500 வது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
500 வது பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 5 மார்ச், 2017

500 வது பதிவு!


தமிழக அரசு மற்றும் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் இணைந்து இணையத்தில் தமிழை வளா்க்கும் நோக்குடன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களிலும், அவற்றுக்குட்பட்ட இணைவுபெற்ற கல்லூரிகளிலும் கணித்தமிழ்ப் பேரவைகளை ஏற்படுத்துமாறு அறிவுறுத்தியது.

                        கே.எஸ்.ஆா் மகளிர் கலை  அறிவியல் கல்லூரியில், தாளாளா் அரிமா கே.எஸ்.ரங்கசாமி எம்ஜேஎப் அவா்களின் அனுமதியுடன், செயலா் திரு. ஆா் சீனிவாசன் மற்றும் செயல்இயக்குநா் திருமதி கவிதா சீனிவாசன் அவா்களின் வாழ்த்துக்களுடன், முதல்வா் முதல்வா் மா.கார்த்திகேயன் அவா்கள் நெறிகாட்டுதலில் கணித்தமிழ்ப் பேரவை 15.12.2015 இனிதே தொடங்கப்பட்டது. தமிழ்இணையக் கல்விக்கழகத்திலிருந்து திரு.தமிழ்ப்பரிதி ஐயா அவர்கள் கலந்துகொண்டு எம் கல்லூரி கணித்தமிழ்ப்பேரவைக்கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
 
கல்லூரியின் ஒருங்கிணைப்பாளராக,  முனைவா் இரா.குணசீலன் அவர்கள் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது.

மாணவிகளின் ஒத்துழைப்புடன்,
1. கணினியிலும், தமிழிலும் ஆா்வமிக்க 

100 மாணவா்களைத் தேர்ந்தெடுத்தல்.


2. ஒருங்குறி முறையிலான தமிழ்த்தட்டச்சு முறையைக் கற்பித்தல்.


3. தமிழ்த்தட்டச்சு தெரியாதவா்களாக இருந்தால் அவா்களுக்கு தமிழ் 99 

முறையை பயிற்றுவித்தல்.


4. தமிழ் வலைப்பதிவில் எழுதும் முறையை அறிமுகப்படுத்துதல்.


5. தமிழ்விக்கிப்பீயா குறித்த அறிமுகம், அதன் பிற திட்டங்கள் குறித்த 

அறிமுகம், அதில் பங்களிப்பாளராகும் வழிமுறைகளைத் தெரிவித்தல்


6. தமிழ்க்குறுஞ்செயலிகள் குறித்த அறிமுகத்துடன் அவற்றை 

உருவாக்குவதற்கான பயிற்சிகளை வழங்குதல்


7. தமிழ் மென்பொருள்களை உருவாக்குதல்.


8. இணையத்தில் மின்னூல் உருவாக்குதல்


9. இணையத்தில் உள்ள நூலகங்களைப் பயன்படுத்த துணைநிற்றல்


10. இலவச மென்பொருள்கள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தி 

அவற்றைப் பயன்படுத்த வழிவகுத்தல் 


என்னும் நோக்கங்களுடன் எம் கல்லூரியின்  கணித்தமிழ்ப் பேரவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எமது பணியைப் பாராட்டி தமிழ்இணையக் கல்விகழகம் ஆதார நிதியாக ரூ 25000 வழங்கியுள்ளது.
இன்று எம் கல்லூரியில் 600 மாணவிகள் தமிழ் ஒருங்குறி வழியிலான தமிழ்த்தட்டச்சுப் பயிற்சிபெற்றுள்ளனர்.
கே.எஸ்.ஆா் மகளிர் கலை அறிவியல்கல்லூரியின் வலைப்பதிவில் தொடர்ந்து எழுதிவருகிறார்கள்.
எம் கல்லூரி மாணவிகள் கல்வி, அறிவியல், வணிகம், ஆன்மீகம், உளவியல், இலக்கியம், மொழிபெயர்ப்பு, படைப்பாக்கம் என எல்லாத்துறைகளிலும் எழுதிவருகிறார்கள். பல்வேறு நாடுகளிலிருந்து பார்வையாளர்களையும், மறுமொழிகளையும் பெற்றுள்ளனர். தமிழ்மணம் திரட்டியில தரவரிசையில் எம் கல்லூரி வலைப்பதிவு 122 வது இடத்தில் உள்ளது.
இன்று 500 பதிவு என்னும் இலக்கை அடைந்துள்ளனர். இந்த மகிழ்ச்சியான நேரத்தில் இந்த வலைப்பதிவில் எழுதிய ஒவ்வொரு மாணவிகளையும் வாழ்த்துகிறேன். குறிப்பாக வணிகவியல் துறை மாணவிகள் செ.வைசாலி, மற்றும் அ.கோகிலா, மற்றும் ஆங்கிலத்துறை மாணவி ஜெ.ஜனனி, மூன்றாமாண்டு கணிதவியல் மாணவி கு.நந்தினி ஆகியோருக்கு எனது சிறப்பான பாராட்டுதல்களைத் தெரிவித்துக்கொ்ளகிறேன். அவர்களை ஊக்குவித்த எம் முதல்வர் முனைவா் மா.கார்த்திகேயன் அவர்களுக்கும், ஆசிரியப் பெருமக்களுக்கும், வலையுலக உறவுகளுகம் நெஞ்சம் நிறைந்த நன்றியை உரித்தாக்கிக்கொள்கிறேன்.