வெள்ளி, 18 நவம்பர், 2016

தி ஃபூலிஷ் டாக்ஸ்

                                                                           தி ஃபூலிஷ் டாக்ஸ்
                                          --டைனி டாட் ஸ்டோரிஸ்
               

ஒரு ஊரில் ஆடு மேய்பவர் ஒருவரிடம் நிறைய ஆடுகள் இருந்தன.அவர் அவைகளை பாதுகாக்க இரு ஆக்ரோசமான நாய்களை பழக்கி வைத்திருந்தார்.அந்த நாய்களும் ஆடுகளை பாதுகாத்துக்கொண்டு உண்மையாக நடந்து கொண்டன.

ஒரு இரவில் நரி அந்த டுகளை நோட்டமிட்டது.அருகில் சென்று அந்த ஆடுகளை நெருங்கும் போது நாய்கள் நரியை குறைத்து விரட்டின.அந்த நரி அப்பொழுது ஏதாவது,சதி திட்டம் தீட்டினால்தான் இதனை ருசிக்க முடியும் என்று எண்ணியது.கடினமாக இருந்தாலும் திடீரென ஒரு தீர்வு தோன்றியது.அதனை செயல்படுத்த இரு நாய்களிடம் சென்று,``சங்கிலி மூலம் கட்டப்பட்டு மனிதர்களுக்காக நீ உழைப்பதை எண்ணி நான் வருந்தினேன்.என்னுடைய காட்டிற்கு வந்து நீங்கள் இருங்கள்.அங்கு நீங்கள் சுதந்திரமாக சுற்றித் திரிந்து விரும்பியதை உண்ணலாம்’’,என்றது.அந்த நரியின் எண்ணம் அந்த நாய்களைக் கவர்ந்து.            தந்திரமாக அந்த நாய்களை தன் குகைக்குள் செலுத்தியது.அங்கு ஏற்கவே பதுங்கி இருந்த இரண்டு நரிகள் நாய்களை கடித்தன.பிறகு அனைத்து நரிகளும் ஒன்று சேர்ந்து அந்த ஆடுகளை உண்டனர்.அந்த நாய்களின் அறியாமையிலால் தான் தன் உரிமையாளர்களுக்கும் தனக்கும் தீயன தேடிக்கொண்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக