ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

வரலாற்றில் இன்று...

சத்ரபதி சிவாஜி

⚔ வீரமிக்க மாமன்னன் சத்ரபதி சிவாஜி 1627ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் நாள் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்திலுள்ள சிவநேரி கோட்டை என்ற இடத்தில் பிறந்தார்.

⚔ தென்னிந்திய வரலாற்றில் பொற்காலம் என கருதப்படும் இவருடைய ஆட்சிக் காலத்தில், சிறப்பான நிர்வாகக் கட்டமைப்பினையும், வலுவான படை அமைப்பினையும் கொண்டு சிறந்த ஆட்சியாளராகவும் விளங்கினார்.

⚔ வீரத்தையும், போர்த்திறமையையும், கலையுணர்வையும் இன்றளவும் பறைசாற்றிக் கொண்டிருக்கும் சத்ரபதி சிவாஜி 53வது வயதில் (1680) மறைந்தார்.

உ.வே.சாமிநாத ஐயர்

✍ தமிழ் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் 1855ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி கும்பகோணத்துக்கு அருகே உத்தமதானபுரம் என்ற சிற்று}ரில் பிறந்தார்.

✍ பழந்தமிழ் ஏடுகள் பழையனவாக இருந்ததால் அவற்றைப் புதுப்பிக்க வேண்டும் என்று பல இடர்களை எதிர்கொண்டு, அழிந்து மறைந்து போகும் நிலையில் இருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடித் தேடி அச்சிட்டு, பதிப்பித்தார்.

✍ இதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் உலகறியச் செய்தார். அவற்றை அழிவிலிருந்து காத்ததோடு அடுத்தடுத்து வரும் தலைமுறையினருக்கும் தமிழின் பெருமையை உணர்த்தியுள்ளார்.

✍ தமிழ் இலக்கியத்துக்காக இறுதிவரை பணியாற்றிய இவர் 87-ஆம் வயதில் (1942) மறைந்தார்.


கோபர்நிகஸ்

👉 உலகப் புகழ்பெற்ற முன்னோடி வானியலாளர் நிகோலஸ் கோபர்நிகஸ் 1473ஆம் ஆண்டு பிப்ரவரி 19ஆம் தேதி போலந்து நாட்டின் தோர்ன் நகரில் பிறந்தார். இவர் இயற்பெயர் மைகொலாஜ் கோபர்நிக். பல்கலைக்கழகத்தில் படித்தபோது, நிகோலஸ் கோபர்நிகஸ் என்று மாற்றிக்கொண்டார்.

👉 எந்த தொலைநோக்கி கருவியும் இல்லாமலேயே இவரது ஆராய்ச்சிகள் நடைபெற்றன. வானியல் குறித்து அதுவரை ஏற்றுக் கொள்ளப்பட்டு வந்த புவி மையக் கோட்பாட்டை மறுத்து, சு+ரிய மையக் கோட்பாட்டை வகுத்தார். கோள்களின் பின்னோக்கிய நகர்வு, அவற்றின் ஒளி வேறுபாடுகள் ஆகியவற்றையும் விளக்கினார். விண்மீன்கள் அமைந்துள்ள இடங்களை வரையறுத்துக் கூறினார்.

👉 இவரது காலத்துக்குப் பிறகே இவரது கோட்பாடுகளை கலிலியோ உள்ளிட்ட பிரபல வானியலாளர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆன் தி ரெவல்யு+ஷன் ஆஃப் தி ஹெவன்லி ஸ்பியர்ஸ் என்ற நு}லில் தனது ஆய்வுகள் குறித்து எழுதியுள்ளார். இதில் பு+மி தனது அச்சில் சுழல்கிறது என்பதையும் பு+மியை சந்திரன் சுற்றி வருகிறது என்றும் துல்லியமாக குறிப்பிட்டிருந்தார்.

👉 வானியல் ஆய்வாளராக மட்டுமல்லாமல், சட்ட நிபுணர், மருத்துவர், பழங்கலை அறிஞர், மதகுரு, ஆளுநர், அரசுத் தூதர் என பல துறைகளில் சிறந்து விளங்கிய நிகோலஸ் கோபர்நிகஸ் 70-வது வயதில் (1543) மறைந்தார்.


9 கருத்துகள்:

 1. நிறைய பேர் இந்த பதிவ்களை வந்து படிக்கிறார்களா என்று எனக்கு தெரியாது ஆனால் ஒன்றுமட்டும் சொல்வேன் இது போல பல பதிவுகளை தொடர்ந்து எழுதிவாருங்கள் இப்படி சொல்ல காரணம் இது போன்ற தகவல்களை தேடி வருபவர்களுக்கு இந்த தளம் பொக்கிஷமாக இருக்கும். ஆங்கிலம் படிக்க தெரியாதவர்களும் இன்னும் உண்டு அவர்கள் இணையம் வந்து தேடும் போது பல தகவல்கள் கிடைக்காமல் ஏமாந்து போக வாய்ப்புக்கள் உண்டு அதனால் இந்த மாதிரியான பதிவுகள் அவர்களுக்கு சந்தோஷம் தரும் தொடர்ந்து எழுதுங்கள் எழுத எழுத உங்கள் சிந்தனை வளரும் திறமை உயரும் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா.

   நீக்கு
  2. அருமையான தகவல்கள்; இதுபோன்று ஆக்கபூர்வமாக அறிவுபூர்வமாக உணர்வுபூர்வமாக எழுதுபவர்கள் எண்ணிக்கையில் குறைவு.

   உப்புக்கல்லைவிட முத்துக்கள் எண்ணிக்கையில் குறைவுதான்.

   முத்தாய் மிளிரும் உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும் துலங்கட்டும்.

   வாழ்த்துக்களுடன்

   கோ

   நீக்கு
  3. தங்களது ஊக்குவிக்கும் மறுமொழிக்கு நன்றிகள் ஐயா.

   நீக்கு
 3. வரலாற்றில் வரலாறாகவே வாழ்ந்த வரலாற்று நாயகர்களை பற்றிய தகவல்கள் அருமை...
  https://www.scientificjudgment.com/

  பதிலளிநீக்கு