சனி, 25 பிப்ரவரி, 2017

நாலடியார்


      
                  
முன்னுரை:

          பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளுக்கு அடுத்ததாக  நாலடியார். இந்நூலுக்கு ‘ வேளாண் வேதம் ‘ என்ற பெயரும் உண்டு. இந்நூலில் உள்ள பாடல்கள் பல்வேறு ஆசிரியர்களால் பாடப்பட்டது. கல்வி பற்றி நாலடியார் கூறும் கருத்துக்களைக் காண்போம்.

கல்வி அழகே சிறந்தது:

               நன்கு சீவப் பட்ட கூந்தல் அழகும், முந்தானைக் கரையழகும், மஞ்சள் பயன்படுத்துவதால் வரும் அழகும் அழகல்ல. மனதில் நல்ல நெறியுடன் நடக்கின்ற நடுவுநிலைமையை உண்டாகும் கல்வி அழகே சிறந்தது.

அறியாமையைப் போக்கும் மருந்து:

                கல்வி இன்பத்தை பயக்கும், பிறருக்கு எடுத்துச் சொல்லும் போது பெருகும், நம் புகழை எடுத்துச் சொல்லும், சாகும் வரை கல்வியால் சிறப்பு உண்டு. மூவுலகத்திலும் அறியாமையைப் போக்க கூடிய ஒரே மருந்து கல்வி மட்டுமே.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                புன்செய் நிலத்தில் விளைந்த உப்பை நன்செய் நிலத்தில் விளைந்த உப்பினைவிட பெரியதாக கருதுவர். தாழ்ந்த குலத்தில் பிறந்தவர் ஆயினும் கல்வி கற்றோரை உயர் குடியில் பிறந்தவராகவே கருதுவர்.


கல்வியின் சிறப்பு:

             கல்வியை யாராலும் களவாட முடியாது. பிறருக்கு வழங்குவதால் நன்மை மட்டுமே உண்டாகும். மன்னர் சினம் கொண்டு போர் புரிந்தாலும் கல்விச் செல்வத்தை மட்டும் கைப்பற்ற இயலாது. எனவே, ஒருவன் தமக்குப் பிறகு தம்முடைய அடுத்த தலைமுறைக்கு எஞ்சிய பொருளாக சேர்த்து வைக்க வேண்டியது கல்விச் செல்வம் மட்டுமே. பிற செல்வங்கள் அல்ல.

கல்வி கற்கும் முறை:

               கல்விக்கு கரை இல்லை, ஆனால் அதைக் கற்போருக்கோ சிறிய ஆயுட்காலம். அந்த குறுகிய காலத்திலும் அவர்களுக்கு பல பிணிகள் உண்டாகின்றன. அன்னப் பறவை பாலில் கலந்திருக்கும் நீரைத் தவிர்த்து எவ்வாறு பாலை மட்டும் அருந்துகிறதோ அது போல கல்வியை ஆராய்து தெளிவாக கற்க வேண்டும்.

கல்வி கற்றோரின் சிறப்பு:

                    தோணி இயக்குபவனை தாழ்ந்த குலத்தார் என்று இகழ்வர். ஆனால் அவனையே துணையாய் கொண்டு ஆற்றைக் கடப்பர். அதுபோல நால் கற்ற துணையால் நல்ல பயன்களை அடையலாம்.

தேவலோகத்தை விட சிறந்தது:

                  தேவலோகமே சிறந்தது என்ற கருத்துடையவர், குற்ற மற்ற நூல்களைக் கற்று நல்ல கேள்வித் தன்மையை உடைய சான்றோருடன் உரையாட வேண்டும். அவ்வாறு உரையாடிய பின்பு அவர் மனதில் கற்றோர் சபையை விட தேவலோகமே சிறந்தது என்ற கருத்து உண்டானால் அவர் தேவலோகம் செல்லலாம்.    

கற்றவரோடு நட்பு கொள்ளுதல்:

                 கல்லாதவரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவைமிக்க அடிப்பகுதியை விட்டு நுனிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும். கற்றலரோடு ஒருவன் கொள்ளும் நட்பு கரும்பின் சுவை மிக்க அடிப் பகுதியை உண்பதற்கு ஒப்பாகும்.

கற்றாரோடு கொண்ட நட்பின் தன்மை:

               தண்ணீரில் உள்ள பாதிரிப் பூ எவ்வாறு அத்தண்ணீருக்கும் தன் மணத்தைத் தருகிறதோ கற்றவரோடு கல்வி அறிவு இல்லாத ஒருவன் கொள்ளும் நட்பு அவனுக்கு நாளும் நன்மையைத் தேடித் தரும்.

அறிவு சார்ந்த நால்களைக் கற்க வேண்டும்:

            மிகுதியான நூல்களைக் கற்று அறிவு சார்ந்த நால்களைக் கல்லாதவனுக்கு அதனால் பயன் ஒன்றும் இல்லை.

முடிவுரை:

          நாலடியார் மூலம் கல்வியின் சிறப்பையும், கற்றவரோடு கொள்ளும் நட்பின் தன்மையையும் அறியலாம். கல்வியின் பயன் அதன் வழி ஒழுகுவதால் மட்டுமே அடைய முடியும்.

1 கருத்து: