கவிதை ஐஸ்வர்யா சரவணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை ஐஸ்வர்யா சரவணன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 6 நவம்பர், 2019

அன்பர்கள் இல்லம்

ஆதரவற்றோருக்கு அன்பு இல்லம்
வாழ்க்கையை தானாக வாழக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்கும் இல்லம், உறவினர்கள் அனைவரையும் எதிர்பார்த்தும் ஏற்படுத்தியும் மனவலிமையை வலுவாக்கும் வல்லமை கொண்ட இருப்பிடமே அன்பர்கள் இல்லம், வாழ்க்கையே ஒரு போராட்டமாய் அப்போராட்டத்தில் படைவீரர்களாக தடைகளை அறுத்தெறியும் இவர்களே நமக்கு உண்மையான ஆசான்,வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுப்பதற்கு.

செவ்வாய், 26 பிப்ரவரி, 2019

என் கடினமான பாதை

என்னை சிதைத்த வாழ்க்கையை விட சிந்திக்க செய்த வாழ்க்கை
கடுமையாக இருந்தது, ஏன்
இந்த தவறினை இளைத்தேன் என்று
மணித்துளிகள் அனைத்தும் சிந்தனையில் கடந்தது, கடந்த பாதைகள் கடுமையாக இருப்பினும்
கற்றுக்கொடுத்த போதனைகள்
கசப்பாக இருப்பினும், தற்போதைய நிலைக்கு என்னை வலிமை படுத்தி இருக்கிறது, போதனைகளும் தற்போதைய நிலைக்கு கசப்பாக தெரியவில்லை.......

வியாழன், 31 ஜனவரி, 2019

வாய்ப்புக்கள்

உன்னைத் தேடி வரும் வாய்ப்புகளை
விட நீயே ஏற்படுத்திக் கொள்ளும்
வாய்ப்பே நிரந்தரமானது, அதன்
வெற்றியும் உனக்கே உரிமையானது
முயன்ற வரை ஓடு, உன் வெற்றிக்கான முயற்சி பாதையை நோக்கி......