ரா.நந்தினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரா.நந்தினி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 பிப்ரவரி, 2016

பேசாதிருப்பதனால்..!!


நான் பேசாதிருப்பதனால் 

ஊமையென்றோ..!!

உணர்ச்சிகளற்றவள் என்றோ

எண்ணிவிட வேண்டாம்.

உங்களைத் திருப்பதியிலாழ்த்தும்

பொய்களைப் பேச

நான் விரும்பவில்லை..!!

நான் அமைதியாக இருப்பதனால்

உங்கள் வாக்குறுதிகளை

நம்பிவிட்டதாக

முடிவுகளுக்கு

தலை சாய்த்து விட்டதாக

கருதிவிட வேண்டாம்..!!

இலாபத்தைப் பார்க்கும் உங்களுக்கு

நியாயத்தைப் பார்க்கும் எனக்கும்

ஒரு போதும் ஒத்துவராது..!!

உங்கள் தீர்மானங்கள் வேறு

என் தேவைகள் வேறு..!!

உள்ளதையெல்லாம்

விலை  பேசுவது

விற்றுச் சம்பாதிப்பது

சந்தை வியாபாரிகளின்

தொழில்..!!

என்னை விட்டு விடுங்கள்

வாழ்வை

உரிமையை

எந்த விலைக்கும்

என்னால் விற்க முடியாது..!!

விசத்தைக் கக்கிய படியே

பார்வைக்கு அழகாய் நெளியும்

பாம்புகள் நீங்கள்..!!

முட்களோடு தான் என்றாலும்

ரோஜாவாக

ஜீவிப்பவள் நான்..!!

Image result for ரோஜா பூ

பண்டைய தமிழர்களின் அறிவியல் கண்டுபிடிப்பு





ஸ்கேன் என்பது வேகமாக சென்று கொண்டிருக்கும் இக்காலத்தில் கண்டுபிடிக்கபட்டது அல்ல.  இது அக்காலத்திலே கண்டுபிடிக்கபட்டது. நட்சத்திரங்கள், பூமி, கிரகங்கள், மரம், செடி, கொடினு அனைத்தையும் அவர்கள் ஸ்கேன் செய்து உள்ளனர். ஆனால் ஸ்கேன் என்று சொன்னாலே இக்காலத்தில்  எல்லோர்க்கும் நினைவு வருவது கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பற்றி ஆவலுடன் தெரிந்து கொள்வதே. ஆனால் இதனை இன்னும் விரிவாக அக்காலத்தில் எழுதி வைத்துள்ளனர். இந்த தகவல்கள் ’மார்க்கண்டேயே புராணம்’ நூலில் விரிவாகா உள்ளது.

அம்மா வயற்றில்  இருக்கும்  குழந்தைக்கு, இப்பொழுது  வயது 5 நாள் என்று  வைப்போம். இங்கு ஆரம்பித்து, 10-வது மாதத்தில்  குழந்தை பிறக்கும் வரைக்கும் நாள்கள் மற்றும் மாதங்கள் வாரியாக அந்த புராணத்தில் உள்ளது.

ஒரு மாதம் ஆனதும் தலை உண்டாகும். 2-வது  மாதம் ஆனதும் கை, கால்கள் உண்டாகும். 3-வது மாதம் நகம், முடி, எலும்பு, தோல், ஆணா-பெண்ணா என்பதற்கான அடையாளம், காது ஓட்டை, மூக்கு ஓட்டை உண்டாகும். 4-வது மாதம் தோல், ரத்தம், மேதஸ், மஜ்ஜை, சுக்கிலம்  போன்ற ஏழு தாதுக்கள் உண்டாகும். 5-வது மாதம் பசி, தாகம் உண்டாகும். 6-வது மாதம் கர்ப்பப் பையால் சுற்றப்பட்டு, அம்மாவின் வயற்றில் வலப் பக்கமாக ரவுண்டு அடிக்கும்.

7-வது மாதம் அந்த ஜீவனுக்கு ஞானம் கிடைக்கும். அம்மா சாப்பிடும் சாப்பாட்டு பானங்கள் மூலமாக வயற்றில் உள்ள குழந்தை வளர்கிறது. அப்பொழுது வயற்றில் குழந்தையின் தொப்புளில் ‘ஆப்யாயனீ’ என்ற நாடி கட்டப்படுகிறது. அதன் மறுமுனை தாயின் வயற்றில் இருக்கும் குடலின் ஓட்டையில் கட்டப்படுகிறது. இந்த நாடி (தொப்புள் கொடி) மூலமாகவே தாயார் சாப்பிட்டது-குடித்தது என அனைத்தும் கருவில் இருக்கும் குழந்தையின் வயிற்றில் சென்றடையும். அதன் மூலம் குழந்தை வளர்கிறது என்கிறது மார்க்கண்டேயப் புராணம்.


குழந்தையிலிருந்து வெளியேறும் கழிவுகள் அங்கேயே இருப்பதால் மிகவும் மிருதுவாக இருக்கும் அந்த குழந்தை உடம்பை அங்கு இருக்கும் ‘கற புழுக்கள்’ எல்லாம் ஒட்டுமொத்தமாக கடிக்கின்றன. அதை குழந்தையால் தாங்க முடியாமல் சில நேரங்களில் மயக்கமடைகிறது.

அம்மா சாப்பிடுகிற சாப்பாடுட்டில் இருக்கின்ற உப்பு, உறைப்பு, கசப்பு, தித்திப்பு, இவை எல்லாம் அந்த குழந்தையை பாதிக்கிறது. ஒரே வேதனைத்தான். தன்னை சுற்றி கர்ப்பபை. கர்ப்பபையை சுற்றி மாலை மாதிரி குடல், வளைந்த முதுகு-கழுத்து…வயிற்றில் தலையை மடித்து வைத்துகிட்டு குழந்தை அங்கேயே உள்ளது. உடம்பை சிறிதும் அசைக்க முடியவில்லை.  7-வது மாத்தில் அறிவு உண்டாகி அங்கேயும் இங்கேயுமா அலைகின்ற  குழந்தை நடுங்கும். இரண்டு கையையும் கூப்பின மாதிரி இருக்கும். எப்பொழுது வெளியே வருவோம் என்று காத்து கொண்டிருக்கும்.

10-வது மாதம் குழந்தை  வெளிப்பட காரணமாக இருக்கும் காற்று, குழந்தையை தலைகீழாகா வெளியில் தள்ளி விடும். அப்பறம் குழந்தை பிறந்து விட்டது.

இவை எல்லாம் மார்க்கண்டேயே புராணத்தில் கூறியவர், மருத்துவரோ, விஞ்ஞானியோ இல்லை. சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்.

மார்க்கண்டேயே புராணத்திலும், பாகாவத புராணத்திலும் இதை பற்றி கூறியவர், வியாச பகவான்.

இதன் மூலம் அறிவியல் நமது பண்டைய காலத்திலே இருந்து இருப்பதை காணலாம்.