வெள்ளி, 18 நவம்பர், 2016

ஸ்வீட் ட்ரூத்

                                                                      ஸ்வீட் ட்ரூத்
                                    --டைனி டாட் ஸ்டோரீஸ்

       அன்று சிங்கத்தின் பிறந்த நாள்.காட்டிலுள்ள அனைத்து விலங்குகளும் பறவைகளும் தங்களை நன்கு அலங்கரித்துக்கொண்டு பரிசுகளுடன் வந்தன.


விழா நடக்கும் இடத்தை அனைவரும் அலங்கரித்துக் கொண்டிருந்தன.சிங்கம் தனது பிறந்தநாள் விழாவிற்கு அழைத்திருத்தது. தக்க நேரத்தில் இனிப்பன் வெட்டி பிறந்தநாள் பாடல் பாடப்பட்டது.பின்பு கழுதையின் வருகையின்மையை கண்டரிந்தது சிங்கம் அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் அதனால் கழுதையால் வர இயலவில்லை என்று எண்ணியது.

            அடுத்த நாள் சிங்கம் தான் நடந்து வந்த வழியில் கழுதையை சந்தித்தது.அங்கு அதன் வருகையின்மையை பற்றி விசாரித்தது.கழுதை அதற்கு, எனக்கு என் வீட்டிலேயே நான் இயல்பாக உணர்கிறேன் அங்கு வருவதற்கு எனக்கு எந்த விருப்பமும் இல்லை என்று அவமதிக்கும் வகையில் கூறியது.


அந்த கழுதை கூறியது உண்மையாக இருந்தாலும்,உண்மையை அழகுற கூறவில்லை.அதனால் ஆத்திரமடைந்த சிங்கம் கழுதையை காட்டைவிட்டு வெளியேற்றிவிட்டது. அதனால்தான், இங்கு மனிதர்களுடன் பொதி சுமக்கிறது.ஏனெனில், மனிதர்களுடன் உண்மையை அழகுற கூற தெரியாதவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக