செவ்வாய், 29 நவம்பர், 2016

மின்னூல் உருவாக்குவது எப்படி?

LibreOffice Writer,  sigil,  Calibre  போன்ற கட்டற்ற இலவச மென்பொருட்கள் கொண்டு மின்னூல் உருவாக்குவது எப்படி?
காணொளி – https://youtu.be/0CGGtgoiH-0
FreeTamilEbook.com ல் மின்னூல் வெளியிட விரும்பும் நூலாசிரியர்களும்,
பங்களிப்பாளர்களும் இந்தக் காணொளியைக் காண வேண்டுகிறேன்.
இனி நீங்களே எளிதில் மின்னூல் உருவாக்கி அனுப்பலாம்.


நன்றி இலவச மின்னூல் தகவல் மையம்.

ஞாயிறு, 27 நவம்பர், 2016

தி கவர்ட்’ஸ் எபிலிடி

                                                               தி கவர்ட்ஸ் எபிலிடி
சிறிய கிராமம் கோழையாக, பயந்த ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார்.அவருக்கு சிறிய சத்தம்கூட பயந்தை ஏற்படுத்தும்.ஒருமுறை முரசு அறிவிப்பவன் ``அரசர் எல்லா இளஞர்கர்களையும் தனது படையில் சேர்ந்துகொள்ள ஆனையிட்டிருக்கிறார்.இதனை எல்லோரும் கடைபிடிக்கவேண்டும் ! ‘’என்று கூறினான்.இவர் இப்பொழுது கட்டாயநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். ஆகையால், படையில் சேர நகரத்திலிருந்து விடைபெற்றார்.


            வழியில் பெரிய, அடர்ந்தமரம் ஒன்றை கடந்தார்.அதில், நிறைய காகங்கள் அமர்ந்து கூச்சலை ஏற்படுத்திக்கொண்டிருந்தன.அவைகளின் கூச்சல் இந்த கோழை மனிதரை நடுங்க செய்தன.ஆகையால்,அவர் நடுங்க செய்தன.ஆகையால்,அவர் அங்கேயே நின்று விட்டார்.சில காலம் நின்ற பிறகு முன்னோக்கி நடந்தார்.அப்பொழுதும் அந்த காகங்கள் கூச்சலிட்டனர்.மறுபடியும் பயத்தால் உரைந்து போன அவர்`` ! கூச்சலிடுங்கள் உங்களால் எவ்வளவு இயலுமோ?அவ்வளவு கூச்சலிடுங்கள், எனக்கு தெரியும் உங்களால் இயலுமோ? அவ்வளவு கூச்சலிடுங்கள், எனக்கு தெரியும் உங்களால் என்னை ஒன்னும் தின்று விட முடியாது !’’ என்றார். ஏனெனில்,அந்த காக்கைகள் அவர் தின்றுவிடும் என்று பயம்.ஆனால், உண்மையில் இவர்க்கு படையில் சேர தகுதியே இல்லாதவர்.ஒரு மனிதன் அவனுக்கு தகுந்த, திறமைக்கு ஏற்ற வேலையைத்தான் செய்ய வேண்டும்.

                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி



தி ஹன்டர்’ஸ் டாக்

                                                            தி ஹன்டர்ஸ் டாக்

ஒரு முறை காட்டில் சில முயல்களை வேட்டையாட வேடன் ஒருவன் தன்,நாயுடன் சென்றான்.இருவரும் இப்படி நிறைய முறை வேட்டையாடி இருக்கின்றனர்.ஒருமுறை வேட்டையாடையில் செடியை விளக்கி முயலை தேடும்போது பாம்பும் கீரியும் சண்டையிடுவதைக் கண்டனர்.சில சமயம் அந்த விசப்பாம்பு சீரி கீரியைக்கொத்தியது. சில சமயம் அந்த கீரி பாம்பைக் கொத்தியது.அவைகளின் இந்த சண்டையை தீர்க்க முடிவு செய்து, வேடன் தன் துப்பாக்கியால் கீரியின் தலையில் சுட்டார்.பின் அதனை கவ்வி எடுத்து வரும்படி தன் நாய்க்கு ஆணையிட்டார்.
           

            நாயும் தன் உரிமையாளருக்கு விசுவாசமாக அந்த இடத்திற்கு சென்றது.இரத்த வெள்ளத்தில் மிதந்து கிடந்த கீரியின் தலையை கவ்வும்போது, பாம்பு நாயை கொத்தி கொன்றது.அப்போது வேடன், ``நான் தவரு இழைத்துவிட்டேன் உண்மையான எதிரி பாம்புதான்.கீரியை சுட்டு என் விசுவாசமான நாயை இழந்துவிட்டேன்’’ என்று வருந்தினான்.

                                                            (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


தி தாங்ஃப்பூல் ஈகில்

                                             தி தாங்ஃப்பூல் ஈகில்
மரவெட்டி ஒருவருக்கு ஒருநாள் காட்டில் வித்தியாசமான சத்தம் கேட்டது. பறவை வேடன் ஒருவன் மரத்தடியில் வலையை விரித்து அதன்மேல் தானியங்களைத் தூவிக் கொண்டிருந்தான்.துரதஸ்டவசமாக ஒரு கழுகு அதில் மாட்டிக்கொண்டு, உதவிக்காக கத்திக்கொண்டிருந்தது.உடனே, சத்தம் கேட்ட இந்த மரவெட்டி அதனை விடுவித்தார்.கழுகும் அவருக்கு நன்றி கூறி அங்கிருந்து சென்றது.


      சில நாட்களுக்கு பிறகு அதே மரவெட்டி ஒரு மணல்திட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டுக்கொண்டிருந்தான்.சில செடிகளும் மரங்களும் அவனுக்கு நிழல் தந்தன.திடீரென ஒரு கழுகு அந்த உணவை பறித்து சென்றது.தனது உணவை காப்பாற்ற தாண்டி குதித்தான்.அவன் காப்பாற்றிய அதே கழுகுதான் இந்த காரியத்தை செய்தது.அந்த கழுகு வேடனிடம் ``ஐயா உங்களுக்கு பின்னே ஒரு விசப்பாம்பு தங்களை கொத்த காத்திருந்தது.அதிலிருந்து தங்களை காப்பாற்றவே இப்படி செய்தேன்.ஏனெனில்,தங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.’’என்றது.

                                                      (தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி


சனி, 26 நவம்பர், 2016

தி கோல்டன் ஐடல்

                                                            தி கோல்டன் ஐடல்
 ஒரு பெரிய வணிக வயாபாரி ஒருவர் தனது வியாபாரத்தை விரிவாக்கும் பொருட்டுக்காக ஒரு பெரிய நகரத்திற்கு வந்தார்.அந்த நகரம் முழுக்க சுற்றி வந்து ஏதாவது வியாபாரம் பன்ன இயலுமா என்று பார்த்தார்.அப்படியே சிறிது நேரம் அலைந்து கொண்டிருந்தார்.அப்படி அலைந்து கொண்டு இருக்கையில் நெடுந்தூரம் சென்றார்,நகரம் முடிந்து கிராமம் தொடங்கியது.
            அங்கு பழங்கால கோயில் சற்று அழிந்துபோன நிலையில் இருந்தது.அங்கு அமர்ந்து இலைப்பாரையில் அவர் கண்ணிற்கு பாதி அழிந்த நிலையில் உள்ள அந்த இடத்தில் ஏதோ ஒரு பொருள் பல பலவென தெரிந்தது.உடனே அருகில் சென்று கற்களையும் மணல்களையும் கலைத்துப்பார்க்கையில் அவர்க்கு ஒரு தங்க சிங்கச்சிலை கிடைத்தது. ``அடடா
நான் மிகவும் அதிர்ஸ்டசாலி கடவுள் என்னை மேலும் பணக்காரனாக்க ஒரு நல்ல வழிகாட்டியிருக்கிறார்’’ என்றார்.இந்த கவர்ச்சியான சிங்கச் சிலை பொன்னால் செய்யப்பட்டது,அதனை நான் என் வீட்டிற்க்கு எடுத்து செல்ல வேண்டுமா?’’,பிறகு சற்று நேரம் யோசித்து,`` இதனால் எனக்கு என்ன பயண்?இரவில் இந்த சிங்க சிலை என்னை முறைத்து பார்த்து பயபுடுத்தினால் நான் என்ன செய்வேன்?அதற்கு நான் எனது வேலையாட்களை அனுப்பி அந்த சிலை அவர்களை என்ன செய்கிறது என்று தூறத்திலிருந்து நான் வேடிக்கை பார்ப்பேன்’’.என்று முடிவு செய்தார். அவரும் மற்ற பணக்காரர்களைப் போலவே எப்படி பணத்தை செலவிடுவது என்று தெரியாமல்,முட்டாள் தனமாக செயல்பட்டார்.

                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி