திங்கள், 28 ஆகஸ்ட், 2017

வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!!

                                                                                                                                                                              தமிழ் அழிந்துக்கொண்டு வருவதற்கான முக்கியமான காரணமே பள்ளி கல்லூரிகள் தான். நம் நாட்டின் அடையாளமே  தமிழ் தான் ஆனால் இன்று எந்த பள்ளி , கல்லூரிகளில் அனைத்து நிகழ்வுகளும் தமிழில் நடத்தப்படுகின்றன. தமிழ் நாட்டிலேயே  தமிழ் இல்லையெனில் தமிழின் நிலை என்ன? நமது  கொங்கு தமிழ் இருக்கும் போது எதற்காக நாம் ஆங்கிலத்தை கையாள வேண்டும்.  மற்ற நாடுகளில் எல்லாம் பிற  மொழிகளில் எந்த நிகழ்வு நடைப்பெறுவதில்லை. நாம் மட்டும்  எதற்காக மற்ற மொழிகளை கையாள வேண்டும். இனி நாமும் நம் மொழியையே கையாள்வோம். வாழ்க தமிழ் வளர்க தமிழ் என முழக்கமிடுவோம்.

தயவு செய்து அனைத்து பள்ளி கல்லூரிகளும் நிகழ்ச்சிகளை தமிழில் நிகழ்த்துங்கள்.

வியாழன், 10 ஆகஸ்ட், 2017

பச்சை மிளகாய் என்றால் கொஞ்சம் பயம் உண்டு நம் வீட்டு ஆட்களுக்கும் சரி பிள்ளைகளும்
சரி ஏன் என்றால் அதில் இருக்கும் காரம், ஆனால்
வட மாநிலங்களில் பச்சை மிளகாய்ப் உணவில் சரிபதியாக சேர்த்து கொள்வதால் என்னவெ வலிமையும் நிறைந்து இருக்கிறார்கள், சரி அதில் இருக்கும் பயன்களை பார்ப்போம்.
நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் பச்சை மிளகாயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் பச்சை மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மைக் கொண்டது. ஏனெனில் பச்சை மிளகாயில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைக்க உதவும்.
பச்சை மிளகாயில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. நம் உடலின் இயக்க உறுப்புகளின் பாதிப்பிலிருந்து நம் உடலை பச்சை மிளகாய் காக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து புற்றுநோயிலிருந்து காக்க உதவுகிறது.
பச்சை மிளகாயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும். மிளகாய்கள் மூளைக்குள் என்டோர்ஃபின்ஸை உற்பத்தி செய்யும். இது நம் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.
பச்சை மிளகாயை உட்கொண்டால், நுரையீரல் புற்றுநோயினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறைக்கலாம். பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியா குணங்கள் அடங்கியுள்ளது. இந்த குணத்தினால் தொற்றுக்கள் ஏற்படாமல் காக்கிறது.
பச்சை மிளகாயில் இயற்கையாகவே இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே பெண்கள் அடிக்கடி உணவில் இதைச் சேர்த்துக் கொள்வது மிகவும் உடலுக்கு நல்லது.
பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ அதிகமாக உள்ளது. இது சரும எண்ணெய் சுரப்பதற்கு உதவுகிறது. அதனால் காரசாரமான உணவை சாப்பிட்டால் நல்ல சருமத்தை நம்மால் பெற முடியும்.
பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. பச்சை மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாகும்படம்
கபிலரின் குறிஞ்சி பாட்டில் கூறிய 99 தமிழ் பூக்கள்...

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கொடுவேரி
8. தேமா (தேமாம்பூ)
9. மணிச்சிகை
10. உந்தூழ்
11. கூவிளம்
12. எறுழ் ( எறுழம்பூ)
13. சுள்ளி
14. கூவிரம்
15. வடவனம்
16. வாகை
17. குடசம்
18. எருவை
19. செருவிளை
20. கருவிளம்
21. பயினி
22. வானி
23. குரவம்
24. பசும்பிடி
25. வகுளம்
26. காயா
27. ஆவிரை
28. வேரல்
29. சூரல்
30. சிறுபூளை
31. குறுநறுங்கண்ணி
32. குருகிலை
33. மருதம்
34.கோங்கம்
35. போங்கம்
36. திலகம்
37. பாதிரி
38. செருந்தி
39. அதிரல்
40. சண்பகம்
41. கரந்தை
42. குளவி
43. மாமரம் (மாம்பூ)
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. கஞ்சங்குல்லை
48. பிடவம்
49. செங்கருங்காலி
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. சிறுசெங்குரலி
62. கோடல்
63. கைதை
64. வழை
65. காஞ்சி
66. கருங்குவளை (மணிக் குலை)
67. பாங்கர்
68. மரவம்
69. தணக்கம்
70. ஈங்கை
71. இலவம்
72. கொன்றை
73. அடும்பு
74. ஆத்தி
75. அவரை
76. பகன்றை
77. பலாசம்
78. பிண்டி
79. வஞ்சி
80. பித்திகம்
81. சிந்துவாரம்
82. தும்பை
83. துழாய்
84. தோன்றி
85. நந்தி
86. நறவம்
87. புன்னாகம்
88. பாரம்
89. பீரம்
90. குருக்கத்தி
91. ஆரம்
92. காழ்வை
93. புன்னை
94. நரந்தம்
95. நாகப்பூ
96. நள்ளிருணாறி
97. குருந்தம்
98. வேங்கை
99. புழகுபடம்

புதன், 9 ஆகஸ்ட், 2017

பறக்காத பறவைகள் நாங்கள்                 ஈமு , நெருப்புக்கோழி, கிவி, பெங்குயின், ரியா, கேசோவாரி போன்றவை பறவைகளில் பறக்காத புகழ் பெற்ற பறவைகள். ஆனால் அவை ஓடுவதில் கில்லாடிகள். இந்த பறவைகள் அனைத்திற்கும் இறகுகள் இருந்தாலும் தன் உடலை தானே காற்றில் தூக்க முடியாத அளவுக்கு பெரிய உருவமைப்பை கொண்டிருப்பதால் பறப்பதில்லை. ஆனால் இவை பறக்காமல் இருப்பதற்கு இந்த காரணம் மட்டுமல்ல. அவை வேறு பறவைகளில் இருந்தோ விலங்குகளில் இருந்தோ பிரிந்து வந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றன. ஆனாலும் இதற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. ஆனால் பறக்காத பறவை இனங்களின் வாழ்விடங்களை பொறுத்தவரை அவற்றுக்கு எதிரி இனங்களால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை என்பதால் பறக்க வேண்டிய அவசியமில்லை. எனவே இப்பறவைகளின் இறக்கைகள் காலப் போக்கில் சுருங்கிவிட்டன. அதனால் இறக்கைகள் பறவையை அந்தரத்தில் உயர்த்தும் திறன் அற்றதாகவும் மாறி விட்டது. ஆனால் அவை உறுதியான உடலையும் சக்தி மிகு கால்களையும் பெற்றிருக்கின்றன. எனவே அவை மிக வேகமாக ஓடும் திறனுடையது.

ரோஜா மலர்
          சிறுநீரக கோளாறு, மூச்சுக் கோளாறு, மலம், வாயு சிக்கல், இரத்த சோகை, கண் எரிச்சல், கண் படல வீக்கம், கண்களில் தோல் வளர்ச்சி போன்றவை குணமடையும்.
           1)சிறுநீரகத் தொந்தரவு: தினமும் ஒரு சில இதழ்கள் சாப்பிட்டால் நல்லது. அல்லது ரசமாக சாறு பிழிந்து தினமும் ஒரு மேஜைக் கரண்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
           2)அரைத் தேக்கரண்டி மஞ்சள் பொடியுடன் ஒரு 5 மிலி ரோஜா திரவத்தை கலந்து தூய்மையான மெல்லிய துணியில் வடிகட்டி இந்த திரவத்தை தொடர்ந்து கண்களில் விட்டு வந்தால் கண் தொந்தரவுகள் நீங்கும்.
          3)தினமும் 10 அல்லது 15 இதழ்களையும் அல்லது ரோஜா வடிநீர் குடித்து வர மலச்சிக்கல் மற்றும் வாயு தொந்தரவுகள் நீங்கும்.
    

வியாழன், 3 ஆகஸ்ட், 2017

தமிழை காப்போம்

          நம்மில் பலர் ஆங்கிலம் தான் பெரியது என்று எண்ணி தமிழ் மொழியை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கின்றோம். ஆங்கிலம் என்பது மொழி தமிழ் என்பது நம்முடைய அடையாளம் என்பதை நாமும் மறந்து நம்முடைய சந்ததியினரும் மறக்க ஏதுவான வழியை உருவாக்கி கொண்டிருக்கிறோம். தமிழை வளர்க்க ஒரு சிறந்த வழி நம்முடைய தொலைக்காட்சியில் சன்சிங்கர், சூப்பர் சிங்கர் போன்று பாடும் நிகழ்ச்சிகளில் சினிமா பாடலை பாடுவது போல தமிழில் உள்ள “ திருக்குறள், இராமாயணம், பாரதியார், பாரதிதாசன் பாடல் தேவாரம்” போன்ற தமிழ் இலக்கிய பாடல்களை தன் சொந்த நடையில் பாடினால் தமிழ் வளர பெரிய உதவியாக இருக்கும்.