செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

ஒன்றா, பலவா பிறப்புக்கள்?


Image result for karuppaiyil ulla kuzhanthai

 பொதுவாக இயற்கையின் நிகழ்வுகளில் ஒரே ஒரு முறை மட்டும் நடக்கக்கூடிய நிகழ்வு என்று எதுவும் இல்லை. எல்லா நிகழ்வுகளும், அனைத்திலும் திரும்பத் திரும்ப நடக்கக் கூடியவைகள் ஆகும். ஒரு முறை மழையாக பூமியில் விழுந்த நீரானது மீண்டும் பல முறை மழையாக பூமியை வந்தடையக் கூடிய ஒன்றாகும். பிறப்பு மட்டும் ஏன் ஒரு தடவையோடு நின்று விடவேண்டும்!

 ஒரு ஆத்மா என்பது ஒரு ஜீவன் ஆகும். அந்த ஆத்மாவிற்கு உடல்கள் மாறி மாறி அமைவது, அதற்கு புதுப்புது அனுபவங்களை கற்று தருவற்கு தான். ஒருவன் பள்ளிக்கு ஒரு நாள் சென்றால் அனைத்தும் கற்றுவிட முடியாது, திரும்பத் திரும்ப சென்றால் தான் கற்றுக்கொள்ள முடியும்.

 ஆத்மாவானது பரிபூரணத் தன்மை அடையும் வரையில் பிறந்துகொண்டே இருக்கும் என்பது இயற்கையின் பேரமைப்பாகிறது.

 ஒரு பிறப்புதான் உண்டு என்பது ஆத்மாவுக்குத் துவக்கமும் முடிவும் உண்டு. மனிதனுக்கு ஒரே ஜென்மத்தைக் கொடுத்து விட்டுப் பிறகு அவனுடைய பாவபுண்ணியத்துக்கு ஏற்பக் கடவுள் அவனை நரகத்திலோ, சொர்க்கத்திலோ நிரந்தரமாக வைத்து விடுகிறார் என்பதும் பொருந்தாது.

 ஒரு ஜென்மம் என்கிற குறுகிய காலத்தில் செய்த குற்றத்துக்கு முடிவில்லாத நரகவேதனை என்ற தண்டனையைக் கருணையுடையவன் விதிக்கமாட்டான். மானுட ஆட்சியிலேயே அத்தகைய கொடுமையில்லை. குற்றத்துக்கேற்ற தண்டனையும் நல்ல மானுட ஆட்சி முறையானது அளிக்கிறது.

 மறுபிறப்பு என்ற புதிய சந்தர்ப்பத்தைக் கடவுள் கொடுக்காவிட்டால் அவன் கொடியவன் என்ற குற்றத்துக்கு ஆளாவான். பேரறிவும், பேரளுமுடைய கடவுள் அப்படி ஒரு ஜென்மத்தை மட்டும் கொடுத்து மனிதனுடைய முன்னேற்றத்தைத் தடைப்படுத்த மாட்டார். பூரணமாய் ஆராய்ந்து பார்த்தால் ஜீவர்களுக்குப் பல பிறவிகள் உண்டு என்னும் கேட்பாடுதான் யுக்திக்கும் அனுபவத்துக்கும் பொருந்தும்.

5 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. தங்களின் பாராட்டிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் ஐயா.....

   நீக்கு
  2. தங்களின் பாராட்டிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள் அக்கா.....

   நீக்கு
 2. பயனுள்ள பதிவு சரண்யா. தொடர்ந்து இது போன்ற பதிவுகளை எழுதுங்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு