர்கள் மனிதர்கள், அந்த உணர்வுகளை அடக்கி ஆளத் தெரிந்தவர்கள் மாமனிதர்கள். எல்லா உணர்வுகளையும் சரி சமமாக எடுத்துக் கொண்டால் பிரச்சனை என்பதே இல்லை.
இதற்கு ஒரு உதாரணம் கூற ஆசைப்படுகிறேன். ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்த தருணம் அது. அவரைக் காணச் சென்ற சுவாமி விவேகானந்தர் தன் குருவிடம் சில கேள்விகளைக் கேட்கிறார்.
அதில் முதலாவது. மக்கள், ’கடவுள் எனக்கு மட்டும் ஏன் துன்பத்தைத் தருகிறார்?’ என்று துன்பம் வரும் வேளையில் கவலை கொள்கிறார்களே ’அது ஏன்?’ என்று கேட்க, அப்போது ராமகிருஷ்ணர் சொல்கிறார், மக்கள் தனக்கு இன்பம் வரும் போது கடவுள் ஏன் எனக்கு மட்டும் இன்பம் தருகிறார் என்று வினவுவதில்லை. ஆனால் துன்பம் வரும் வேளையில் மட்டும் அக்கேள்வியை எழுப்புகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் எந்த உணர்வையும் சரிசமமாக எடுத்துக் கொள்வதில்லை என்பதே.
மேலும் அவர் கூறியதாவது, ‘தங்கம் நெருப்பில் பட்டு உருகும் போது அது மிளிர ஆரம்பிக்கும்’. அது போலத் தான் மனிதனும் துன்பங்களை அடையும் போது தான் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைவான்.
’துன்பம் வரும் வேளையில் இதுவும் கடந்து போகும்’ என்று மனதில் கொள்வதே சிறந்தது.
தங்களது தமிழ் எழுத்துகளை அன்போடு வரவேற்கிறேன் சுஹாசினி.தொடர்ந்து எழுதுங்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள்.
தங்கள் வரவேற்பிற்கு நன்றி அக்கா.
நீக்குஅருமை. கதை நன்று.
பதிலளிநீக்குதமிழ் வலையுலகத்துக்கு தங்கள் சிந்தனைகளை வரவேற்கிறேன்.
தங்கள் கருத்துக்கு நன்றி ஐயா. இது போன்று மேன்மேலும் நல்ல படைப்புகளை படைப்பேன்.
பதிலளிநீக்கு