வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

முதலாம் பாஸ்கரா


   


        இந்தியக் கணிதமேதைகளுள் ஆர்யபட்டவிற்கு அடுத்து, சிறந்த கணிதமேதையாகக் கருதப்படுபவர் முதலாம் பாஸ்கரா ஆவார்.  இவரது பிறந்த ஊர் பற்றிக் கிடைக்கப் பெறவில்லை. ஆனால் இவரது காலம் கி.பி.629 எனக் கருதப்படுகிறது.
     இவர், ஆர்யப்பட்டாவின் “ஆர்யபட்டீயம்” நூலுக்கு விளக்கம் கூறியுள்ளார்.  அவ்விளக்கங்களை பல ஆசிரியர்களின் வழியாக தான் அறிந்து கொண்டதாகவும் இவர் கூறியுள்ளார்.
     





     முதலாம் பாஸ்கரா தன் விளக்கநூலில் கூறப்பட்டுள்ள தகவலை ஆராய்ந்தால், அவர் இன்றைய குஜராத் மாநிலமாகத் திகழும் கத்தியவார் பகுதியிலுள்ள “வல்லபி” எனும் நகரைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 
     முதலாம் பாஸ்கரா மூன்று கணித நூல்களை எழுதியுள்ளார்.  அவை மகா பாஸ்கரீயம், லகு பாஸ்கரீயம், ஆர்ய பாலிய பாஸ்யம் ஆகியவை ஆகும்.
      இவர் ஒரு வானியல் நிபுணரும் ஆவார்.  கணிதத்தில் இவர் பல கண்டுபிடிப்புகளைத் தந்துள்ளார்.
      ஒரு முக்கோணத்தின் பரப்பளவைக் காணும் சூத்திரத்தை முதலாம் பாஸ்கரா கீழ்க்கண்டவாறு கூறியுள்ளார்.  முதலாம் பாஸ்கராவின் சூத்திரத்தின்படி, முக்கோணத்தின் மூன்று பக்கங்களின்  நீளங்களை மட்டும் பயன்படுத்தி (உயரம் தேவையில்லை) அம்முக்கோணத்தின் பரப்பளவைக் காணலாம்.  அச்சூத்திரம் பின்வருமாறு,
இதில்,                    S = (1÷2)(a+b+c)

                          



     ‘a’ என்பது ‘AB’ ன் நீளமாகும். b என்பது ‘BC’ ன் நீளமாகும்.  ‘c’ என்பது ACன் நீளமாகும்.
     ஒரு முக்கோணத்தின் 90º க்கு குறைவான கோணங்களைக் கண்டறிவதற்கான ஒரு எளிய சூத்திரம் ஒன்றையும் இவர் கூறியுள்ளார்.
     திரிகோணமிதி விகிதத்தில் பயன்படும் “சைன் அட்டவணை” ஒன்றையும் இவர் அமைத்துத் தந்துள்ளார்.  “மகா பாஸ்கரீயத்தில் 90 டிகிரிக்குக் குறைவான கோணத்தின் R சைனைக் கணக்கிட ஒரு சூத்திரம் கொடுத்துள்ளார்.

1 கருத்து: