கருமியின் செல்வம்
பழமொழி
முன்றுறையரையனார்
வழங்கலும் துய்த்தலும் தேற்றாதான் பெற்ற
முழங்கும் முரசுடைச் செல்வம் – தழங்கருவி
வேய்முற்றி முத்துதிரும் வெற்ப! அதுவன்றோ
நாய்பெற்ற தெங்கம் பழம்.
நாய்பெற்ற தெங்கம் பழம் என்பது பழமொழி. தெங்கம்பழம் – முற்றிய தேங்காய். நாய்க்கு
கிடைத்த முழுத் தேங்காயை அதனாலும் தின்ன முடியாது;
பிறர் எடுத்துச் சென்று அநுபவிக்கவும் அது விடாது. அதனைப் போன்றே தான் பெற்ற செல்வத்தை
வறுமையாளர்களுக்கு வழங்கித் தருமம் செய்யாமலும், தானும் அநுபவிக்காமல் காக்கும் கருமியின் செல்வமானது அவனுக்கும்
பிறர்க்கும் பயன்படாமல் அழியும்.
அருமையான விளக்கம் தோழி.
பதிலளிநீக்கு