சனி, 29 பிப்ரவரி, 2020

பழமொழி

புலி பசித்தாலும் புல்லை திண்ணாது
 நாய்,பூனை, போன்ற ஒரு சில விலங்குகள் தன் குட்டிகளை ஈன்றவுடன் பிரசவ வலி மற்றும் அப்போது ஏற்படும் அகோர பசியின் காரணமாக அவை ஈன்ற சில குட்டிகளை தானே தின்றுவிடும். ஆனால் புலி இப்படி தன் குட்டிகளை தானே உண்பது இல்லை அவைகளை பத்திரமாகவும் தன் பார்வையில் மிகுந்த கவனத்தோடு பராமரிக்கிறது. அதனாலே புலி பசித்தாலும் புல்லை திண்ணாது என்கிறோம். 

சிலப்பதிகாரத்தில் நாடகம்

1.பாண்டரங்கம்
2.கொடுகொட்டி
3.மரக்கால்
4.பாவை
5.துடி
6.குடை
7.அல்லியம்
8.குடம்
9.மல்
10.பேடி
11.கடையம்

மொழி

தாயும்
தன் குழந்தையும்
பேசிக்கொள்ளும்
சின்ன சிரிப்பே
யாரும் அறியாத
மொழி


வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

அறம் செய் ! புறம் பேசாதே !

                        ஒரு குறையும் இன்றி நாம் நம் வாழ்க்கையை வாழ விரும்பினால் ,அதற்கு ஏற்ற செயலை மட்டும் செய்து மறுபிறவி ஒன்று ஏற்பட்டால் அப்போதேனும் அந்த அறிய வரத்தினை பெற வேண்டும்.
                       அங்ஙனம் இன்றி இன்று நினைப்பதனை இன்றே பெற வேண்டும் என்று எண்ணி ,நாளை என்றொன்று இருப்பதனை மரத்தால் . அதாவது வரும் முன் காப்போம் என்பதனை அறியாதிருத்தல் .
                       எல்லாம் அறிந்தும் அறியாமையை தேடுகின்றனர் இன்றைய தமிழர் இந்நிலை மாற வேண்டும் . அறியாமையிலும் ,அறிவீனம் என்று நினைத்துக்கொண்டு தன் நலத்திற்காக பிறரை துன்புறுத்துகின்றனர் .                    உண்மை கண்முன் என்றாலும் பொய்மையின் பின்னால் கண்மூடி தனமாக கண்ணை திறந்தே நடக்கின்றனர் .
                       பிறரை நோக்கியேனும் அறிவோ , ஆக்கமோ கொள்ளாது பொறாமையும், பேராசையையும் கொள்கின்றனர் . தான் வெல்லாவிட்டாலும் , பிறர் வெல்ல கூடாதென்று சூழ்ச்சிகளை செய்யவும் துணிகின்றனர.
                      மனம் என்ற ஒரு இனம் அறத்தின் வளமாய் இருப்பதனை மறந்து சாதி ,மதம் , குலம் என்னும் என்றோ அறுத்தெறியப்பட்டதை . தான் நூலெடுத்து கோர்ப்பதாய் எண்ணி பிறரை ஊசியால் குத்துகின்றனர் .                  வன்முறையை அளிக்காவிட்டால் ,அறநெறியை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதனை இன்றளவிலும் உணராது செயல்பட்டு வருகின்றனர். .                         இன்றைய தமிழர் । நம் பிறப்பென்பதை யார் தீர்மானித்தாலும் !இறப்பை எமன் தீர்மானித்தாலும் ! நம் வாழ்வை நாம் தீர்மானிக்க வேண்டும் !                        அவற்றை அறிவாய், அளவாய், அழகாய், அமுதாய் அதாவது "ஆற்றில் போட்டாலும் அளந்து போடு " போல  வாழ்க்கையை கழிக்க வேண்டும் ।
                      அழியா வரம் வேண்டாம் , மறையும் வரை வாழ்ந்திடும் (ஆழ்த்திடும் ) வரத்தினை பெறவேண்டும். வாழ்க்கையை அழியா புகழோடும் , அனைவரும் அறியும் மிதலோடும் ,அணுகும் மனதோடும் ,அறியும் குணத்தோடும் வாழ்தல் வேண்டும் .
                       உன் தலையெழுத்து குறையாக இருந்தாலும் உன் கையெழுத்து முறையாக இருக்க வேண்டும் . தம் முன்னால் பிறர் போடாவிட்டாலும் ,பின்னால் பரைய கூடாது .
                                         நன்மை ஒன்றும் செய்யாவிட்டாலும் 
தீமையை என்றும் நீ தீண்டாதே
              கடவுளை காணாவிட்டாலும் உன் உள்ளம் அதை நீ உணர்த்திருக்காதே . காலம்  அது  கரைந்து போகையிலே 
கல்லாய் நீயும் மாறிவிடாதே .
                  கவிதை பேசும் வார்த்தைகள் எல்லாம் கல்லறைகள் கேட்காத என்பது போல,  இன்று உன் முன்னால் பயத்தினாலோ அல்லது எதிர்பார்ப்பினாலோ காலத்தையும் ,சூழ்நிலையையும் ,சுல்லலையும் பார்த்து உன்னை பாடிப் போற்றி பேசினாலும் , பேசாவிட்டாலும் .
                      பின்னால் இகழ்வதனை நீ அனுமதிக்காதே । உன்னை இகழ்வதனை நீ அறியாமல் இருக்காதே அவ்வஞ்ச புகழ்ச்சியினை உன் கல்லறையும் கேட்டவிடாதே
அறத்தினை செய் கூசாதே புரம் நின்று பேசாதே 

நதி உருவாகும் இடம்

சிந்து - பொக்கா - சூ பனியாறு (மானசரோவர் ஏரி)
பிரம்மபுத்திரா - கெமாயுங்டங் பனியாறு (மானசரோவர் ஏரி)
கோதாவாி - திரயம்பதேஷ்வரா் பீடபூமி (நாசிக்)
மகாநதி  - சிஹாவா (ராய்பூர்)

அப்துல்கலாம்

முதல் வெற்றிக்குப் பின் ஓய்வெடுக்காதீர்கள்,
ஏனென்றால் இரண்டாவதில் நீங்கள் தோல்வியடைந்தால், உங்களின் முதல் வெற்றி வெறும் அதிர்ஷ்டம் என்று பேச பல உதடுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.

தகுதி

உங்களுக்கு  ஒரு தகுதி  வேண்டும் என்றால் ,
அதை  நீங்கள்  பெற்று விட்டதைப் போல் செயல்படுங்கள்.  
அதுவாகவே நீங்கள்  மாறிவிடுவீர்கள்.
                                                  _ வில்லியம் ஜேம்ஸ்.

இயற்கையை காப்போம்

இயற்கை அளித்த மழைத்துளியை
மனிதன் காப்பதில்லை
கடவுள் படைத்த இயற்கையை
மனிதன் காப்பதில்லை
இயற்கை அளித்த நீரும் மணலும் காற்றுகூட
மனிதனின் பணத்தேவையாக மாறி விட்டது
தற்போது மனிதனிடம் ஒன்றும் இல்லை
ஆனால் அழிப்பதில் முன்நிற்கின்றனர்....
இயற்கையை காப்போம்...

6.1.2020 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

வியாழன், 27 பிப்ரவரி, 2020

தத்துவம்

இன்றே செய்ய வேண்டியதை நாளை வரை தள்ளிப் போடாதே.
சுறுசுறுப்பாக உழைத்துக் கொண்டிருக்கும் தேனீக்கு தூங்கக் கூட நேரமில்லை.

புதன், 26 பிப்ரவரி, 2020

பொய் மானிடா..... நீ எம் மண்ணிலா..... 

                தமிழ் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகிறது இன்றும் தனிமொழி என்ற சிறப்பினை இழக்காமல் இருக்கிறது.
                ஆனால் , தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் . நம் தாய்மொழி கல்வியை கற்க விருப்பமில்லாமல் , பிறமொழி கல்வியை கற்றுவருகிறோம்.
                இதில் தான் நம் அடிமைத்தனம் வெளிப்படுகிறது . ஆங்கிலேயர் ஆண்ட காலம் கடந்து சுதந்திர நாடக மாறியது என்று நாம் குறிக்கொண்டிருக்கிறோம் .
                ஆனால் , இன்றும் அந்நிய மொழிக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம் . அதனையே நம் சந்ததிக்கும் கொடுக்கிறோம் .
                உண்மையிலேயே நமக்கு நம் மண்மீது  பற்று இருந்திருந்தால் , நாம் நம் மொழியை  தான் முதன்மைப்படுத்தி  தாய்மொழி கல்வியை  உயர்த்தியிருக்க வேண்டும். உலகளவு பரவிய மொழியாய் மாற்றியிருக்க வேண்டும். 
                எம்மொழியிலும் இல்லா இலக்கணமும் , சொற்களும் உடையது ,  நம்மொழி .
                எளிதில் கற்க  , உணர வளம் கொண்ட நம் மொழி சிறப்புப்பெற செய்பவனே உண்மையான பற்றுடையோன் செயல் .
               நாம் அனைவருமே இன்றளவில் பொய் மானிடர்களாய் தான் நம் மண்ணில் இருக்கின்றோம் !
               தன் தாய்நாட்டிற்கும் , தாய்மொழிக்கும் வளர்ச்சியை  கொடுக்க செயல்பட்டு உழைப்பவனே என்றும் உண்மையான மானிடன் .
               நாம் எவ்வளவு தான் அறிவியல்  ரீதியாகவும் , பொருளாதாரரீதியாகவும்  உயர்ந்தாலும் நம் நாட்டையும் , மொழியையும் உயர்த்துவதில்லை .
               நீ விண்ணில்  நின்று பேசினாலும் ,விவாதமாய் பேசினாலும் உன் தாய் மொழிக்கு தலைவணங்கு .
       உன் மொழியில் பாடி நில் ! உலகமெங்கும் பரவ  செய் !
               உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு இடங்களில் சென்று சாதனை புரிந்தால் அது சரித்திரமில்லை!
தமிழ் மொழியை ஆங்காங்கே பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . அதுவே , உண்மையான சரித்திரம் !
               அவர்களை அடிமையாக்கவிட்டாலும் , நம் மொழியின் அருமையையும் , ஆழமும் அறிய செய்ய வேண்டும் .
               அடிமை தன்மையின் வலி உணர்ந்த  தமிழனுக்கு மற்றவர்களை அடிமையாகும் எண்ணம் என்றும் இருக்காது. இருப்பினும் ,
தன் மொழியின் சிறப்பை இழக்க  தமிழனின் மணம் ஏற்காது !
               இவாறான ,தமிழின் பெருமையை உணராது பிறமொழி மோகம் கொண்டு திரிபவனே பொய் மானிடன் !
பொய் மானிடன் எம் மண்ணில் மாண்டாலும் பயனடையான் !

கருப்பு அடைமொழி

கருப்பு நிறைந்த அடைமொழியாக கொண்ட வார்த்தை
கருப்புக் கண்டம்          -      ஆப்பிரிக்கா
கருப்பு நாடு                     -      பிட்லாந்து
கருப்பு நோய்                  -      பிளேக்
கருப்புச்சட்டம்              -       ரவுலட் சட்டம்
கருப்பு விதவை            -       ஒருவகை சிலந்தி
கருப்பு அழகி                  -       கிளியோபாட்ரா

அப்துல்கலாம்

வாழ்க்கையில் வெற்றி பெற்றக் கதைகளைப் படிக்காதீர்கள்..
அவை செய்திகளை மட்டுமே கற்றுத்தரும்...
தோல்வி பெற்றக் கதைகளைப் படியுங்கள்.
அவைதான் வெற்றிக்கான வழிகளை கற்றுத்தரும்....

செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

காலம்

தோழி கூட
எதிரியாகிவிடுவாள்

தண்ணீர்

தண்ணீர் இருப்பதோ கை அளவு
தேவை இருப்பதோ வான் அளவு
குடங்கள் இருப்பதோ நீண்ட அளவு
நீர் இருப்பதோ எள் அளவு
பயன்படுத்த வேண்டும் குறைந்த அளவு
சேமிக்க வேண்டும் அதிக அளவு...
         
13.10. 19அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

திங்கள், 24 பிப்ரவரி, 2020

உறவு என்னும் ஏமாற்றம்



             

                  ஒருவர் நம்மை விட்டு விலகும் போது சில விஷயங்களில் விட்டு கொடுத்து அவர்களை தக்க வைத்து கொள்ள முயலுகிறோம்.  ஆனால் இதற்கு பிரிவு மட்டும் தான் முடிவு என்று தெரிந்த உடன் அவர்களை அவர்கள் போக்கில் விட்டு விட வேண்டும் ஒரு பொருளின் மீது அதிகம் அழுத்தம் செலுத்தும் போது தான் அது வெடிக்கும் அதை விட்டு விட்டால் அதன் வீரியம் குறைந்து விடும். நம் வாழ்க்கையில் ஆயிரம் பொய்யான உறவுகள் இருக்கும், தேவைக்கு மட்டும் பழகும் அதி பயங்கர சுயநலம் மிக்க கூட்டத்தில் நாம் மிகவும் சுயநலமாக இருக்க வேண்டும். அனுதாப பட்டால் நாம் தான் பாவ பட்டவர்கள் ஆகி விடுவோம். தாய் தந்தை மற்றும் சிலரை  தவிர எந்த உறவும் நிரந்தரம் இல்லை. சில நண்பர்கள் நம் காலம் முழுவதும் இருப்பார்கள். பத்து நபருடன் பேசி மகிழ்ந்தாள் தான் நட்பு என்று அர்த்தம் அல்ல. நம்மை புரிந்து கொள்ள ஒரு உயிர் இந்த உலகத்தில் இருந்தால் கூட போதுமானது.

சிட்டுக் குருவி


அப்துல்கலாம்

ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல..
உன்னைப் போல சாதிக்கத் துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே...!

வெள்ளி, 21 பிப்ரவரி, 2020

தண்ணீரை சேமிப்போம்


ஆகலாம் அப்துல்கலாம்

இது உன் இளமை காலம்
இனிமை காலமாக இருக்கலாம்
இகழ்ச்சி அதை நீ இன்று ஏற்கலாம்
இழிவுகளை கொன்று புதைக்கலாம்
புகழ்ச்சி அதை மனதில் பதுக்கலாம்
வளர்ச்சி பெற நாளும் உழைக்கலாம்
தோல்வி பல நீ கண்டிருக்கலாம்
முயற்சி பல நீ செய்திருக்கலாம்
தன் உயிரை விட உறவை வளர்க்கலாம்
உயர்ந்த உச்சிகளும் உனக்கு உதிரிப்பூக்கள் ஆகலாம்
நல்லதோர் தலைவன் வேண்டி நாடே
இன்று காத்திருக்கலாம்
நிச்சயம் நீயும் நாளை ஆகலாம் அப்துல்கலாம்.

16.9.19 அன்று தினத்தந்தி நாளிதழில் வெளியான கவிதை.

பெரியார்

மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்.
மானமற்ற ஒருவனுடன் போராடுவது சிரமமான காரியம்.

பொன்மொழிகள்

ஒவ்வொரு துயருக்கும் பொறுமையே தீர்வு

புதன், 19 பிப்ரவரி, 2020

பெரும் பஞ்ச மூலம்

தழுதாழை,பாதிாி, பெருங்குமிழ்,
வாகை, வில்வம் எனும் ஐந்து
 மரங்களின் வோ்களைக் கொண்டு
செய்த கூட்டு மருந்து வகை.

படித்ததில் பிடித்தது

ஒரு அரசியல் வாதி ஒரு முதியவரிடம் 1000 ரூபாய் கொடுத்து எனக்கு வாக்களிக்க வேண்டும் என்றார், அதற்கு அந்த முதியவர் எனக்கு பணமெல்லாம் வேண்டாம் ஒரேயொரு கழுதை மட்டும் வாங்கி கொடுங்கள் போதும் என்றார் அந்த அரசியல் வாதியும் எங்கே எல்லாமும் தேடி பார்த்தார் 10000 ரூபாய் க்கு கீழ் கழுதையே கிடைக்கவில்லை பிறகு அந்த முதியவரிடம் சென்று 10000 ரூபாய்க்கு கீழ் கழுதையே கிடைக்கவே இல்லை என்றார் அதற்கு அந்த முதியவர் என்னுடைய மதிப்பு கழுதைய விட குறைவா என்றார், ஆகையால் நான் என்னுடைய வாக்கை விற்க்க மாட்டேன் என்றார்...

இடைக்கால இலக்கண நூல்கள்

நன்னூல்,
யாப்பருங்கலம்,
யாப்பருங்கலக்காரிகை,
புறப்பொருள் வெண்பாமாலை,
நம்பியகப்பொருள்,
நேமிநாதம்,
தண்டியலங்காரம் 

சிந்தனை

 சிந்தித்துக் கொண்டே
இருப்பதனால் சிறந்து விளங்கிட
முடியாது.........சிந்தனையை
செயல்படுத்தினால் மட்டுமே
சிறப்படைய முடியும்....

அக்காள்

என் தாயிற்கு நிகரானவளே
நீ கண்களாக இருந்தால் நான் கருவிழியாவேன்
பகலாக இருந்தால் நான் கதிரவனாவேன்
இரவாக இருந்தால் நான் நிலவாவேன்
முட்களாக இருந்தாலும் உன்னை நான்
தாங்கிக்கொள்வேன்
என் இதயத்தில் வைத்து...

9.9.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

அம்மா

என்னை சுவாசிக்க
வைத்தவளுக்கு
நான் வாசித்த முதல் கவிதை
அம்மா....
அதில் அவள் பெற்ற
ஆனந்தத்தை என்றும்
நான் கொடுக்க வேண்டும்
என்று நினைக்கிறேன்.

29.7.19அன்று தினத்தந்தி  நாளிதழில் வெளியான கவிதை.

இன்றைய சிறப்பு

எத்தனை பேருக்குத் தெரியும்....
காமராஜர் முதன் முதலில் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கியது பாரதி பயின்ற எட்டையபுரம் இராஜா மேல்நிலைப்பள்ளி என்று....

துடித்தெழு தமிழா 

                                          உயிரினமே நீ உயிர் இழந்து இருப்பதனை இன்னுமா அறியவில்லை. உலகில் உயிர்கலெல்லாம் உணர்ச்சியற்று கிடக்கின்றன.உறவுகள் கோடி இருப்பினும் உன்னதம் அறியா பிழைக்கின்றன .
               உடல் மண்ணுக்கில்லையாம் ! உயிர் உற்றோருக்கில்லையாம் !                                                உடன் பிறந்தோராயினும் வெவ்வேறு உருவமாம்.  உயிர் பிழைத்தால் போதும் உணர்வுகள் இல்லையாம் . உயிர்கள்கொள்ளையாம்,உள்ளமே இல்லையாம்
உணர்வுகள் தொல்லையாம்! உம்மின் உணர்ச்சிகளுக்கே எல்லையாம்।                              உருகிய பனிமலையே ஓடாத ஓடையானால் ! எரியும் எரிமலையே எரிந்து சம்பலானால், உச்சியில் ஊற்றுகளே  உக்கிரத்தில் வேர்த்து போனால். இந்த உணர்ச்சியிலா உயிரினம் ஈடேறுமா, இல்லை கடேறுமா . கவலைகள் இல்லையாம் நம் நாடு கலையிழந்தாலும் ! இங்கு அடிமைகள் கொள்ளையாம் நம் மண்ணில் விதை விளைந்தாலும் !
                       ஐவகை நிலங்களுக்கு தொப்புள் கொடி அறுத்து நம் தாய் நாடாம்!ஆனால், இன்று தொட்டிலில் அழும் குழந்தைக்கு தினைமாவு தீவனமாம்.தீர்த்தார் பசிபோகும் தீர்ந்தால் ருசிபோகும் .
                        தாய் பால்(வெள்ளை) மனம் மறந்ததென்ன.நம் பாண்டியர் குலநாட்டிலே ! ஆவின் துயர்த்தித்தான்(பசுவின் துன்பத்தினை போக்கினான் ) ,புறாவுக்கு ஈடறுத்தான் (புராவிற்கு நஷ்டஈடாக  தன் தசையை  கொடுத்தான் ) என்றல்லவா போற்றியது சங்க நூல்கள் .
                       தமிழர் , புலவர்களின்  ஓலைச்சுவடிகளை ஆற்றில் விட்டு , அந்நியர் அண்டை நாட்டவர்கள் அதனை பெற்று , ஐம்புலன்களை  அனைத்தையும் கற்று , அடிமைகளாய் நம்மை ஏற்று , அதிர்வில்லா அடைக்கலம் இட்டு .
                      நம் ஐம்பொறிகளை தீயில் சுட்டு, நடைபிணமாய் ஆக்கினரே அன்றாவது அறியவேண்டாமா ? அவர் சுட்ட புண் எரிச்சலை தாங்கிக்கொண்டோம் . நம் உணர்ச்சிகள் பொங்கி வழிவதனை நாம் எங்கே கண்டோம் .
                      சேரன்,சோழன் ,பாண்டியன் என்னும் மூவரை வைத்து முக்காலம் வென்று ! முற்றையும் அறிந்து நாம் என்னத்தை கையாண்டோம்.  நமது , எண்ணத்தையே நாம் கைதீண்டோம்.  இஸ்லாமியன் ஆயினும் என் தமையன்! கிருத்துவன் ஆயினும் என் மைத்துனன் என்றெல்லாம் ஊரறிய உமிழ் இறைத்தோம் !
                     இன்றோ , ஒரு படி நெல்லுக்காக உற்றானும் ஊரான் என்கிறோம் . பஞ்சம் பாடுகிறது நாம் அதில் தான் ஆடுகிறோம் . என்ன தான் நாம் நம் தாய் திருநாட்டில் வாழ்ந்தாலும் , தமிழ் மொழி  ஆயிந்தாலும், அறிகிறோமா நாம் ஆயிரத்தில் ஒன்றென ! மொழிகிறோமா என் தாய் திருநாடென! அன்று அவனாய் வாழ்ந்தான் ! இன்று இவனாய் வாழ்க்கிறான் ! நாளை எவனோ வாழ்வான் ! என்று தானே நாம் இன்னும்  ஏய்கிறோம்.
                   முக்காலத்தையும் வென்ற முந்தைய தமிழர்களே கேளுங்கள் ! முயற்சிகள் இன்றி முன்னேற்றம் கண்டதுண்டோ ? இகழ்ச்சிகள் இன்றி நாம் இன்னிமைகள் வென்றதுண்டோ ? இன்னா சொல்லையும்  இன்சொல்லாக ஏற்று ஈடுகொடுங்கள் ! இடைவிடாது ஈரம் விடுங்கள் ! " ஆற்றில் கடப்பதனால் பாறை கரைவதில்லை , ஆழம் இருப்பதனால் கடலும் வற்றவில்லை " கரையில் மிதக்கும் காகித கப்பலா ?
 கடலில் கிடக்கும் முத்தின் சிப்பிகளா ? முடிவெடுங்கள் ! - முடிவாய் எண்ண முயன்றால் கூட முட்டாள் என்ற சொற்பதம் அடைவாய் ,சரியாய் பாதையை தொடுத்தல் சொர்க பதம்  அடைவாய் .

திங்கள், 17 பிப்ரவரி, 2020

தலை புரண்ட தமிழகமே ! தத்தளிக்கும் தாயகமே !

தமிழா தரணியிலா ? தண்ணீரிலா ? நீ கல்லாகக் கரைந்தது?
மண்ணிலா ? மலையினிலா ? உன் மனம் கல்லாக உரைந்தது ?

உயிர்வாழ உணவிட்டான் தமிழன். பின்பு உறவிற்கே உணவிட்டான் அமிழ்தன். பின்பு உரையிட உணவிட்டான் எனில் விற்றான். பாசம் என்பது பணத்திற்கு அடிமையானது!. பந்தம் என்பது கடமைக்கென்றது!. நேசம் என்னும் சொல்லே நாசமாய்ப் போனது!. புது வாழ்வு என்ற பெயரில் பொதுவாழ்வையே மறந்தனர் தமிழர்.

சுயவாழ்வு என்ற பெயரில் நன்றாகச் சூரனையும் வென்றனர். சொர்க்கபதம் வேண்டில் சொற்பதம் வேண்டும் ஐயா நம் நாவில். இவை அனைத்தும் அற்புதம் தான் இன்று நம் வாழ்வில் .

அன்னையே, அய்யனே என்பவைகூட அந்நிய சொல்லால் பிணமே, சவமே என்றாயின. எனினும் அதில்தானே நாம் பெருமிதம் அடைகிறோம்.

பத்து மாதம் சுமந்தெடுத்த பச்சை முத்து அம்மா என்றழைத்தால், அதனைக் கேட்க ஆறளவு காதுகள் போதுமா!. அதனைக் காண ஆயிரம் கண்தான் ஆகிடுமா!.

அய்யன் என்பது ஆயிரமாயிரம் அடியெடுத்த இமயத்தின் இருதயமாய் விளங்கும் சிவனடியானை அல்லவா குறிக்கும்.

அம்மையப்பனின் முகமே  ஆட்கடவுள் எனத்தானே தன்னை ஈன்ற பெருமானை ஈசனுக்கு ஒப்பாக அழைத்தான் அன்றைய தமிழன்! அறிய வேண்டாமா? அறிந்துதான் திருந்த வேண்டாமா?
                    
தொட்டிலில் அழும் குழந்தைக்குத் தன் உறவு, சொந்தம், பந்தம், மாமன், மைத்துனன் பெயர் சொல்லி, இன்னார் உனக்கு இவ்வழி உறவினரப்பா! இவருக்கு நீ இதை செய்யம்மா! எனத் தன்னையறியா வயது முதலே தன் கடமையை அறியச்செய்து தாலேலோ பாடிய அன்றைய அன்னையை அன்னப்பறவைக்கு  உவமயக்கவா? அவளையே உரிமை கேட்கவா? இன்றைக்குத் தாலேலோ தாயகமே இங்கு தலைபுரண்டு கிடக்கிறதே!. வீட்டில் மூத்தவரோ, குடும்பத்தில் ஒருவரோ இறந்துவிட்டால்! அவரை, நினைவுகூறவும், அவரது சந்ததிகளை நிலை நிறுத்தவும்। இன்னது செய்து என்னை ஆளாக்கினீர்! இன்னதைச்செய்ய என்னை வேராக்கினீர் என்று பாடினர்.
                          
இன்றோ உயிர் வாழ்ந்தும் நடை பிணமாக இருக்கின்றனர். இல்லம் என்பது மட்டுமே இவர்களின் அடையாளமாய் இருக்கின்றது. இன்றையநிலை வயதானதா, தசை சோர்ந்ததா! எனக்கு மணமுடிந்ததா உடன் பணம் சேர்ந்ததா! இனி அன்னையில்லை, தந்தையில்லை அநாதை எனினும் அதில்தான் ஆனந்தம் இருப்பதாக நாம் அலைகிறோம்.
                          
அறியாத தவறினால் ஏற்படும் புரியாத வலிக்கு! மருந்தும் மனதிற்கு விருந்தும் அவர்களால் மட்டுமே தரஇயலும் என்பதனை இன்னோடியும் நாம் உணரவில்லை .
                          
அவர்கள் சொல்லிற்கு என்றும் செவிசாய்ந்ததுமில்லை! அந்நியர் சொல்லுக்கு என்றும் செவி ஓய்வதுமில்லை! அந்நியனாயினும் அவனுக்குத்தான் நான் அடிமை. என்னதான் நாம் ஒரு சுதந்திர மனிதராக இங்கு இருந்தாலும் .
                             
இப்பொழுதும், இன்னோடியும் அடிமைத்தனம் ஒன்றே நமது அங்கீகாரச் சின்னமாக இருக்கிறது. மாற்றம் தேவை! ஈன்றாலே தாய் அவளைத்தான் மறைப்பாயா? உன் ஈட்டியான தந்தையையே நீ சிதைப்பையா! தன்னை வளர்த்த தாய், தந்தைக்கே  கடமைப்பட்டேன் என்பனவே மாமனிதன்.

இச்சொல்லை ஏற்பவனே மனித குலத்தவன். சிந்தித்து செயல்பட்டால் சீர்திருத்தப் பள்ளி வேண்டுமா!. சிந்தையை உன்னித்தால் சிறை காட்டும் நிலை கூடுமா!. சொல்லால்பிறர் சொல்வதால்  விளங்காமையும் இவ்வாறான ஆயுத எழுத்தால் ஆணிபோல் ஆழ்மனதில் அச்சிடும் என்னும் நோக்கோடு செயல்பட்டேன்!  சிந்தித்தால் மந்தையில் உமக்கு எல்லை ஏது?

சிந்திப்பீர் செயல்படுவீர்! சிந்தைக்கே சலாமிடுவீர்! 

பவித்திரம்

 91.அன்புள்ள ஆசிரியருக்கு
அன்புள்ள ஆசிரியருக்கு
அன்பளிப்பு அளிப்பதற்கு
ஆசான்வில் தொடுப்பதற்கு
அமுதமதில் தெளிப்பதற்கு
அர்த்தங்களை உரைப்பதற்கு
ஆசான்களே கூடி வருகஎமக்கு
அறிவுப்பொருள் தந்து அருள்க

92.காலம்
வாழ்ந்த காலம்
கவிதையைப் போன்றது
வாழும் காலம்
கடிதமே ஆனது
வாழ்க்கையே ஓர்
கதைபோல் தோன்றுது

93.சேதி
பாடியது பாதி
பாடுவது மீதி
நாடே நம் வீதி
நன்மை தரும் நீதி
நட்பே  நம் ஜாதி
இதுவே ஏன் சேதி

94.மறுக்குமா
காண மறுக்குமா
நம் கண்கள்
கேட்க மறுக்குமா
நம் செவிகள்
பேச மறுக்குமா
நம் இதழ்கள்
என் மனம் மறுக்குமா
உன்னை நினைக்க

95.இல்லை
நீ ஒன்றும் அழகில்லை
அழகால் எதுவும் பயனில்லை
உன் அறிவிற்கோர் எல்லையில்லை
ஆனாலும் அதை நீ வாடவிடுவதில்லை
நீ அன்பிற்கு அணையிட
அது ஆற்றோர  அலையில்லை
உனக்கு அக்கடலினும் சுமை கொள்ளை
ஆனால் அதை நீ பொருட்படுத்தவில்லை
எனவே நீ வெற்றியை விட்டதில்லை
தோல்வியைத் தொட்டதில்லை

96.என் ஆசிரியை
என் செவிலித்தாயே
என்னை நீ ஜெவித்தாயே
நீர் ஓர் பெண் மகளின் தாயே
எம்முள் ஓர் பொன்மகளும் நீயே
உன் ஆற்றல்தான் உன் மேனி
அச்சமின்றி பணியாற்றலாம் வா நீ
உந்தன் சிரிப்பே  உனக்குச் சிறப்பு
உந்தன் உன்னதமேஇங்கு
தோன்றுது எனக்கு

97.உனக்கென நான்
பூ மணம்
உதிரியாகும் வரை நிலைக்கும்
என் மனம் உனக்காக
உயிர்சாயும் வரை நிலைக்கும்

98.அகிம்சையின் காந்தியடிகள்
அமைதி வழி சுதந்திரம் பெற்ற
ஆத்ம சாந்தியே
அறம்வழி வாழ்க்கை வாழ்ந்த
அமுத சுரபியே
அன்றாடம் அன்பை வளர்த்த
அய்யனும் நீயேஎமக்கு
ஆதரவாகத் தோள் தந்த
ஆற்றல் தலைவனே
அச்சம் இன்றிப் போராடி
அந்நியனை வென்றவனே
அகிம்சை நாயகனே
மகாத்மா காந்தியானவனே

99.உனைப் பிரிந்தும் நான் உன்னால் தானே
உயிர்துறக்க நினைத்தால்கூட
உனைப்பிரியும் நிலையென்றேன்
என் உயிராக நீ நின்றால்கூட
உனைப்பிரிந்து நான் நின்றேன்
விழி இமைக்காது காத்திருக்க என்
விழியின் எல்லை நான் மறக்கிறேன்
விழிக்கையிலும் இருளில் வாழ்ந்து
இங்கு நான் தாழ்கிறேன்
இமைக்கையிலும் ஒளியைக் கண்டு
பயந்து நான் வீழ்கிறேன்
என் உயிரே இன்னோடியும் உன்னை
நினைத்தே வாழ்கிறேன்
உன்னைக் கண்ட நொடியினிலே
சாகாவரம் பெற்றிருந்தேன்
இலையுதிர் காலத்திலும் 
இரையாமல்தான் நானிருந்தேன்
என் இதயம் உன்னால் இரையா
இறப்பும் இன்று இனிதென்றேன்
என்னை அறியா நான் அழுகையிலே
மழைத்துளி போலும் என்றிருந்தேன்
சுட்டெரிக்கும் வெய்யிலிலும் குளிரால்
நானும் உறைந்து நின்றேன்
சுலைப்பணிக் குன்றிலேறி  வெட்கை
உதறி நான் சென்றேன்
உன்னைக் காணும் வரம் கிடைத்தால்
ஏறி மலையை நான் அணைப்பேன்
ஆழ்கடலை அதில் தெளிப்பேன்
பாலை வனத்தினில் பயிரிடுவேன்
பசும்பொன் அதில் விளைப்பேன்
பரிசம் போட நீ வருக!!!! பாவை மனம் அமுதனுக!!!!
காத்திருப்பேன் மனமுருக!!!! என்னைக்
காண வந்து இக்கவி பெறுக!!!!
கவிதை ரசம் நீ பருக!!!! காட்சி வசம்தான் தருக!!!!

100.மாயமாய்
மேகத்தில் கருநீலமாய்
வானம்போல் தொலைதூரமாய்
நிலவைப்போல் வெண்மணமாய்
சூரியனைப்போல் வெகுவேகமாய்
பூமியைச் சுற்றி வந்தாயே வீரமாய் நான்
காற்றைப்போல் சில காலமாய் உன்னைத்
தொடர்கிறேனே உன் தேகமாய் இன்று
நான் உன்னில் தொலைந்தேனே
ஏதோ மாயமாய்

பவித்திரம்

82.கனவு
ஒரு நாள் கண்ட கனவு
ஒரு நாள் ஆகும் நினைவு
இருபால் கொண்ட துணிவு
நம் மனம் பெற்ற அமைவு
பெற்றதோர் திருமணம் என்ற உறவு.

83.நட்பு
கனம் கண்டு தயங்காதிருந்தால்
குணம் கண்டு மறுக்காதிருந்தால்
இனம் கண்டு வெறுக்காதிருந்தால்
இறுதிவரை இணைந்திருப்பவர்கள் மட்டுமல்ல
இரண்டு நிமிடம் பேசிச் சிரித்தவர்களும் மட்டுமல்ல
இமையசைக்கும் நேரத்தில் இழந்தவர்களும் நண்பர்கள் தான்

84.என்னுள்ளே எண்ணங்கள்
ஏதோ எண்ணங்கள் எண்ணுள்ளே தோன்றியதே
அதை எண்ணித்தான் பார்க்கையிலே
என்னைத்தான் காணலயே
விடியலையே காணாமல் என் விழிகள் இருக்கிறதே
இருளைத்தான் போக்கிவிட்டால் - என்
இதயம்தான் தவிக்காதே
எரிமலையே வெடித்தாலும் என்னுள்ளே
பனித்துளியாய்ப் பொழிகிறதே
பனிமலையே சரிந்தாலும்உன்
வெப்பம் என்னைக் கொல்கிறதே
சூரியனாய் நீ சுட்டெரித்தால்
சுகமாய் நான் செத்தொழிவேன்
நிலவாய் நீ ஒளிதந்தால்
நீங்காமல் நின்றிருப்பேன்
நீதிசொல்ல நீ வந்தால்
குற்றங்கள்தான் வாழாதே
நிஜத்தைச் சொல்லி நீ சென்றால்
என் மனமும் தான் வாடாதே
சொல்லாமலே உன் விழிசொல்ல
மெளனம் கொண்டு நீயும் ஏங்காதே

85.உன் நினைவு வேண்டும்
உன்னைப் பார்த்த சில நாட்கள் கடக்க நிலையாகும் 
இன்னேரத்தில் நீ என்னைப் பிரிய நேர்ந்த காரணம் என்னவோ 
அறிய மனமில்லை
உன் அன்பில் வாழவே இந்நொடியும் எனக்கு ஆசை கொள்ளை
அழாத விழிகள் உலகில் இல்லை அழுகின்ற விழிகள் உனக்கு
கொள்ளை புன்னகை தேடியதே உன்னை என் இடம் எங்கேயென
புலம்பலும் கூடியதே நீதானே என்
உன்னுள் உணா்வாய் வாழ ஆசைப்பட்ட என் இதயத்திற்கு
நினைவாய் வாழும் தகுதியேனும் கிட்டுமோ தெரியவில்லை
ஆனால் உன் நினைவோ என் நிறைவிலும் கூடநிற்கும்
நீண்டநாள் கனவு, நனவாகும் என்று எதிர்பார்ப்பது வழக்கம்
ஆனால், இன்று என் சிலநாள் நினைவு நீண்டகாலக்
கனவிலும் வேண்டும்
உறக்கத்தில் அணையா உயிராக
உணர்வில் உந்துகோலாக
உன் உறவு வேண்டுமடி என் உயிர்தான் வாடுமடி

86.தேடல்
உன்னைக் காணாத காரணமே
என் கண்கள் கலங்க
உன்னுள் வாழ்கின்ற உணர்வுகளே
என் காதல் சிறக்க
உன்னகம் சேர நாடுகிறேன்
உன்னைத்தான் - நான்
இங்கு தேடுகிறேன்

87.உன்னைத் தொடர்வேன்
தொட முடியாத உயரத்தை
நான் உன்னால் தொட்டேன் அன்று
இன்று உன்னுடன் தொடர்கிறேன்
என் உயிருடன் என்றும் தொடர்வேன்

88.வீழ்ந்தேன்
என் கண்கள் என்ன பாவம் செய்தன
உன்னைக் காணாது தவிக்கின்றன
என் நெஞ்சம் கொண்ட தவத்தின் வரவோ
உன் நினைவு கொள்கிறது
ஏன் பஞ்சம்? உன்னைக் காணாமலா
நீ சொல் கொஞ்சம் இதுவே முடிவா ?
நம் காதல் என்ன சிதறிய கடுகா
விரும்பியே விடத்தினை விழுங்கிவிடவா
வீரத்தை இழந்து வீழிந்தேன்  தலைவா

89.ஓடு
உயிர்வாழு உறவோடு
உன்னதம் உன் உயர்வோடு
உமக்காக விரைந்தோடு
வேர்த்தாலும் கரைந்தோடு
காற்றோடு கலந்தோடு
காயங்கள் கடந்தோடு
தலைகனம் தவிர்த்தோடு
சரிந்தாலும் நீ மீண்டும் எழுந்தோடு

90.சிறந்தது
குயிலின் அழகை விட
மயிலின் அழகு சிறந்தது
மயிலின் குரலை விட
குயிலின் குரல் சிறந்தது