வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

இடைநிலை


இடைநிலை;
முதலில் விவரங்களை ஏறுவரிசையில் எழுத வேண்டும்.
விவரங்களின் எண்ணிக்கை ஒற்றைப்படை எண் எனில் இதன் நடு உறுப்பு இடைநிலை அளவாகும்.
உதாரணம் 33 35 39 40 43
இதன் இடைநிலை 39 ஆகும்.
விவரங்களின் எண்ணிக்கை இரட்டைப்படை எண் எனில் இரு மத்திய உறுப்புகளின் சராசரியே அவற்றின் இடைநிலை ஆகும்.
உதாரணம் 33 35 39 40 43 48
இடைநிலை = 39+40/2 = 39.5
எளிமையாக கூற வேண்டுமெனில் 11 மாணவர்களின் எடை கொடுக்கப்பட்டுள்ளது எனக் கொள்வோம். இதில் இடைநிலை என்றால் 6-வது மாணவரின் எடையைக் கூறுவோம். இதே 10 பேர் இருந்தால் 5-வது மற்றும் 6-வது மாணவரின் எடையை கூட்டி இரண்டால் வகுத்தால் கிடைக்கும் விடையே இடைநிலை ஆகும்.
எடுத்துக்காட்டு
17 15 9 13 21 7 32
n=7 (ஒற்றைப்படை எண்)
இடைநிலை = நடுமதிப்பு
              = (n+1/2)
            = (7+1/2)
            = (8/2)
            =4-ம் இடத்தில் உள்ள எண்
              = 15
1.  ஒரு கிரிக்கெட் விளையாட்டு வீரர் எடுத்த ஓட்டங்கள் பின்வருமாறு 13 28 61 70 4 11 33 0 71 92 இவற்றின் இடைநிலை காண்க.
2.   கொடுக்கப்பட்ட விவரங்களின் இடைநிலை காண்க.
2 4 6 8 10 12 14

2 கருத்துகள்:

  1. அக்கா முதல் கேள்விக்கு சரியா தெரியல இருந்தாலும் முயற்சி செஞ்சு சொல்றேன் 0.
    இரண்டாவது கேள்விக்கு 8.சரியா..??

    பதிலளிநீக்கு
  2. இல்லை வைசாலி முதல் கேள்விக்கான பதில் 30.5 இரண்டாவது கேள்விக்கான விடை சரியானது. உங்களது முயற்சியை பாராட்டுகிறேன். தொடர்ந்து முயற்சி செய்ங்க.

    பதிலளிநீக்கு