திங்கள், 17 பிப்ரவரி, 2020

பவித்திரம்

61.உன்னால்
என் வாழ்வில் நீ தோன்றிய
நாள்தான் என் வாழ்வின் பொன்னாள்
அதுவும் அழகே உன் கண்ணால்

62.உன்னைக் கண்ட நொடியில்
உன்னைக் கண்ட நாள்முதல் உரக்கமில்லை
உன்னைக் காணாத நாட்கள் என்று ஒன்றுமில்லை
உன்னைக் கண்டதால்தானே என் கனவில் தொல்லை
உன்னைக் காதல் செய்ய
என் நெஞ்சம் ஏங்க
உந்தன் கண்கள் கேட்குதடா
மனதில் ஒன்றும் மாற்றமில்லை
மறப்பதற்கென்று ஒன்றுமில்லை
மனம் மனதோடு சேரவே
இன்பம் இணையரே

63.நாம்
நிஜமான உறவே
நிச்சயம் விளைவே
நியாயமான வரவே
நிலைத்திடும் உயிர்வே

64.அற்புத உறவே(நட்பு)
நட்பினைப் போலொரு அற்புத உறவை
நானிலம் முழுவதும் தேடினும் பார்க்குமோ?
ஔவையோ டதியமான் கொண்டநல் நட்பை
அருங்கன் நெல்லி எடுத்துரைக் காதோ!
பாரியும் கபிலனும் சீரிய நண்பராய்
வாழ்ந்த நிலையை இலக்கியம் இயம்பும்!
அன்னையாய் அன்பினைப் பொழியும்
அய்யனாய் நல்வழி காட்டும்
அத்தனை உறவும் ஓர்வடி வெடுத்தே
அன்போடு இன்பம் அளித்திடும் நட்பே

65.தமிழ் மீது பற்று
பிறக்கையிலே நான் பிடி கொண்டேன்
தாய் தழுவையிலே நான் விழி கொண்டேன்
தங்கை அழைக்கையிலே நான் செவி கொண்டேன்
தாமரை மலரையிலே நான் மதிகண்டேன்
தமிழே உன்னைப் படிக்கையிலே
உன்மீது நான்பதி கொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக