பவித்திரம்
1.முயற்சி
இயற்கையான அழகைச்
செயற்கையாலே பெறலாம்
செயற்கையாலே பெறலாம்
தேர்ச்சியென்னும் பலத்தைப்
பயிற்சியாலே பெறலாம்
பயிற்சியாலே பெறலாம்
முயற்சியென்ற கடலே
இமையமலை எனலாம்
இமையமலை எனலாம்
2.வெற்றிக் கோடு
உயர்வான
எண்ணம்
வேண்டும்
உறுதியான
நெஞ்சம்
வேண்டும்
அதற்காக
நீ
கொஞ்சம்
உழைக்க
வேண்டும்
உருக்கமான உறக்கம் வேண்டும்
ஊக்கமான
விழிப்பு
வேண்டும்
உலகளவு
உயர்வு
வேண்டும்
உன்னதமான
மூச்சைப்
போன்ற
முயற்சி
வேண்டும்
வெற்றியனைத்தும் உனதாக வேண்டும்
3.எனது உனது
தன்னந்தனி வலிகள் எனது
எனக்குத் தன்னிகரில்லா உறவு உனது
மங்கைக் கனிமனது எனது
என்னை மாயம் செய்யும் மாமம் உனது
மண்வாச மாளிகை எனது
இந்தப் பொன்வாசப் பெண்மை உனது
கனாக்காணும் கண்கள் எனது
என்னைக் கைதுசெய்யும் படைகள் உனது
உன்னை எண்ணிய எண்ணம் எனது
உரைக்கின்ற உரிமை உனது
தவிக்கின்ற தனிமை எனது
அதைத் தவிர்க்கின்ற வலிமை உனது
4.உறவு
உறவுகள் கோடி சிறகுகள் விசிப் பறக்கின்றன
உனது இறகா அதனை மறக்கிறது
வறுத்தம் கண்டு வலிமை நின்று
வாழ்ந்தும் மாண்டு கிடக்கிறது
5.எவன்
ஆளக்கற்றவன் மன்னன்
அடக்கக் கற்றவன் தலைவன்
ஆளாக்கியவன் தகப்பன்
அடைகாத்தவன்
அருளியவன் சிவன் – இன்று என்னை
அழைக்கின்றவன் எமன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக