படித்ததில் பிடித்தது. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படித்ததில் பிடித்தது. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 1 ஏப்ரல், 2018

காமத்தோடு பெண்ணை நெருங்கும் ஆண்களுக்கு...




முகநூலில் படித்ததில் மிகவும் சிந்திக்க வைத்த பதிவு..
ஆசிரியர் : சுரேஷ் சுவி.

தாலி கட்டிய அன்றிரவோ இல்லை
மனதால் இணைந்த அந்த நிமிடங்களிலோ
அப்படி ஒரு ஆத்மார்த்தமான அரவணைப்பு
ஆடை கலைப்பு என
சுகமாக அரங்கேறும்
பல நிகழ்வுகள்

உனக்கு எப்படியோ தெரியவில்லை
எனக்கு மிகுந்த வலி இருப்பினும்
சுகமாக அனுபவித்தேன்

அன்றிலிருந்து
நிகழும் நிகழ்வுகளை அடுக்குகின்றேன் பார்

அதிகாலை எழுந்து
குளித்து சமைத்து
முத்தத்தோடு உனக்கு
உணவை கொடுத்து அனுப்பிய பின்பு
துணி துவைத்து
வீடு சுத்தம் செய்து
ஆடைகள் சமன் செய்து
அழகாக மடித்து வைத்து
உன் அம்மாவுக்கு இல்லை நம் அம்மாவுக்கு
பணிவிடை செய்து
மகனையும் மகளையும் பாடசாலை
அனுப்பி வைத்து
மறுபடியும் சமைத்து
நமது பிள்ளைகளை
பாசத்தோடும் கண்டிப்போடும் கண்காணித்து
ஓடிக்கொண்டே இருக்கிறேன் நான்

இன்னும் ஒன்று
சொல்கிறேன் கேள்

முதல் முறை கூடலின் போது
ஒரு வலி உணர்ந்தேனே
அதை விடவும் ரணம் என்றார்கள்
மகப்பேறு
பயந்து நடுங்கி நகர்ந்து கொண்டிருந்தேன்
பெருமையோடு நம் பிள்ளையை
வயிற்றில் சுமந்து
பெறுமாதம் வந்தவுடன் சொன்னார்கள்
குழந்தை வலம் மாறியதால்
வயிற்றை வெட்டி தான் எடுக்க வேண்டும்
என்று

இப்பொழுது
சொல்கிறேன் கேளுங்கள்

ஆடை சற்று விலகியவுடன்
எட்டி எட்டி பார்ப்பீர்களே
மறைவான பகுதி தெரிகிறதா என்று
முழுதாக உரித்து சுவையாக சுவைத்து
சூட்டைத் தணிப்பீர்களே
அப்போதெல்லாம் காம விருந்தாக
தெரிந்தவளை இப்போது பாருங்கள்

நன்றாக பாருங்கள்
விழிகளை விழித்துப் பாருங்கள்

நீங்கள் அடைய துடிக்கும்
மறைவான பகுதிக்கு மேல்
சதையை வெட்டி தைத்துள்ளார்களே
இதை நன்றாக பாருங்கள்

என்னை வெட்டியேனும்
என் குழந்தையை பத்திரமாக
வெளியில் எடுங்கள் என்று
ஒரு பெண் சொல்கிறாளே
உங்களை வெட்ட நீங்கள் சம்மதிப்பீர்களா?

இச்சை கொண்டு
நோக்கும் ஆண்கள்
இதை நன்றாக பார்த்து
பிறிதொரு பெண்ணை நோக்குங்கள்
கண்டிப்பாக காமம் கலக்காது
உங்கள் கண்களில்
தாய்மையின் மகத்துவம்
மட்டுமே தென்படும்
என்பேன் நான்!!

கூடலின் வலி
மகப்பேறின் வலி
வயிற்றை வெட்டித்
தைத்ததன் வலி
இவையெல்லாம்
மறந்து போகும்
இந்த மழலையின் முகம் பார்க்கையில்

ஒவ்வொரு பெண்ணும்
ஒவ்வொரு அதிசயம்....!!!

வியாழன், 6 ஏப்ரல், 2017

மலர்கள்










மலர்கள் என்பது செடி, மரம், கொடி ஆகிய தாவர வகையின் ஒரு உறுப்பாகும். மலரை பூ என்றும் நறுவீ என்றும் அழைப்பார்கள். இவை ஒவ்வொரு தாவரத்திலும் பல்வேறு வண்ணங்களில் இருக்கும். இவற்றில் ஒரு சில மலர்களில் தேன் இருக்கும். அந்தத் தேனைக் குடிக்க வண்டுகள் வரும்.சில மலர்கள் நாற்றம்(நறுமணம்) மிகுந்தவை. சில மலர்கள் இரவிலும் சில மலர்கள் பகல் பொழுதிலும் மலரும். இரவில் மலரும் மலர்கள் பெரும்பாலும் வெண்மை நிறம் உடையனவாகவும் மணம் மிகுந்தவையாகவும் இருக்கும். ஏனெனில் இரவில் வண்டுகளுக்கு தன் இருப்பிடத்தைக் காட்டவே அவை அவ்வாறு உள்ளன. 

உரிமைகள்




காடுகளை அழித்து வீடு கட்டுவோம்..
யானைகள் ஊருக்குள் புகுந்ததாக சொல்வோம்..!
எரி, கம்மாயிகளை ஆக்கிரமித்து வீடுகட்டுவோம்.. தண்ணீர் ஊருக்குள்
புகுந்ததாக சொல்வோம்..!
விளை நிலங்களை மனைகளாக்கி வீடுகட்டுவோம்.. அரிசி பருப்பு விலை
உயர்ந்துவிட்டதாக சொல்வோம்..!
லஞ்சம் கொடுத்து காரியத்தை முடிப்போம்.. காசு வாங்கிக்கொண்டு ஓட்டு
போடுவோம்.. இலவசங்களை வாங்கி பூரிப்பு அடைவோம்.. அரசியல்வாதிகள் நாட்டை
கெடுத்துவிட்டதாக வெக்கமே இல்லாமல் சொல்வோம்..!!

வாழ்க்கை




வாழ்க்கையில் நாம் சந்தித்தவர்களில்.
சிலர் நம்மை ஏமாற்றிருப்பார்கள்
சிலர் நம்மை சோதித்திருப்பார்கள்
சிலர் நம்மை பயன்படுத்தியிருப்பார்கள்
சிலர் நம்மை அவமானப்படுத்தியிருப்பார்கள்.
சிலர் நமக்கு பாடம் கற்று கொடுத்திருப்பார்கள்
ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்
அவர்கள் தான் நாம் சிறந்த மனிதர்களாக

மாற முக்கிய காரணமானவர்கள்..