வியாழன், 11 பிப்ரவரி, 2016

ஊழல் குறைவான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 76-வது இடம்..!!


உலக நாடுகளின் ஊழல் நிலவரம் குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்னும் அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது.இதில் அந்த நாடுகளின் ஊழலற்ற நிர்வாகம் ,ஊழலுக்கு எதிரான நடவடிக்கையின் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்படுகிறது.

2015-ம் ஆண்டு இந்த தரவரிசைப் பட்டியல் கணக்கீட்டு 168 நாடுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.இதில் 2014-ம் ஆண்டையப் போலவே ஐரோப்பிய நாடான டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்தையும்,பின்லாந்துக்கு 2-வது இடமும்,சுவிடனுக்கு 3-வது இடமும் கிடைத்தன.


ஆப்பிரிக்க நாடான சோமாலியாவும்,ஆசியா நாடான வடகொரியாவும் ஊழல் மலிந்த நாடுகள் பட்டியலில் கடைசி 2 இடங்களைப் பிடித்தன.இந்த பட்டியலில்இந்தியாவுக்கு 76-வது இடம் கிடைத்தது.2014-ம் ஆண்டு 85-வது இடத்தில் இருந்த இந்தியா 9 இடங்கள் முன்னேறி இருக்கிறது.


2014-ல் இருந்ததை விட இந்தியாவில் 2015-ல் ஊழல் சற்று குறைந்து காணப்படுகிறது.எனினும் இதில் இந்தியா பெற்றுள்ள மொத்த மதிப்பு 2014-ம் ஆண்டைப் போலவே 100-க்கு 38 ஆக இருக்கிறது.


இது குறித்து டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் தலைவர் ஜோஸ் உகாஸ் கூறுகையில் ஆசிய நாடுகளில் இந்தியா, இலங்கையைப் பொறுத்தவரை ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தலைவர்கள் அறிவித்த எதிர்ப்புகள் அவ்வளவாக நிறைவேறவில்லை.

முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது 2015-ல் 64 நாடுகள் ஊழலை கட்டுப்படுத்துவதில் முன்னேற்றம் கண்டுள்ளன.53 நாடுகள் இதில் பின்தங்கின.மற்ற நாடுகளின் நிலையில் ஏற்ற இறக்கம் எதுவும் இல்லை என்றார். 

Image result for ஊழல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக