திங்கள், 10 பிப்ரவரி, 2020

மடல்

     சங்ககாலத்தில் காதலில் ஏமாற்றம் உற்ற ஒருவன் தன்னைத்தானே வருத்திக்கொண்டு உயிர்விடத் துணிவதாகப் பாடும் துறை “மடல்” எனப்படும். பனை மடல்களால் குதிரை வடிவம் செய்து அதன்மேல் இருந்து தன் காதலியின் உருவத்தைத் தீட்டிய படத்தை ஏந்தி, ஊரார் நடுவே நின்று உண்ணா நோன்பு கிடந்து அழியத் துணிவதாகப் பாடும் கற்பனைத் துறை இது. தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் வழக்கம் ஆண்களுக்கு மட்டுமே உண்டு பெண்களுக்குப் பொருந்தாது என்ற மரபு உண்டு. ஆனால் அதற்கு மாறாகத் திருமங்கையாழ்வார் தம்மை நாயகியாகவும் திருமாலை நாயகனாகவும் கொண்டு பாடுமிடத்தில் அங்கே பெண்ணே காதல் கைகூடப் பெறாமல் ஏங்குவதால் மடல் ஏறும் முயற்சி பெண்ணுக்கு உரியது என்று சிறிய திருமடல், பெரிய திருமடல் ஆகிய இரண்டு மடல் பாட்டுகளிலும் நாயகி மடல் ஏறும் முயற்சியே உள்ளது என்று திருமங்கையாழ்வார் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக