சனி, 14 அக்டோபர், 2017

           

                                                பணத்தின் நட்பு
friend க்கான பட முடிவு

    "டேய் பிரபு! எப்படி இருக்க ?பார்த்து  எவ்வளவு நாளாச்சு" என்றபடி தனது பால்ய நண்பனைக் கட் டிக்  கொண்டான் பாலன். 
                 "சின்ன வயதில் பார்த்தது ஆளு அடையாளமே  தெரியாத அளவு க்கு  மாறிட்ட ,பசினஸ்  எல்லாம் எப்படி போவுது"  என நலம் விசாரிக்கத் தொடங்கினான் பிரபு....
                 "கந்தன் தான் உன்னைப் பத்தி அடிக்கடி எங்கிட்ட பேசிட்டே இருப்பான் ...உன்னை பார்த்தால் ரொம்ப சந்தோஷப்படுவான்...ஆனால் பாவம் ரொம்ப க் கஷ்டப்படறான்......"
               "ஏன் என்னாச்சு  அவனுக்கு ?" என கேட்டுக்கொண்டே  தன் சிகரட்டைப் பற்ற வைத்தார்.
             "கந்தனின் அப்பா  இறந்ததும் அவரோட சொத்துகளை பங்காளிங்க பங்கு போட்டுக்கொண்டனர் ... மீதி இருக்க நிலத்தில தான் விவசாயம் செய்து வாழறான்...அப்பப்ப வந்து பார்த்துவிட்டு செல்வான்,நானும் என்னால் முடிஞ்ச உதவி செய்வேன் ".
                                  பிரபு  சிறிது நேரம்  யோசித்துவிட்டு  பின் பாலனிடம்,"டேய் பாலன்  நான் உன்கிட்ட தொடர்பில் இருக்கிறதா அவன் கிட்ட சொல்லாமல் இரு நாளைக்கே  வந்து பணம் கேட்டாலும் கேட்பான் ...ஆனால் உனக்கு பிசினஸில் எதாவது உதவி தேவைன்னா நான் செய்யறேன்"என்று சிரித்துக்கொண்டே சென்று விட்டான் பிரபு
               பாலனுக்கு துக்கிவாரி போட்டது....சிறு வயதில் இணை பிரியாத் தோழானாய் வாழ்ந்த அவனையா இவன் இப்படி பேசுகிறான்....என வருந்தினான் பாலன் .
                      பாலன் பிரபுவை சந்தித்ததை அறிந்த கந்தன்பாலானிடம் கேட்ட முதல் கேள்வி .....
                           "டேய் பாலா! பிரபு நல்லா இருக்கானா...."

1 கருத்து: