ஞாயிறு, 22 அக்டோபர், 2017

சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?

சிறிய போராலிகளை வரலாறு பதிப்பதில்லை ஏன்?


BAJI ROUT பாஜி ரவுட் ஆங்கில சிப்பாய்களின் தோட்டாக்களை நெஞ்சில் வாங்கிய பிஞ்சு!!!!

பாஜி ரவுட் 5ஆக்டோபர் 1926 ஆம் ஆண்டு ஒரிசா மானிலத்தில் உள்ள தின்கனல் என்ற இடத்தில் பிறந்தவர். இவர் தந்தை ஒரு படகோட்டி,ஆனால் பாஜி சின்னதாக இருக்கும்போதே மறைந்துவிட்டார்.சிறு வயதிலேயே மக்கள் நலகுழுவின் ஆர்வலராக செயல்பட்டுக்கொண்டிருந்தார் பாஜி. ஒரு இரவில் ஆங்கிலப் படையினர் ஆற்றை கடப்பதற்க்காக பாஜியை படகுஓட்டசொல்லி கேட்டனர்.பாஜி ``எனது இந்த படகு மக்களுக்கானது, அவர்களின் எதிரியான உங்களுக்கு இதை கொடுக்க மாட்டேன்’’ என்றது அந்த பிஞ்சு குரல்.உடன் அவனது இரு நண்பர்களான லஷ்மன், ஃபாகு என்பவரும் இருந்தனர். பாஜியின் மறுமொழியை கேட்ட ஆங்கிலயர் கையில் இருந்த துப்பாக்கியால், பாஜியையும் அவரது நன்பர்களையும் சுட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக