முதல் பெண் மருத்துவர்
[ஆனந்திபாய் ஜோஷி (1865 -1887)]
இந்தியாவில் முதல் பெண் மருத்துவர்
என்ற பெருமையைப் பெற்றவர் ஆனந்தி பாய் ஜோஷி.
ஐரோப்பிய மருத்துவத்தில் முதன்முதலாக பட்டம் பெற்ற இரு இந்தியப்பெண்களில் ஒருவர் ஆனந்தி பாய் ஜோஷி, மற்றொருவர் கடம்பினி கங்கூல .
முதல்
பெண் மருத்துவரான ஆனந்தி பாய் ஜோஷியின் வாழ்க்கை வரலாறு குறுத்த தகவல்கள் காண்போம்.
மராட்டிய
மாநிலத்தில் பூனாவில் பிராமணக்குடும்பத்தில் 31.0.1865-ம்
ஆண்டு பிறந்தார் யமுனா. ஆனந்தி பாய் ஜோஷியாக
புகழ்பெற்றவருக்கு
பெற்றோர்
முதலில் சூட்டிய பெயர் யமுனா, இவருக்கு
9 வயதாக இருந்தபோது இவரைவிட 20 வயது மூத்தவரான கோபால் ஜோஷி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் அஞ்சல் துறையில் குமாஸ்தாவாக
பணிபுருந்தார். முற்போக்கு வாதியான கோபால் ஜோஷி தனது மனைவியின் பெயரை ஆனந்தி என்று
மாற்றினார். மேலும் தன் மனைவியை கல்வி கற்கும் படியும் ஆர்வமூட்டினார். இதைத் தொடர்ந்து
ஆனந்தி ஆங்கிலம் மற்றும் பிறகல்வியையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டார். 14 வயதாக இருந்த போது ஆனந்தி ஆண் குழந்தை ஒன்றை பெற்றார். அக்குழந்தை போதிய
மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் 10 நாட்களில் மரணம் அடைந்துவிட்டார்.
மேலும் அப்போது ஆனந்திக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
அந்தக்காலத்தில் மருத்துவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர், அதிலும் பெண் மருத்துவர்கள்
என்று யாருமே இல்லை.
எனவே மருத்துவம் படித்து தான் ஒரு சிறந்த மருத்துவராக
வேண்டும் என்று ஆனந்தி விரும்பினார் . இதற்கு
அவரது கணவரும் ஆதரவு அளித்தார். ஆனால் அந்தக்காலத்தில் குடும்பக்கட்டுப்பாடு , சழூக
கட்டுப்பாடுகள் நிறைய இருத்தன. பெண்கள் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகமாக இல்லாமல் இருந்த்து
. அது போன்ற நிலையில் ஒரு பெண் வெளிநாடு சென்று மருத்துவம் படிப்பது என்பது மிகவும்
சவாலான காரியமாக இருந்தது.
இருப்பினும் கணவரின் உதவியுடன் அத்தனை தடைகளையும்
அவர் தாண்டினார். ஆனந்தியின் மருத்துவக்கல்வி ஆர்வத்திற்கு உதவ அமெரிக்க குடும்பம்
ஒன்று உதவி செய்தது. இதையடுத்து 1883-ம் ஆண்டு
ஆனந்தி தனியாக அமெரிக்க சென்றார்.
கொல்கத்தாவில் இருந்து நியூயார்க் நகருக்கு கப்பலில் சென்றார். பின்னர் பென்சில்வேனியாவில்
உள்ள பெண்கள் மருத்துவகல்லுரியில் சேர்ந்தார். ஆனந்திபாய் மருத்துவக்கல்லுரியில் சேர்ந்த
போது அவருக்கு வயது 19. அமெரிக்காவின் கடுங்குளிரும், பழக்கமில்லாத உணவு வகைகளும் அவரது
உடல்நலத்தை மிகவும் பாதித்தன. காச நோய் அவரைத் தாக்கியது. இதுபோன்ற பல்வேறு தடைகளையும்,
துன்பங்களையும் நாண்டி அவர் 1886-ம் ஆண்டு
மருத்துவ பட்டம் பெற்றார். அப்போது அவருக்கு விக்டோரியா ராணு வாழ்த்துச்செய்தி
அனுப்பி கவுரவித்தார்.
1886
இறுதியில் ஆனந்திபாய் இந்தியா திரும்பினார். கோலாப்பூர் சமஸ்தானத்தில் உள்ள மருத்துவமனையில்
பெண்கள் மருத்துவப்பிரிவில் பொறுப்பு மருத்துவராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது உடல்
நிலை நாளுக்கு நாள் மோசமானது. அவரைத்தாக்கிய காச நோய் முற்றியதால் “1887-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ந் தேதி மரணம்
அடைந்தார். மரணம் அடைந்த போது ஆனந்தியின் வயது 22 தான். மரணப்படுக்கையில் இருந்த போது ‘என்னால் முடிந்த அளவு நான் செய்துவிட்டேன்
‘ என்று ஆனந்தி கடைசியாக கூறினார்.”
2-ம் ஆண்டு வணிகவியல் கணினிப்பயன்பாடுத் துறை
வைதேகி.து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக