ஒரு அழகிய கிராமம்.அங்கு வாழும் ஒரு ஏழை விவசாயின் உண்மை கதை அது.அவருக்கு இரு அழகிய பெண் குழந்தைகள் உள்ளார்கள்.அதில் முதல் குழந்தையின் பெயர் இசை,இரண்டாவது குழந்தையின் பெயர் தமிழ்.இருவரும் வளர்ந்து பள்ளி படிப்பை முடித்து கல்லூரி வாழ்க்கையை ஆரம்பிக்கிறார்கள்.
இசை படிப்பில் சிறந்தவள்.ஆனால் தமிழ் படிப்பை தவிர மற்ற அனைத்து கலையிலும் சிறந்தவள்.இருவரையும் படிக்க வைக்க அவர்களின் தந்தை மிகவும் கஷ்டப்படுகிறார்.ஆனால் தமிழ் கஷ்டத்தை புரிந்து கொள்ளாமல் அவள் விருப்பத்திற்கு ஏற்றார் போல வாழ விரும்புகிறாள். அவள் தந்தை சிறுவயதில் இருந்தே மிகவும் கஷ்டப்பட்டவர்.இன்னும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்.ஆனால் அவள் எதையும் புரிந்து கொள்ளவில்லை.இந்த நவீன உலகில் படிப்பு என்பது மிகவும் முக்கியம் என்பதை அவர்களின் உறவினர்கள் அறிந்து கொள்ளாமல்,இருவரையும் படிப்பை நிறுத்தி விட்டு வேளைக்கு அனுப்புமாறு கூறினார்கள். இசை அமைதியானவள்,அன்பானவள்.அவளை தான் அவள் தந்தை மிகவும் நம்பினார்.ஆனால் அவளோ அவரின் நம்பிக்கையை முழுவதுமாக உடைத்து விட்டாள்.அவள் தந்தையாள் இதை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ள துணிந்து விட்டார். அந்த அளவிற்கு அவள் ஒரு காரியத்தை செய்து விட்டாள்.தமிழை கூட அவர் அந்த அளவிற்கு நம்பவில்லை.இசை செய்த காரியத்தால் முழுவதுமாக பாதிக்கப்பட்டது தமிழ் தான்.இனி தமிழின் வாழ்க்கை...? நாம் ஒரு செயலை செய்யும் போது அது நம்மை சுற்றி உள்ளவர்களை பாதிக்கும்மா இல்லையா என்று யோதித்து செயல்பட வேண்டும்.இல்லையெனில் அது பெரிய விளைவை ஏற்படுத்தி விடும்.