தன்னாட்சியை இழந்த நமக்கு
தமிழர் என்ற பெயர் எதற்கு ?
தமிழர் தமது குல தொழில்களை பரம்பரை ,பரம்பரையாக செய்து கொண்டு அவரவர் பழக்க ,வழக்கங்களை பின்வரும் சந்ததியருக்கு கற்பித்து வாழ்ந்து வந்தனர் .எவரும் ஒருவருக்கொருவர் சாலைப்பிள்ளை என்று தன்னாட்சியாக நின்று உழைத்தனர் .அவரவர் கடமைகளை கருத்தோடு செய்வதுமட்டுமின்றி, திறமைகளை வளர்த்துக்கொள்வதிலும் ஆர்வம் கொண்டனர். அனால், இன்றோ விவசாயின் மகன்! பர்கர்,பீசாவை கேட்கிறான்!
சோற்றையும், சேற்றையும் வெறுக்கிறான்.பட்டினம் தேடி பட்டினி கிடக்கின்ற இந்நிலைக்கு நாம் தலைப்படவில்லை நாமே துள்ளிக் குதித்துவிட்டோம்.
தமிழர் வலிமையிலும்,திறமையிலும் பிறரை பார்த்து போட்ட காலம் போய் வாகனங்களையும்,வசதிகளையும் பார்த்தும் பேராசைக் கொள்கின்றனர்.
நெல்லின் இடுப்பொடியாமல் நுட்பமாக சேற்றில் ஊன்றிய காலம் போய் இன்று தொழிலநுட்பம் என்ற பெயரில் நம் இடுப்பெலும்பு ஊனற்று போக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
இயற்கையினை பாதுகாக்க ஊரோடு இணைந்து செய்யப்பட்ட நாம், இன்றளவில் இல்லறத்தையே விட்டு விலகி இல்லம் சேரா அனாதைகளாய் வாழ்கிறோம்.
ஏழைகளின் முகத்தில் இறைவனை காண சொன்ன காலங்கள் மாறி இப்போதெல்லாம் ,இறைவனே ஏழைகளை தன்னை தரிசிக்க கட்டணமின்றி அனுமதிப்பதில்லை.
ஐந்து முதல் எட்டு நபர்கள் வரை பயணிக்கும் மாட்டுவண்டி ஏற்படுத்தாத காற்று மாசுபாட்டை இன்று தனி ஒருவரின் இருசக்கர வாகனம் ஏற்படுத்துகிறது.
தானாய் விளைந்த புல்லிற்கு பதிலாய் பால்,தயிர்,நெய் மற்றும் உரமாக சாணம் என எண்ணற்ற இயற்கை பொருட்களை தந்த மாடுகளை விட்டுவிட்டு.
காற்றை மாசுபடுத்தும் இயந்திர வாகனத்திற்கு செலவு செய்து வருகிறோம் .
அழிந்து வருவது மாடுகளின் இனம் அல்ல!
மனுடனின் மானம்!
எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பிறருக்கு உதவிய கரங்கள், இன்று யாசிக்கின்ற நிலைமைதான் ஏனோ?
சுய தொழில் செய்வதை விட்டு!
சுக வாழ்வு கேட்ட தமிழன் !
இன்றைக்கு தன சுயமரியாதையை விட்டு சுயநலத்திற்காக வாழ்ந்து வருகின்றார்.சுக துக்கங்களை விட்டு சுற்றத்தோடு இன்பமாய் வாழ்ந்த தமிழன். இன்று சுதந்திரம் இழந்து தனது குடும்பத்துடனும் எவ்வித இணைப்பும் இன்றி பிறரின் கட்டளைகளுக்கு செவிசாய்த்து தன்னை தானே தாழ்த்தி வருகிறான்.
ஒற்றை பிடி சோற்றில் பங்கு போட்ட தமிழர்,ஒன்றாக கூடிய காட்சியை தான் நம் இன்று காணாமல் விடுகிறோம்.
தமிழன் எளிமையான வாழ்க்கை வாழ்ந்த போதிலும் கூட தன்னாட்சியாக வாழ்ந்தான்। தன் வீட்டிற்கு தானே ராஜாவாக இருந்தான்.தன் தொழிலுக்கும் முதல்வனாய்,தனக்கு வேண்டிய பொருளை தானே தேடி, தன்னம்பிக்கையை கைவிடாதும் இருந்தான்.
முயற்சிகளுக்கு இடைவிடாது செயல்பட்டான் முயன்றதில் கிடைத்ததை மூலதனமாய் கொண்டான். முயற்சி பல மேலும் செய்து முதன்மை நிலையை தானாய் வென்று இருந்தான்.
தன்னாட்சியாய்! தனித்துவமாய் !
தனிமனிதனாய்! தமிழனாய்!
இன்றோ தன்னாட்சியை இழந்து தமது பெயரில் மட்டும் தமிழர் என்பதனை வைத்து வருகின்றனர்। நம் கொள்கையை பின்பற்றா நமக்கு தமிழன் என்ற பெயர் எதற்கு ?