ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

மொபைல் போன்களை சார்ஜ் செய்யும் காற்சட்டை கண்டுபிடிப்பு..!!இனி பற்றறிகளைச் சார்ஜ் செய்ய நீங்கள் இடம் தேடி அலையத்தேவையே இல்லை. பிற்பாக்கெட்டில் போட்டால் போதும் சார்ஜ் செய்துகொள்ளலாம். 

லண்டனில் உள்ள சவுத்ஹம்டன் பல்கலைக் கழகமும் வோடாபோனும் இணைந்தே இந்தனைக் கண்டுபிடித்துள்ளார்கள். 

நாம் அணியும் கால்சட்டையாக இருக்கலாம் இல்லை என்றால் ஜீன்சாக இருக்கலாம். 

ஆனால் நாம் நடக்கும்வேளை பின் புறத்தில் (அடிப்பகுதியில்) உராய்வு ஏற்படுவது வழக்கம். 

இதனை தான் விஞ்ஞானிகள் டெக்னிக்காகப் பாவித்துள்ளார்கள்.


உராய்வு ஏற்படும் பகுதியில் இவர்கள் ஒருவகையான நார் இழைகளை இணைத்துள்ளார்கள். 

உராய்வினால் ஏற்படும் வெப்பம் மற்றும் அதன் உராய்வை இந்த நார் இழை மின்சாரமாக மாற்றுகிறது.

எனவே நீங்கள் நடந்தால் மற்றும் உங்கள் உடல் உஷ்ணமாக இருந்தால் போதும் உடனே காற்சட்டை மின்சாரத்தை தயாரிக்க ஆரம்பித்துவிடும். 

பின்னர் என்ன அதில் ஒரு வயரைப் பொருத்தி மோபைல் போனுக்கு கொடுத்தால் போதும், அது சார்ஜ் செய்யப் பயன்படும். 

ஐபேட், ஐபொட், வாக்மென், மோபைல் போன் என பல சாதங்களை இனி சார்ஜ் செய்வது சுலபமாகிறது. ஆக நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்று தான். இக் கால்சட்டையை அணியவேண்டியது தான். 

இல்லை என்றால் அவர்கள் தரும் ஒரு விதமான நார் இழைகளை உங்கள் கால்சட்டையில் பொருத்தவேண்டும்.

இதற்கு பவர் பாக்கெட் என்று பெயரும் வைத்துவிட்டார்கள்.

இனி மின் வசதி இல்லாமலே மொபைல் போன்களை சார்ஜ் செய்யலாம் போல் இருக்கே..!!!

8 கருத்துகள்:

 1. வியக்கிறேன். எத்தனை வகையான கண்டுபிடிப்புகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான் ஐயா.தங்கள் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் ஐயா.

   நீக்கு
 2. அருமை தோழி!!! அனைவரும் அறிய வேண்டிய செய்தி

  பதிலளிநீக்கு
 3. நல்லதோர் கண்டுபிடிப்பு..... தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றிகள் பல ஐயா.

   நீக்கு