வ.கீா்த்தனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வ.கீா்த்தனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 3 மார்ச், 2016

லூயிஸ் பிரெய்லி

மனித இனத்திற்கு மிகச் சிறந்த தொண்டாற்றியவர் லூயிஸ் பிரெய்லி ஆவார். குறிப்பாக கண்பார்வை அற்றோர் தம் கைகளால் தடவிப் பார்த்துப் படிப்பதற்கான பிரெய்லி எழுத்து முறையைக் கண்டறிந்ததன் மூலம், கண்பார்வை அற்றோர்க்காக சிறந்த தொண்டாற்றினார்.
     லூயிஸ் பிறந்த போது இயல்பான கண்பார்வையைத் தான் பெற்றிருந்தார். அவருக்கு மூன்று வயதாக இருந்தபோது அவர் தன் தந்தையாரின் குதிரைக்குச் சேணம் பூட்டும் தொழிற்சாலையில் இருந்தார். அப்போது அங்கே ஏற்பட்ட விபத்தினால் தன் கண்பார்வையை இழந்தார்.
     லூயிஸ் பிரெய்லி 1809 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் நாள் பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸ் நகருக்கு அருகிலுள்ள கோப்ரே என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார்.
     திடீரென்று தன் கண் பார்வை பறிப்போனதை எண்ணி, குழந்தை லூயிஸ் பிரெய்லி கலங்கினார். அவர் உள்ளூரில் இருந்த பள்ளியில் இரண்டாண்டுகள் படித்தார். எதையும் அடையாளம் கண்டுகொண்டு அவரால் படிக்க முடியவில்லை. அவருக்குப் பத்து வயதானபோது உதவித்தொகை பெற்று, பாரிஸில் உள்ள கண்பார்வை அற்றவர்களுக்கான கல்வி நிலையத்தில் சேர்ந்து கற்றார். ஆனால் அது அவருக்கு கடினமானதாக இருந்தது.
     இங்கே அவர் பார்வையற்றோர்க்குக் கற்றுத் தரப்படும் தொழில்களான துணி நெய்தல், செருப்பு தயாரித்தல் ஆகியவற்றைக் கற்றார்.அந்த பள்ளியில் அழகான நூலகமும் அதில் எண்ணற்ற புத்தகங்களும் இருந்தன. லூயிஸ் பிரெய்லிக்குப் புத்தகங்கள் படிப்பதில் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் அவரால் அந்த எழுத்துக்களை கண்டறிந்து படிக்க முடியவில்லை. இது அவருக்கு அதிக வருத்தத்தைத் தந்தது.
     இந்நிலையில் அந்தப் பள்ளிக்கு 1821 ஆம் ஆண்டு சார்லஸ் பார்பியர் என்ற இராணுவ வீரர் வந்தார். அவர் அந்தப் பள்ளியைச் சுற்றிப் பார்க்கவும், அங்கு தங்கியிருக்கும் கண்பார்வையற்ற மாணவர்களுக்காகத் தன்னுடைய கண்டுபிடிப்பான, இராணுவத்தில் பயன்படும் இரவு நேர எழுத்து முறை பற்றியும் விளக்குவதற்க்காக வந்திருந்தார். அந்த எழுத்து முறை 12 புள்ளிகளைக் கொண்டது. ஒரு வீரன் மற்றொரு வீரனுடன் பேசாமலேயே தொடர்புகொள்ளும் முறையாகும். ஆனால் இராணுவ வீரர்கள் இதனை கற்றுக்கொள்ள மிகவும் சிரமப்பட்டனர்.
     ஆனால் 12 வயதுடைய லூயிஸ், அதிலிருந்து 6 எழுத்துக்களைப் பிரித்தெடுத்து எளிதில் படிப்பதற்கான எழுத்து முறையைக் கண்டுபிடித்தார்.1829 ஆம் ஆண்டு முதல் பிரெய்லி புத்தகத்தை வெளியிட்டார்.
அப்போது அவருக்கு வயது 20.அவர் தொடர்ந்து அதில் பயிற்சி செய்து கணிதக் குறியீடுகளையும், இசையையும் சேர்த்தார். அவர் தனது பட்டபடிப்பை முடித்தவுடன் தான் பயின்ற அதே பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்து அதனைக் கற்றுக்கொடுத்தார். அவருடைய கோடு மொழியை (code language) அங்குள்ள கண்பார்வையற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பள்ளியின் மூத்த ஆசிரியர்கள் பிரெய்லியின் இம்முறையைக் குழந்தைகளுக்கு கற்றுத்தரக் கூடாது என தடை விதித்தனர். ஆனால் குழந்தைகள் சற்று முயற்சி செய்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருந்தனர். இம்முறை படிப்பதற்கு மட்டும் அன்றி கண் பார்வை அற்றோர் தொட்டு, எழுத்துக்களை அடையாளம் கண்டு கொள்ளவும் வசதியானதாகவும் இருந்தது.
     எனவே இம்முறையைக் கண்பார்வையற்றோர் பிறகு விரும்பி பயன்படுத்தினார். ஆனால் இம்முறையை அவர்கள் பிரெய்லி உயிரோடு வாழ்ந்த காலத்தில் பயன்படுத்தவில்லை. அவருடைய மறைவிற்குப் பின், மிகவும் மெதுவாகவே பரவியது.
     1868 ஆம் ஆண்டு இந்தப் பிரெய்லி முறை உலகம் முழுவதும் பரவியது. பிரிட்டிசார் இம்முறை உலகெங்கும் பரவக் காரணமாக இருந்தனர். இதற்க்கான அமைப்பு இப்பொழுது கண்பார்வையற்றோர்க்கான தேசிய நிருவனம் என்ற பெயர் பெற்று சிறப்புடன் இயங்கி வருகிறது. பிரெய்லி எழுத்து முறையை கண்டுபிடித்த லூயிஸ் பிரெய்லி 1862 ஆம் ஆண்டு எழும்புருக்கி நோயினால் மறைந்தார்.

புதன், 2 மார்ச், 2016

சிக்கனமும் சேமிப்பும்

Image result for சிக்கனமும் சேமிப்பும்

சிறு துளி பெறுவெள்ளம் போல
     
      சிறுசேமிப்பு வாழ்க்கைக்கு பேருதவி புரியும்!

சேமித்துப் பார் சிக்கனம் தன்னால் தோன்றும்!
     
      ஓரறிவு எறும்பிற்கு சேமிப்புத்தான் வாழ்க்கை!

ஆரறிவு மனிதனுக்கு சேமித்தால் தான் வாழ்க்கை!
     
      உன் வாழ்வில் நீ எத்தனையோ படிகளை

தாண்டி வெற்றி கண்டிருக்கலாம்; ஆனால்
     
      சேமித்து சிக்கனமாய் இருந்தால் தான்

நீ வாழ்க்கை என்னும் படியை

வெற்றியுடன் தாண்ட முடியும்!

சேமித்துப் பார் உன் வாழ்க்கையை நீ
     
     விரும்பிய படி கொண்டு செல்லலாம்!


சிக்கனமாய் இரு! சேமித்து பழகு!

சனி, 27 பிப்ரவரி, 2016

முயற்சி

Image result for முயற்சி


வெற்றி என்று சொன்னவுடன் என்
     
       நினைவிற்கு வருவது நீ மட்டும் தான்!

உன் பாதையில் நான் வந்ததால் தான்
     
       என்னால் வெற்றி என்னும்

கனியை சுவைக்க முடிந்தது!
     
       உண்மையின் அடையாளம் நீ!

நீ ஒவ்வொருவரிடத்தும் இருந்தால்
          
       அனைவரும் இலட்சிய பாதையிலே

வீர நடைபோட்டு செல்லலாம்!
        
       தனக்குரிய பெருமையுடன் வெற்றியின்

புன்சிரிப்பை அனுபவித்து சிரிக்கலாம் – என்று
     
       உன்னையே உனக்கு அடையாளம் காட்டும்  உனது முயற்சி!




Image result for முயற்சி

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

தோழி


நட்பை உணர வைத்த நண்பன் என்பேனா?

தோல்விகளில் தோள்கொடுத்த தோழி என்பேனா?

சந்தோசத்தை பகிர்ந்து கொண்ட சகோதரி என்பேனா?

கண்ணீரை துடைத்த காதலி என்பேனா?

என்னுடைய ஒவ்வொரு படியிலும் துணை

நின்ற துனைவி என்பேனா?

ஆலோசனை கூறிய அன்னை என்பேனா?

தளர்ச்சிகளில் தட்டிக் கொடுத்த தந்தை என்பேனா?

என்னுடைய ஒவ்வொரு முயற்சியிலும் முன் நின்றவளே!

என்னை எனக்கு உணர வைத்த என்னவளே!

உன்னை நான் என்னவென்று சொல்வேன்?

நீ என்னில் கலந்தவள்! என் உயிரானவளாவாய்!





சனி, 13 பிப்ரவரி, 2016

விவசாயிகள் உருவான கதை..






ஒரு கத சொல்லுவாங்க ஊர்ல.
எமலோகம் இருக்கே எமலோகம் அங்க பாவ புண்ணியக் கணக்குப் பாப்பாங்களாம்.பாவம் பண்ணுன ஆளுக இடபக்கம் நிப்பாகளாம்; புண்ணியம் பண்ணுன ஆளுக வல பக்கம் நிப்பகளாம்.
புண்ணியம் செஞ்சவக சொர்க்கத்துகுப் போங்கன்னு அனுப்பிச்சிருவாகளாம்; ஊர்வசி ரம்பையெல்லாம் வருவாகளாம் ஒத்தாசைக்கு.
பாவம் செஞ்ச ஆளுகள எமதர்மன் ஆளுக ரெண்டு கையும் புடிச்சி ‘வாங்கய்யா வாங்க’ன்னு கூட்டிட்டுப் போயிக் கொதிக்கற எண்ணெய்க் கொப்பரையில வீசுவாகளாம்;பாம்பு புத்துக்குள்ள படுக்கப் போடுவாகளாம்;எரியற தீயில தலைகீழாக் கட்டித் தொங்கவிடுவாகளாம்.
இப்படி எமதர்மன் ‘நல்லாட்சி’ நடத்தி வந்த காலத்துல ஒரு நாளு பெருங்கூத்தாகிப் போச்சாம் எமலோகத்துல.
அந்த வருசம் ஏடு போட்டுப் பாத்ததுல புண்ணியம் பண்ணுனவக ஏழெட்டுப் பேர்தானாம். பாவம் பண்ணுனவக பட்டியல் எடுத்து பாத்தா அது போகுதாம் லட்சக்கணக்குல.
எமதருமருக்கு தல சுத்துது;கூடவே கிரீடமும் சேந்து சுத்துது.
கொப்பர கட்டுபுடியாகுமா எண்ணெ விக்கிற வெலையில?
அத்தன பாம்புகளுக்கு எங்க போறது? நாகலோகத்துல வேற நாலுமாசமாப் பாலுக்கு வெல கூட்டச் சொல்லிப் பசுமடுக வேல நிறுத்தமாம்.
புத்திக்கு ஒண்ணும் எட்டல; யாரை யோசனை கேக்கறது?
சிவபெருமானைக் கேக்கலாம்ன்னா மார்க்கண்டேயன் விவகாரத்துல ஏற்பட்ட மனதாங்கல் இன்னும் தீரல.
விஷ்ணுவப் போய்க்கேட்டு வரலாம்னா நம்ம எருமைக்குப் பாற்கடல் நீந்திப் பழக்கம் இல்ல. பிரம்மாவப் போய்க் கேக்கலாம்னா அந்தாளு எந்த மூஞ்சிய எங்க வச்சிருப்பாருன்னே தெரியமாட்டேங்குது.
ஒண்ணும் புடிபடல எமதருமருக்கு.
பாசக்கயித்துல அவரா முடிச்சிப் போட்டு அவரா அவுத்துக்கிட்டிருக்காரு ரொம்ப நேரமா.
திடீர்னு தம்புராவோட ஒரு பாட்டுக் கேக்குது. நிமிந்து பாத்தா வைகுண்டத்துல வடை சாப்பிட்டுட்டுக் கைலாசத்துக்குக் காப்பி சாப்பிடப் போய்க்கிட்டுருக்காரு நாரதரு.
‘வாய்யா வாய்யா’ன்னாரு எமதர்மரு,
வந்தாரு நாரதரு.
“எனக்கொரு பிரச்சன” இழுத்தாரு எருமைகாரரு.
“என்ன? கள்ளக் கணக்கு எழுதிக் காசு சம்பாரிச்சு இந்திரலோக வங்கியில போட்டு ஏமாத்துறானா சித்ரகுப்தன்?”
“அட அதில்ல நாரதரே. பாவகணக்குப் பண்ணுனவக எண்ணிக்கை கூடிப்போச்சு; எடமில்ல நரகத்துல; என்ன பண்றதுன்னு யோசிக்கறேன்”.
“அட நீங்க ஒண்ணு… இவுகள நரகத்துல தள்ளணும் அவ்வுளவுதானே? நான் பறந்து பறந்து பாத்த அளவுல பூலோகத்துல இந்தியா இந்தியான்னு ஒரு தேசம் இருக்கு. இவுகளப் பூரா அங்க வெவசாயம் பண்ண அனுப்பி வச்சீங்கன்னு வச்சீக்குங்க வேலை முடுஞ்சது.”
“ஆகா ஒம்மக் கட்டித் தழுவணும் போல இருக்கு”ன்னு எந்திருச்சாரு எமதருமரு.
தம்புராவத் தவற விட்டுட்டு ஓடி ஒளிஞ்சு போனாரு நாரதரு.
நாரதர் சொன்ன யோசனப்படி இந்தியாவுல விவசாயம் பண்ண நரகத்துல இருந்து அன்னைக்கு அனுப்பிவைக்க ஆரம்பிச்சது இன்னைக்கு வரைக்கும்
நின்னபாடில்ல.
                            (மூன்றாம் உலகப் போர் - வைரமுத்து)

ஆரம்பத்தில் உதட்டில் புன்னகையை தவழ வைத்த வரிகள் இறுதியில் கண்களை கலங்க வைத்தது.




வியாழன், 11 பிப்ரவரி, 2016

சாலை



கள்ளும் முள்ளுமாக நிறைந்திருந்தேன்;
மண் சாலையாக மாற்றினார்கள்!
மண் சாலையாக இருந்தேன்;
     தார் சாலையாக மாற்றினார்கள்!
தார் சாலையாக இருந்தேன்;
     காங்கிரீட் சாலையாக மாற்றினார்கள்!
இப்படி எல்லாம் மாறினாலும் என்
     மேனி மட்டும் குழிகளாலே நிறைந்துள்ளது!
இது நான் செய்த தவறா? இல்லை
என்னை செய்தவர்களின் தவறா?
                                         
                                                                        இப்படிக்கு,
                                                              கண்ணீருடன் சாலை.

புதன், 10 பிப்ரவரி, 2016

பாரதியார்

                                         

                     
சீறிவரும் சூறாவளியை
மரங்கள் அறிமுகப்படுத்துவது போல;
தமிழுக்கு உணர்ச்சியூடும் கவிதைகளை
அறிமுகப்படுத்தியவன் நீ!

எதையும் அச்சடித்தாற் போல்
காட்சிப்படுத்தும் திறமையை - உன்
வீட்டுச் சுவரில் தொங்கும்
கண்ணாடியிடமிருந்து தான் கற்றாயோ?

உன் வீர முழக்கத்தை, பிஞ்சு குழந்தைகள்
செவி வழி கேட்டாலும்,
அரும்பாத மீசையை தான்
தடவி போருக்கு சென்றிடுமே!

எத்தனை வருமை சுமையாய்
உன்னை வாட்டினாலும்,உன் கைகள்
சுமந்தது என்னவோ புத்தக சுமையைத் தான்!
அந்த யானையும் உன் கவிதையை
கேட்டிருக்கும் என்று நினைக்கிறேன்;
அந்த வியப்பில் தான் – உன்னை
தூக்கி மகிழ்ந்திருக்கும்; ஆனால்
அதற்கு தெரியுமா நடக்கும்
விபரீதம் என்ன? என்று

உள்ளத்தில் ஒளி உண்டானால்
வாக்கிலே ஒளி உண்டாகும் என்பர்- அதுபோல
நீ எங்கள் உள்ளத்தில் ஒளியாய் நின்று
எங்கள் வார்த்தையிலே ஒளிபொருந்திய
உணர்ச்சி கடலாய் வெளிப்படுகிறாய்!

தமிழே உன் உயிர் மூச்சு என்றாய்!
தமிழ் அன்னை எவ்வளவு காலம் தவமிருந்தாளோ?
உன்னை பெற்றெடுப்பதற்காக என்று தெரியவில்லை!

பாரதி பெண் சுதந்திரத்தின் போர் வாள் நீ!
தமிழுக்குச் செல்ல பிள்ளை நீ!
இந்த உலகை விட்டு உன் உடல் மறைந்தாலும்;
என்றும் எங்கள் மனதில் குடிகொண்டிருப்பவன் நீ!