சனி, 20 பிப்ரவரி, 2016

பேசாதிருப்பதனால்..!!


நான் பேசாதிருப்பதனால் 

ஊமையென்றோ..!!

உணர்ச்சிகளற்றவள் என்றோ

எண்ணிவிட வேண்டாம்.

உங்களைத் திருப்பதியிலாழ்த்தும்

பொய்களைப் பேச

நான் விரும்பவில்லை..!!

நான் அமைதியாக இருப்பதனால்

உங்கள் வாக்குறுதிகளை

நம்பிவிட்டதாக

முடிவுகளுக்கு

தலை சாய்த்து விட்டதாக

கருதிவிட வேண்டாம்..!!

இலாபத்தைப் பார்க்கும் உங்களுக்கு

நியாயத்தைப் பார்க்கும் எனக்கும்

ஒரு போதும் ஒத்துவராது..!!

உங்கள் தீர்மானங்கள் வேறு

என் தேவைகள் வேறு..!!

உள்ளதையெல்லாம்

விலை  பேசுவது

விற்றுச் சம்பாதிப்பது

சந்தை வியாபாரிகளின்

தொழில்..!!

என்னை விட்டு விடுங்கள்

வாழ்வை

உரிமையை

எந்த விலைக்கும்

என்னால் விற்க முடியாது..!!

விசத்தைக் கக்கிய படியே

பார்வைக்கு அழகாய் நெளியும்

பாம்புகள் நீங்கள்..!!

முட்களோடு தான் என்றாலும்

ரோஜாவாக

ஜீவிப்பவள் நான்..!!

Image result for ரோஜா பூ

4 கருத்துகள்:

 1. ஆஹா நந்தினி.மனிதனையும் ரோஜா மலரையும் அழகாக உவமைப்படுத்தும் கவிதையை பகிர்தமைக்கு வாழ்த்துகள் மா.

  பதிலளிநீக்கு
 2. பேசும் வார்த்தைகளுக்கு வரையறைக்குட்பட்ட பொருள்களைத்தான் எடுத்துக்கொள்ளமுடியும்..
  ஆனால் பேசாத வார்த்தைகளுக்கு..
  இப்படி பல்வேறு பொருள் கொள்ளமுடியும்..
  தங்கள் முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

  பேச்சுமட்டுமல்ல.. தாங்கள் முயற்சித்தால் உங்களுக்குள் ஒரு கவிதாயினி இருப்பதையும் தாங்கள் கண்டுகொள்ளலாம்.

  பதிலளிநீக்கு