வெள்ளி, 27 அக்டோபர், 2017

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களே..வணிக நோக்கில் கல்வியா.?
கல்வியை வைத்து வணிகமா.?
அறிவை பெறுபவர்கள் குறைவா. .?
அறிவை விற்பவர்கள் அதிகமா. ?
அரசும் சட்டங்களும் மக்களுக்கா. ?
மக்கள் அரசுக்கும் சட்டத்திற்குமா.?
இது ஜனநாயக நாடா. .?
பணநாயகர்கள் நாடா. .?
ஏழ்மையை ஒழிக்க தேர்வுகளா. ?
ஏழையை ஒழிக்க தேர்வா. ?
அரசு வேலைக்கு போட்டித் தேர்வுகள் தேவையா. ?
அரசியல் வேலைக்கு தேர்வுகள் தேவையில்லா போட்டியா. .?
ஒரு பக்கம் நீலத் திமிங்கலம் விளையாட்டு மூலம் தற்கொலை. ?
மறு பக்கம் நீட் தேர்வு என்ற பெயரில் தற்கொலை. ?
ஒருபுறம் கந்துவட்டி.?
மறுபுறம் ஜிஎஸ்டி.?

இத்தனை கேள்விகளுக்கு காரணம் என்ன தெரியுமா. ?
நமது மூளையும் உரிமையும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் அரசியல்வாதிகளிடமும் விலை போனதே அதன் தொடர்ச்சி தான் இவைகள் அனைத்தும்...


வியாழன், 26 அக்டோபர், 2017

எங்கே போகிறோம் நாம் ...


சின்ன வயதில் வெளியில் சென்று உன் தோழி தோழர்களுடன் விளையாடு என்று கூறிய அம்மா இன்று வெளியில் செல்லாதே என்று  கண்டிக்கிறார் ......
நண்பர்களுடன் ஒன்றாக உடல் வருத்த மகிழ்ச்சியாய் விளையாடிய நாம் இன்று முகநூல் மூலம் ஆன்லைனில் விளையாடி கொண்டிருக்கிறோம் ...எனவே தான் தீரா நோய்களும் நம்மிடம் விளையாடி கொண்டிருக்கின்றன
நாம் கெட்டது அல்லாமல் நம்முடைய அடுத்த தலைமுறைக்கும்
இதை பழக்கிக் கொடுத்து கொண்டு இருக்கிறோம் ..... இனியாவது குழந்தைகளை உடல் உழைக்க விளையாட விடுங்கள் அப்பொழுதுதான் அவர்களின் உடலும் , மனமும் பலம் அடையும்...
tamil vilaiyattukal க்கான பட முடிவு

முகங்கள்

வெளிப்படையாக இருப்பதை விட வேசம் போடுபவர்க்குத்தான் இந்த உலகில் மதிப்பு அதிகம்
நாம் ஒவ்வொருவர்க்கும் பல முகங்கள் உண்டு  .....நம்குடும்பத்திற்கு ஒரு முகம் ,நம் நண்பர்களிடம் ஒரு முகம் ,நாம் அன்றாடம் வேலை செய்யும் இடத்தில் ஒரு முகமுமாக நம் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ....ஆனால் இதில் எதிலுமே நம்முடைய     சுயரூபத்தை மற்றவர்க்கு வெளிகாட்ட தயங்குகிறோம் ஏன்?ஏனென்றால் எங்கே நமது சுயரூபத்தை பார்த்துவிடுவார்களோ என்று பயத்தினாலும் தயக்கத்தினாலும் தான்,....
நாம் போடும் இந்த வேசத்தால் நம்முடைய சுய பின்பத்தை நாம் இலக்கிறோம் என்பது இங்கு எத்தனை பேருக்குத் தெரியும்...
            வெளிப்படையாக இருங்கள் ..மற்றவர்களுக்காக உங்களின்
 சுயத்தை நீங்கள் இழக்க தயாராய் இராதீர்கள்...
thanithuvam க்கான பட முடிவு

புதன், 25 அக்டோபர், 2017

மூன்று மணிநேரம் தேர்வுகள்.


மூன்று மணிநேரம் தேர்வுகள்...
மூன்றாண்டுகளுக்கு பிறகு..?
மாணவர்களின் எதிர்காலம்..?
இதற்கு யார் காரணம்..?
கல்வி நிறுவனங்களா..?
பெற்றோர்களின் பேராசையா அல்லது அவர்களின் முட்டாள்தனமா ..?
மாணவர்களின் கவனக் குறைவா..?
கல்வி சேவையா அல்லது முதலீடா..?
இவர்களில் யார் மீது தவறு..?


வெற்றி கொடிக்கட்டு


vetri க்கான பட முடிவு

# வெற்றி நம்மை பிறர்க்கு அடையாளம் காட்டும் ...ஆனால் தோல்வி நம்மை நமக்கே அடையாளம் காட்டும்...
# பொதுவாக வெற்றி என்பது மற்றவர்கள் கை விட்டு விட்ட பின்பும் அயராமல் தொடர்ந்து முயற்சிப்பதாலயே  கிடைக்கக்கூடியது...
# பல தோல்விகளை சந்தித்தேன் வெற்றி பெரும்பொழுது எனக்கு கிடைத்த ஒவ்வொரு தோல்வியும் ஒவ்வொரு வெற்றி என அறிந்து கொண்டேன்.........

பாடித்ததில் பிடித்தவை

நேற்றைய இழப்புகளையும் நாளைய எதிர்பார்ப்புகளையும் மனதில் சுமந்து நம்மை அறியாமலே நாம் நமது நிகழ்கால நிம்மதியை இழந்து கொண்டு இருக்கிறோம் என்பதே
எவரும் அறிந்து கொள்ள விரும்பாத எதார்த்தமான உண்மை!!

நிரந்தரம் எதுவுமில்லை என அறிவு உணர்ந்தாலும் மனது அதனை ஏற்க மறுத்து அடங்காத ஆசைகளை அது தனக்குள்ளே சுமக்கிறது!!!
nirandharam க்கான பட முடிவு

செவ்வாய், 24 அக்டோபர், 2017

ஆறிலும் சாவு நூரிலும் சாவு

மகாபாரதத்தில் கர்னனின் தாய் குந்தி தேவி பாண்டவர்களுடன் கர்னனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கிறாள் அப்போது" நான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் எனக்கு சாவு நிச்சயம் .கெளரவர்களுடன் சேர்ந்து நூறாவதாக வந்தாலும் எனக்கு மரணம் தான் ... எனவே செய்நன்றி காரணமாக நான் கெளரவர்களுடனே இருக்கிறேன் "என்று தன் தாய்க்கு மறுமொழி கூறினான் கர்ணன் ...அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாக சேர்ந்தாலும் மரணம்  நிச்சயம் நூறு பேருடன் சேர்ந்தாலும் தனக்கு மரணம் நிச்சயம்  என்பது தான் இதற்கு விளக்கம்.....
mahabharatham க்கான பட முடிவு

எனது கை

நீ விழுந்த போதெல்லாம் தாங்கிப் பிடிக்கும் இந்தக் கை..

மனம் உடையும்போதெல்லாம் தட்டிக் கொடுக்கும் இந்தக் கை..

தனியே நீ அழும்போதெல்லாம் உன் கண்ணீரைத் துடைக்கும் இந்தக் கை..

அது வேறு யார் கையும் அல்ல.. உன்னுள் உள்ள உனது தன்னம்பிக்கை..

அதை மட்டும் ஒரு போதும் இழந்து விடாதே..!
thannambikkai க்கான பட முடிவு

தினம் ஓர் சிந்தனை

தைரியம் எண்ணற்ற எதிரியை கொன்று விடும்!!!!
ஏழு முறை விழுந்தாலும் எட்டாவது முறை எழு
தவறான பாதையில் வெகுதொலைவில் வந்தாலும் திரும்பிச்செல்!!!
வெற்றியை எதிர்நோக்கும் எண்ணம் இருந்தால் ஒற்றை சிறகிலும் பறக்கலாம்!!!
ஜெயிப்பது எப்படி என்று யோசிக்காதே! தோற்றது எதனால் என்று யோசித்து பார்!!! ஜெயிப்பது நீயாக மட்டுமே இருப்பாய்!!!
thairiyam க்கான பட முடிவு

படித்ததில் ரசித்தவை

* வாழ்க்கை என்னும் போர்க்களத்தில் அஞ்சாமல் போராடும் வீரனைப் போல செயல்படுங்கள்.
* தன்னம்பிக்கையை இழப்பது என்பது தெய்வ நம்பிக்கையை இழப்பதை விட மோசமானது.
* அரை மனதுடன் முயற்சியில் ஈடுபடாதீர்கள். ஆர்வமில்லாத செயலால் நன்மை ஏற்படுவதில்லை.
* எடுத்துச் சொல்வதை விட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.
* எண்ணத்தில் ஒழுக்கம் இருந்தால், செயல்களிலும் அது பிரதிபலிக்கும்.
* 'மண்ணில் பிறந்ததன் பயன் மற்றவர்க்கு உதவி செய்வதே' என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
படம்

நான் இதுவாகத்தான் ஆசை படுகிறேன்

vetri க்கான பட முடிவு

ஒரு மனிதர் தன் வாழ்வில் தொட்ட துறைகளில் எல்லாம் வெற்றி பெற்று வந்தார். அவரது #வெற்றிக்கெல்லாம் யார் வழிகாட்டி என்று நிருபர்கள் கேட்டார்கள். “இவர்தான்” என்று சுட்டிக் காட்டினார்.

அவர் காட்டிய திசையில், #தங்கஃபிரேம் போட்டு ஒரு பென்சில் புகைப்படம்! நிருபர்கள் திகைத்தார்கள். அவர் சொன்னார், “இந்தப் பென்சில் எனக்கு 5 விஷயங்களைக் கற்றுத் தந்தது.
பல விஷயங்களை எழுதுவதற்கும், வரைவதற்கும் தன்னை முழுமையாக நம் கைகளில் ஒப்படைக்கிறது.- அவ்வப்போது நாம் அதை #சீவுகிறோம். சீவும் போதெல்லாம் #கூர்மையடைகிறது.- தவறுகள் செய்தாலும், அவற்றை அழிப்பதற்கு இடம் கொடுக்கிறது.- வெளியே எப்படியிருந்தாலும் உள்ளே உடையாமல் ஒரு சீராய் இருக்கிறது.

சின்னஞ்சிறிய பென்சிலாகும் அளவு சீவப்பட்டாலும் எழுதிக் கொண்டிருக்கிறது. கடைசி வரை தன் சுவட்டினைக் காகிதத்தில் பதிக்கிறது. இதைப் பார்த்துதான் என் வாழ்க்கையை நான் சீரமைத்துக் கொண்டேன்.
பல அரிய விஷயங்களை நிகழ்த்த நான் ஒரு கருவி தான் என்கிற அடக்க உணர்வோடு என்னைக் கடவுளின் கைகளில் ஒப்படைத்திருக்கிறேன்.

சோதனைகள் வரும்போதெல்லாம், மேலும் மேலும் கூர்மையாகிக் கொள்கிறேன்.- தவறுகள் செய்திருப்பதாகத் தெரிந்தால் உடனே திருத்திக் கொள்கிறேன்.- வெளிச்சூழலில் புகழ் வந்தாலும் பழிச்சொல் வந்தாலும் உள்ளே உடையாமல் உறுதியாய் இருக்கிறேன்.- கடைசி வரையில் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் – காலத்தில் நம் சுவட்டைப் பதித்துவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.

வாழ்க்கை நம் வசம்

        கருவறையில் இருந்து இறங்கி கல்லறையை நோக்கி நடந்து செல்லும் தூரம் தான் வாழ்க்கை...
அதற்குள் ஒருமுறை நல்லா வாழ்ந்து பார்த்திட வேண்டும் ...
நம்மால் சாதிக் முடியாதது இந்த உலகில் எதுவும் இல்லை ...அப்படி இருந்தால் அதை வேறு யாராலும் சாதிக்க முடியாது...
நீங்கள் தோல்வி  பெறும்பொழுது உங்கள் இலக்கை நினைத்து கொள்ளுங்கள்
அது உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்....

vaalkai க்கான பட முடிவு