வெள்ளி, 18 நவம்பர், 2016

தி கன்னிங் வுல்ஃப்

                                                              தி கன்னிங் வுல்ஃப்
                                        --டைனி டாட் ஸ்ரோடீஸ்
               

ஒருமுறை கடும் பசியுடன் இருக்கும்``ஓநாய்’’ காடுமுழுக்க இறையை தேடி அழைந்தது.மிக விரைவில் காட்டின் எல்லையை அடைந்தது.அங்கு ஒரு ஓடை ஓடிக்கொண்டிருந்ததுஅதன்வழியில் நடக்கையில் ஒரு சத்தம் அதன் காதில் விழுந்தது.ஒரு சிறிய``ஆட்டின்’’சத்தம் அது.பிறகு ஓநாய் மனம் நெகிழ்ந்தது.ந்த ஆட்டை உண்டு அந்த சுவையான தண்ணீரை குடிக்கலாம் என்று எண்ணியது.விரைவில் அந்த ஆடு சிறிய மலை உச்சியில் இருப்பதை கண்டறிந்தது.ஆனால்,அந்த மலைக்கு தாவ முயற்சிக்கையில் அந்த நரி தடுக்கி கீழே விழுந்தது.

            பின்பு தன் வழிக்கு அந்த ஆட்டை கொண்டுவர,``அந்த சிறிய மலையில் என்ன செய்கிறாய்?’’, என்று கேட்டது ஓநாய்.``நீ கீழே விழுந்துவிடுவாய் ங்கு வந்து பசுமையான புட்களை உண்டு,அந்த சுவைமிகுந்த தண்ணீரையும் பருகலாம் என்றது ஓநாய் தந்திரமாக.அதற்கு திறமையான ஆடு,``இல்லை ஓநாய் ஐயா நான் இங்கு நன்றாக இருக்கிறேன். எனக்கு போதிய உணவு இங்கு கிடைக்கிறது என்றது.’’அப்பொழுது சூழ்ச்சியைவிட சாமார்த்தியம் வலிமையானது என்று எண்ணி அங்கிருந்து சென்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக