பொய் மானிடா..... நீ எம் மண்ணிலா.....
தமிழ் தோன்றி பல நூறு ஆண்டுகள் ஆகிறது இன்றும் தனிமொழி என்ற சிறப்பினை இழக்காமல் இருக்கிறது.ஆனால் , தமிழர்களாகிய நாம் என்ன செய்கிறோம் . நம் தாய்மொழி கல்வியை கற்க விருப்பமில்லாமல் , பிறமொழி கல்வியை கற்றுவருகிறோம்.
இதில் தான் நம் அடிமைத்தனம் வெளிப்படுகிறது . ஆங்கிலேயர் ஆண்ட காலம் கடந்து சுதந்திர நாடக மாறியது என்று நாம் குறிக்கொண்டிருக்கிறோம் .
ஆனால் , இன்றும் அந்நிய மொழிக்கு நாம் அடிமைகளாகவே இருக்கிறோம் . அதனையே நம் சந்ததிக்கும் கொடுக்கிறோம் .
உண்மையிலேயே நமக்கு நம் மண்மீது பற்று இருந்திருந்தால் , நாம் நம் மொழியை தான் முதன்மைப்படுத்தி தாய்மொழி கல்வியை உயர்த்தியிருக்க வேண்டும். உலகளவு பரவிய மொழியாய் மாற்றியிருக்க வேண்டும்.
எம்மொழியிலும் இல்லா இலக்கணமும் , சொற்களும் உடையது , நம்மொழி .
எளிதில் கற்க , உணர வளம் கொண்ட நம் மொழி சிறப்புப்பெற செய்பவனே உண்மையான பற்றுடையோன் செயல் .
நாம் அனைவருமே இன்றளவில் பொய் மானிடர்களாய் தான் நம் மண்ணில் இருக்கின்றோம் !
தன் தாய்நாட்டிற்கும் , தாய்மொழிக்கும் வளர்ச்சியை கொடுக்க செயல்பட்டு உழைப்பவனே என்றும் உண்மையான மானிடன் .
நாம் எவ்வளவு தான் அறிவியல் ரீதியாகவும் , பொருளாதாரரீதியாகவும் உயர்ந்தாலும் நம் நாட்டையும் , மொழியையும் உயர்த்துவதில்லை .
நீ விண்ணில் நின்று பேசினாலும் ,விவாதமாய் பேசினாலும் உன் தாய் மொழிக்கு தலைவணங்கு .
உன் மொழியில் பாடி நில் ! உலகமெங்கும் பரவ செய் !
உலகமெங்கும் தமிழர்கள் பல்வேறு இடங்களில் சென்று சாதனை புரிந்தால் அது சரித்திரமில்லை!
தமிழ் மொழியை ஆங்காங்கே பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . அதுவே , உண்மையான சரித்திரம் !
அவர்களை அடிமையாக்கவிட்டாலும் , நம் மொழியின் அருமையையும் , ஆழமும் அறிய செய்ய வேண்டும் .
அடிமை தன்மையின் வலி உணர்ந்த தமிழனுக்கு மற்றவர்களை அடிமையாகும் எண்ணம் என்றும் இருக்காது. இருப்பினும் ,
தன் மொழியின் சிறப்பை இழக்க தமிழனின் மணம் ஏற்காது !
இவாறான ,தமிழின் பெருமையை உணராது பிறமொழி மோகம் கொண்டு திரிபவனே பொய் மானிடன் !
பொய் மானிடன் எம் மண்ணில் மாண்டாலும் பயனடையான் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக