ஒரு
நாள் வணிக வியாபாரி ஒருவர் கிரமாம் ஒன்றிர்க்கு வியாபாரத்திற்காக வந்தார்.வழியில் வந்த விவசாயி ஒருவரை நிறுத்தி விடுதி எங்கே இந்த ஊரில் இருக்கிறது என்று விசாரித்தார்.அந்த விவசாயியும் விடுதிக்கு வழி காட்டினார்.தனது குதிரையை ஒரு வலிமையான
தூனில் கட்டி உறங்கச் சென்றார்.
காலையில் எழுந்து அந்த தூனிடம் சென்று பார்த்தார்.ஆனால், அந்த விடுதியின் உரிமையாளர்,``எனது தூன் ஒரு குதிரைக்கு பிறப்பு கொடுத்திருக்கிறது,இது என்னுடையது’’ என்று கூறினார்.அப்படி ஒரு பொய்யைக் கேட்டது அந்த வணிகர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.இருவரும் விவாதிக்க ஆரம்பித்தனர்.இருவரும்,நீதிமன்றத்திற்கு நீதியைநாடி சென்றனர்.அந்த வணிகரின் சாட்சியாளராக அந்த வழி கேட்ட விவசாயியை அழைத்தார் ஆனால்,அவர் வர மறுத்துவிட்டார்.எனினும்,சில காலங்கலுக்கு பிறகு விவசாயி அங்கு வந்து,``ஐயா, தாமதத்திற்கு என்னை மன்னித்துவிடுங்கள், நான் வேகவைத்த கோதுமையை என் நிலத்தில் பயிராகத் தூவிக்கொண்டிருந்தேன்’ என்றார்.அதற்கு நீதிபதி சிரித்துக்கொண்டே ``எப்படி வேகவைத்த கோதுமையை கொண்டு நீ பயிர் விழைவிக்க இயலும்?’’ என்றார்.அதற்கு ``ஏன் முடியாது ஒரு தூன் குதிரையை கொடுக்கும்போது வேகவைத்த கோதுமை ஏன் பயிரை விலைவிக்காது?’’ என்று கேட்ட போது நீதிபதி உண்மையை உணர்ந்து விடுதி உரிமையாளரை தண்டித்தார்.
(தரவு)
டைனி டாட் பெட் டைம் ஸ்டோரீஸ்
***இந்த தொகுப்பிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டதுதான் எனது படைப்பு.இதனை படித்ததன் தாக்கம் இந்த மொழிபெயர்பு.நன்றி
நல்ல கதைதான்.
பதிலளிநீக்குநன்று
பதிலளிநீக்கு