செவ்வாய், 22 நவம்பர், 2016

தி ப்ராமின்’ஸ் ஸ்சர்வன்ட்

                                                      
 

ஒரு சோம்பேரி ஐயருக்கு நிறைய விலைநிலங்கள் இருந்தது.ஆனால்,அதில் எதையும் நிலத்தில் தூவாமல் அதனை சாகுபடிக்கு உதவாதபடி வைத்திருந்தான்.ஒரு நாள் அவர் வீட்டிற்கு துறவி ஒருவர் வந்தார்.அந்த துறவியை நன்கு கவனித்துக்கொண்டார் ஐயர்.அந்த துறவி ஐயருக்கு ஒரு மந்திரத்தை கூறி சென்றார்.அவர் சென்ற பின் அந்த மந்திரத்தை உச்சரித்தார். உடனே ஒரு பெரிய உருவம் அவர் முன் தோன்றியது.``எனக்கு வேலை கொடுங்கள் முதலாளி எனக்கு பசியாக இருக்கிறது,நான் என்னை சுற்றி இருக்கும் அனைத்தையும் தின்றுவிடுவேன்’’.என்று கூறினான்.பயந்து போன ஐயர் உடனே அதற்கு வேலை கொடுத்தார்.


அதனை செய்த பின் விரைவாக அவர் கொடுத்த அனைத்து வேலைகளையும் செய்து முடித்தது.இப்பொழுது அந்த உருவத்திற்குக் கொடுக்க எந்த வேலையும் இல்லை.ஆனால்,எங்கே அந்த உருவம் தன்னை கொன்றுவிடும் என்ற பயத்தில்``அந்த நாயின் வாலை நிமிர்த்து’’.என்று கூறினார்.அதுவும் வெகுநேரம் முயற்சி செய்த பின் அந்த வேலை செய்ய இயலாது ஓடிவிட்டது.இதன்மூலம் உழைப்பால் ஈட்டும் பொருளே நிலையானது என்று கற்றுக்கொண்டார்.
                                                      (தரவு)
                                    டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக