உயர்ந்தவர் வழுவார்
பழமொழி
முன்றுறையரையனார்
ஒற்கத்தாம் உற்ற விடத்தும் உயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின்மேல் – வற்பத்தால் தன்மேல் நலியும் பசிபெரி தாயினும் புன்மேயா தாகும் புலி.( பாடல் எண் - 284)
புன்மேயா தாகும் புலி என்பது
பழமொழி. பஞ்சத்தால்
புலியின் பசி பெரிதாகி அதனை
வருத்தும் காலத்தும், புலியானது சென்று புல்லினை ஒருபோதும்
மேய்வதில்லை. அதுபோலத் தாம் வறுமையுற்ற காலத்தினும்
உயர்ந்த பண்புடையவர்கள் இழிந்த செயல்களைச் செய்யமாட்டார்கள்.
“ புலி
பசித்தாலும் புல்லைத் தின்னாததுபோல உயரந்தோர் வறுமையடைந்தாலும் இழிந்த செயல்களைச் செய்ய
மாட்டார்கள்”.
அருமை தோழி.
பதிலளிநீக்கு