தி தாங்ஃப்பூல் ஈகில்
மரவெட்டி
ஒருவருக்கு ஒருநாள் காட்டில் வித்தியாசமான சத்தம் கேட்டது. பறவை வேடன் ஒருவன் மரத்தடியில் வலையை விரித்து அதன்மேல் தானியங்களைத் தூவிக் கொண்டிருந்தான்.துரதஸ்டவசமாக ஒரு கழுகு அதில் மாட்டிக்கொண்டு, உதவிக்காக கத்திக்கொண்டிருந்தது.உடனே, சத்தம் கேட்ட இந்த மரவெட்டி அதனை விடுவித்தார்.கழுகும் அவருக்கு நன்றி கூறி அங்கிருந்து சென்றது.
சில நாட்களுக்கு பிறகு அதே மரவெட்டி ஒரு மணல்திட்டில் அமர்ந்து உணவு உட்கொண்டுக்கொண்டிருந்தான்.சில செடிகளும் மரங்களும் அவனுக்கு நிழல் தந்தன.திடீரென ஒரு கழுகு அந்த உணவை பறித்து சென்றது.தனது உணவை காப்பாற்ற தாண்டி குதித்தான்.அவன் காப்பாற்றிய அதே கழுகுதான் இந்த காரியத்தை செய்தது.அந்த கழுகு வேடனிடம் ``ஐயா உங்களுக்கு பின்னே ஒரு விசப்பாம்பு தங்களை கொத்த காத்திருந்தது.அதிலிருந்து தங்களை காப்பாற்றவே இப்படி செய்தேன்.ஏனெனில்,தங்களுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.’’என்றது.
(தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***என்ற தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி
நல்லதொரு பகிர்வு.
பதிலளிநீக்கு