சனி, 15 பிப்ரவரி, 2020


26.இருக்கிறேன்
நீ முன்னால் வரும் நேரத்தில்
தன்னால் சிரிக்கிறேன்
உன் பின்னால் வரும் நேரத்தை, எண்ணி
இன்னால் இருக்கிறேன்
27.நீயாக வேண்டும்
நீ தான் என்னுடன் நிலையாக
வர வேண்டும்
நான் தான் உன்னுடன் உயிராக
வாழ வேண்டும்
நாம் என்றும் உரையாத உருவாக வீழ வேண்டும்

28.வாழ்வேன்
நான் காதல் கொண்ட உம்மை
கனவு தேசத்திற்கு அழைத்து
கவிதை வசனம் படித்து
கவலை எல்லாம் மறைத்து
கவனம் உன் மேல் வைத்து, உன்,
கண்ணில் என்னை வைத்து, என்,
கயமனதில் உன்னை மெய்த்து
கால வரயரையை பொய்த்து
காதலோடு வாழ்வேன்..
29.உன் உணர்வுகள் கொள்ளை
உன்னை போல் ஓர்,
நிலையான உறவு உலகில் இல்லை
உன்னை தாண்டி ஓர்,
நிலையாக உயர்வும் என்னிடம் இல்லை
உன்னை கண்டும் ஓர்,
நினையாத உள்ளம் எனக்குள்ளும் இல்லை
உன்னுடன் உரைந்தோடும்
உணர்வுகளோ எனக்கேனோ கொள்ளை
30.மறையாத நினைவு
கண்களில் காண்பதெல்லாம் உன்னை தான்
கண்ணாய் காண்பதும் உன்னை தான்
கண் விழி உருகினாலும், என் விழி உரைந்ததே!..
என் கண்மணி இமைத்தாலே கரையுமோ..
உன் உருவம் தான்..
நான் சழிக்காமல் நின்றால் தான் சிதறாதோ..
என் பருவம்..
என் கனவோ கல்லறைக்குள்ளே சென்றாலும்,
என் மனமோ மண்ணாகி மறைந்தாலும்
மறையாதே உன் நினைவும்..


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக