புதன், 4 மார்ச், 2020


                           தமிழும்   தமிழரும்

                               உடலும், உயிருமாய் விளங்கிய தமிழ்மொழியும், தமிழரும் இன்றியமையா  புகழப்படைத்து இவ்வையத்தையே வியப்பில் ஆழ்த்தினர். உடலுக்கு உடையை வைத்தது போல் தமிழுக்கு வைத்தான் சங்க தமிழன்.
             ஆனால், இன்று உயிரான தன் மொழியின் பயன்பாட்டினை குறைப்பதனாலும், தன் தாய்மொழி கல்வியை வெறுப்பதனாலும் உயிரற்ற நடைபிணமாய் வாழ்கிறான் இன்றைய தமிழன்.
              தமிழ்பாடி நாடெல்லாம் திரிந்த அன்றைய தமிழுக்கு அமிர்தமாய் இருந்த நம் தாய்மொழி, இன்று வின்வெளிக்கு செல்லும் அளவிற்கு வளர்ச்சி பெற்று உயர்ந்து நிற்கும் நம் நாட்டு மக்களுக்கு நம் தாய்மொழி விதமாய் தோன்றுகிறது.
              முன்னேற்ற பாதையில் செல்வதை எண்ணி நாம் அனைவருமே நமக்கு சொந்தமான நாட்டை அந்நியனுக்கு கொடுத்துவிட்டு, நிபந்தனைகளை ஏற்று செயல்பட்டு வருகின்றோம்.
              தன்னுடைய தாய்மொழியை மதிக்காத இடத்தில் நின்று பொன், பொருள் தேடி நிற்பது தாயை விட்டு பிறரிடம் யாசிப்பதற்கு சமம்.வளம் மிகுந்த நாட்டின், செல்வங்கள் நிறைந்த நாட்டின் பிள்ளைகளாகிய நாம் மட்டும் யாசிக்கவில்லை.
               அத்துணை வளமும், பலமும் கொண்ட நம் தாய்திருநாட்டின் தரத்தினையும் குறைத்து வருகிறோம்.
                எத்துணை பெரிய துன்பத்திலும், நம் நாட்டை அந்நியரிடம் இருந்து காப்பாற்றி சுதந்திரம் பெற்ற அன்றைய தமிழன் தமிழ் மொழியை தன் உயிராய் ஏற்று, தமிழ்மொழியின் உடலாக செயல்பட்டான்.
                  தமிழ்மொழியின் வளர்ச்சிக்காக பாடுபட்டான்
பண்டையத் தமிழன்!
              கல்வி, தொழில், அறிவியல், வணிகம்,அரசியல் என நாட்டின் அத்தனை செயல்பாடுகளும் என்று நம் தாய்மொழியில் நடக்கின்றதோ அன்று தான் நம் நாடு முழுமையான சுதந்தர நாடாக தோன்றும்.
                   பிற மொழியை கற்பது தவறல்ல! தம் தாய்மொழியையும் பிறர் கற்கும் அளவிற்கு பரவச் செய்பவனே உண்மையான தமிழன்!
                    அன்றைய காலகட்டத்தில் தமிழன், தாய்மொழியில் நுணுக்கமாக பெற்ற அறிவும், ஆளுமையும் இன்னும் அத்துணை அண்டை மொழிகளை கற்றாலும் அதற்கு ஈடாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக