நம் நாட்டில் தியானத்திற்கு என்று பல பயிற்சி வகுப்புகள் நடந்து வருகின்றன. தியானம் பற்றி ரமண மகரிஷி கூறிய கருத்து மிகவும் எளிமையான
ஒன்று.
அவரைக் காண வந்த ஒரு பெண், ரிஷி அவர்களே!!
என் குழந்தைக்கு ”தியானம் பற்றி எளிமையாக கூறுங்கள்” என்று கேட்டார். அந்த குழந்தையை
அழைத்த ரிஷி, குழந்தை கையில் ஒரு தோசையைக் கொடுத்து சில விதிமுறைகளைக் கூறினார். அது
என்னவென்றால் நான் “ம்ம்” என்று சொல்லும் போது நீ தோசையை சாப்பிட வேண்டும். அடுத்த
முறை நான் “ம்ம்” என்று சொல்வதற்குள் நீ தோசையை சாப்பிட்டு முடித்து விட வேண்டும் என்றார்.
மகரிஷி “ம்ம்” என்று கூறினார், குழந்தை தோசையை சாப்பிட ஆரம்பித்தது. குழந்தை, அவர் எப்போது
“ம்ம்” என்று சொல்லுவார் என்று எதிர்பார்த்துக் கொண்டே தோசையை வேகமாக சாப்பிட்டது.
மகரிஷி சிறிது நேரம் சென்ற பின் “ம்ம்” என்று சொன்னார். அதற்குள் குழந்தை தோசையை. முழுமையாக
சாப்பிட்டு முடித்தது. அப்போது மகரிஷி குழந்தையிடம், “இதன் மூலம் நீ என்ன அறிந்தாய்?” என்று கேட்டார். அப்போது அக்குழந்தை சொன்னது, நீங்கள் எப்போது “ம்ம்” என்று சொல்வீர்கள், அதற்குள் தோசையை சாப்பிட்டு விட வேண்டும் என்று எண்ணிக் கொண்டே இருந்தேன் என்றது. அப்போது
மகரிஷி கூறினார், ”கவனத்தை நீ செய்த காரியத்தில் ஒரு முகமாக செலுத்தினாய் அல்லவா அது
தான் தியானம்”. நாம் செய்யும் காரியத்தில் முழு கவனத்துடன் இருப்பதே “தியானம்”.
நம்மில் பலருக்கும் கவனக் குறைவு இருப்பது உண்மைதான்.பயனுள்ள பதிவு சுஹாசினி.
பதிலளிநீக்குஆம் அக்கா நீங்கள் கூறிய கருத்து உண்மை தான். நாள்தோறும் நாம் நாளிதழ்களில் படிக்கும் சாலை விபத்து செய்திகளுக்கு கவனமின்மையும் ஒரு காரணம்.
பதிலளிநீக்கு