கவிதைத் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைத் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 15 அக்டோபர், 2018

கலாமுக்கு எனது கவிகளின் சலாம்..




என்னை செதுக்கிய சிற்பிக்கு பிறந்தநாள்..
என்னை வழிநடத்திய குருவிற்கு பிறந்தநாள்..
என்னை தளரவிடாமல் செய்த தன்னம்பிக்கைக்கு பிறந்தநாள்..
என்னை தலையில் குட்டும் சிந்தனையாளனுக்கு பிறந்தநாள்..
என்னை துன்பத்தில் இருந்து காக்கும் காவலனுக்கு பிறந்தநாள்..
என்னை முத்தமிடும் எண்ணங்களின் எழுத்தாணிக்கு பிறந்தநாள்..
என்னை ஆதரித்த அழகியத்தமிழ் மகனுக்கு பிறந்தநாள்..
என்னை தழுவி அனைத்து கொண்ட அன்னைக்கு பிறந்தநாள்..
என்னை வீழாமல் தோள் கொடுத்த தோழனுக்கு பிறந்தநாள்..
என்னை மனிதியாக வெளிவர உதவிய சிறகுக்கு பிறந்தநாள்..
என்னை மட்டுமல்ல பல இளைஞர்களை கனவு காண செய்த கனவு நாயகனுக்கு பிறந்தநாள்..
என்னை பெறாமல் நான் தத்தெடுத்த என் தந்தைக்கு பிறந்தநாள்..
உன்னை போற்றி பேசிட என்னிடம் வார்த்தைகள் இல்லை..
எனவே உனது கால்களை முத்தமிட்டு வணங்கி தொழுகிறேன்.. 


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கலாம் அப்பா..

புதன், 24 ஜனவரி, 2018

நம்பிக்கை


பசியின்பொழுது உண்டசோறு
தன்தந்தையின் உழைப்பிள்
பாசத்தில்தவித்த பொழுது
தன்தாயின் அரவணைப்பு
கஷ்டம்என்றுவரும்போது
என் நண்பனின் நம்பிக்கை.

சு.சுபத்ரா,
முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறை,

தாயும், தந்தையும்


பத்து மாதம் வயிற்றில் சுமப்பவள்  தாய்
வாழ்வுமுழுவதும் தன் நெஞ்சில் சுமப்பவர் தந்தை
அன்பை ஊட்டியவள் தாய்
அறிவை ஊட்டியவர் தந்தை
உலகில் எந்த துன்பமும் நேராமல்
என்னை காத்தவர்கள் நீங்களே
ஒரு நொடி என்னை காணவில்லை 
என்றாலும் வருந்தியவள் தாய்
                                            கவி லாவண்யா     
                                      முதலாம் ஆண்டு வணிகவியல்

தங்கை



தேவையற்ற சேட்டைகள் செய்தாலும்
தேவையான அன்பு கொள்வாள்
என் மேல்… ஒரு தங்கையான
அவளுக்காக திட்டல்கள் ஏற்பேன்!
அவளுக்காக விட்டுக் கொடுப்பேன்!
அவளுக்காக அனைத்தையும் செய்வேன்!ஏன்… 
அவளுக்காக தாயாக மாறுவேன்!
அவளுடைய அன்பு அக்காவாக
எக்காலத்திலும் என்றும்!     
                                  
ர.விஜயா                             
   முதலாம் ஆண்டு வணிகவியல்

மழை


மழை என்பது கடவுளால் உண்டான
நீரினால் ஆன ஐம்பூதங்கள் அடங்கிய ஓர்
சக அற்புதப் படைப்பு மழை!
இவை அனைத்தும் அடங்கிய வருண
தேவரால் பொழியப்பட்ட மழை!
அனைத்து மக்களின் மகிழ்ச்சி மட்டுமல்ல
மக்களின் தாகமும் மழை!
விவசாயிகளின் உயிர் மூச்சும் மழை!
விவசாய மக்களின் பெரும் வீழ்ச்சும் மழை!
மக்களின் துயர்நீங்கா உயிர் பறிப்பதும் மழை!
மக்களின் மகிழ்ச்சியும் மழை! துன்பமும் மழை!
இன்பமும் மழை! சோகமும் மழை!

ரா.ரம்யா
முதலாமாண்டு ஆடை வடிவமைப்புத் துறை

இளைய சமுதாயமே கைகொடுப்பீர்



சிந்தையில் சிந்தித்தால்,
நன் மந்திரம் போதித்தால்,
விந்தையால் விதை விதைத்தால்,
மந்தையில் வளம் நீ படைத்தால் 
சந்தையில் சாதிப்பாய், சரித்திரம் நீ படைப்பாய்,
சாகச உடை உடுப்பாய், சாதியை நீ உடைப்பாய், 
சமரசம் அதை தொடுப்பாய,; சங்கமம் நீ தொகுப்பாய்,
சங்க நூல் வழி மதிப்பாய் - நீ
    தழிழனாய் தடம் பதிப்பாய்.     
                                   
பவித்ரா வெங்கடேசன்              
                    முதலாமாண்டு கணினிப் பயன்பாட்டியல்

பூமித்தாய்


பூமித்தாயே! நீ மக்கள் அனைவரையும்
உன் குழந்தையாக நினைத்து அவர்களைத் தாங்கினாய்
ஆனால் அவர்களோ உன்னைத் தாய் என்று பாராமல்
உன்னை அவமதித்தனர் இருந்தும் நீ அவர்களை 
கீழே விழாமல் தாங்கினாய்
இதுதான் தாயின் அன்போ? என்று வியந்தேன்..  

                                          வர்சிதா 
முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

அன்பு



நம்வாழ்க்கையில் பல மனிதர்களை சந்திக்கிறோம்
அவர்களிடம் இருந்து நாம்அன்பு. ,  பாசம் போன்ற பல குணங்களைப் பார்க்கிறோம் 
இதை விட ஆயிரம்குணங்களைநம்மிடம்  காட்டுவது நம் பெற்றோர்கள் தான்
இவர்களை விட உலகில் வேறெதுவுமில்லை..
உலகத்தில் பல்வேறு வார்த்தைகள் உள்ளன. 
மிக சிறந்ததாக மதிக்கப்படுவது 
அம்மா என்ற வார்த்தை மட்டுமே 
அம்மாவுக்கு ஈடு வேறு எதுவுமில்லை.

வ..ரூபிகா              
                         முதலாம் ஆண்டு கணிதம் இ

உறவுகள்


உன்னைத் திட்டினாலும் அடித்தாலும் உன்
  நலம் நாடும் தந்தை
நீ அழும் போதெல்லாம் உன்னுடன்
  சேர்ந்து அழும் தாய்
என்றும் உனக்காகவே பேசும் தங்கை
  நீ விலகி விலகிப் போனாலும்
  உன் அன்பைத் தேடும் தம்பி
நீ விழும் போதெல்லாம் தோல்
  கொடுக்கும் தோழிகள்
உன்னை நல்வழிப்படுத்தி 
  உயர வைக்கும் ஆசிரியர்கள்
உன் வெற்றியைக் கண்டு 
  பெருமிதம் கொள்ளும் உறவுகள்
இத்தனை உறவுகள் இருக்கும் போது
உன்னை அழவைக்கும் காதல் எதற்கு..?       
                                
தாமரைச்செல்வி                  
            முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

காலங்கள் கடந்த நட்பு




கண் இமைக்கும் நேரத்தில்
சேர்வது நட்பல்ல!
கண் இமை மூடும் வரை
சேர்ந்து இருப்பது தான் நட்பு!
எங்கேயோ பிறந்தோம் அடிக்கடி பேசிக்கொண்டோம்
உறவுகளுக்கு மேல் உயிர் ஆனோம்
காலங்கள் கடந்துப் போனாலும்
                                  கடைசி வரைத் தொடர வேண்டும் நம் நட்பு.                                          

    நந்தினி                       
    முதலாம் ஆண்டு கணிதவியல் ஆ பிரிவு

கேள்வியோடு பெண்...



விதையாய் விதைத்து வளர்ந்து
பெண் விடுதலை அல்ல
விதையாய் விதைத்து மரமாய்
வளர்ந்து பெண் வன்கொடுமை
காலத்தோடு வளர்ந்த நாகரிகமுள்ள
சமூகம் ஏன் நாகரிகம்
இழந்து பெண் இனத்தை தீமை
என்ற தீயால் கொடுமைச் செய்கிறது
கேள்விகளோடு அலைந்து விடையின்றி
தவிக்கும் பெண் இனம்.

ச.ஐஸ்வர்யா
முதலாமாண்டு ஆங்கிலத்துறை

வியாழன், 6 ஏப்ரல், 2017

நட்பு..

                                                     
 


நட்பு என்னும் கூட்டில் இணைந்து வேதனையை மறந்து சிரித்திடுவோம்
பேதங்கள் இன்றி பழகிடுவோம்
தாயின் கருவறையில் கிடைக்காத நட்பு கல்லூரி அறையில் கிடைத்தது
ஏங்கோ பிறந்த நாம் நட்பு என்னும் பாதையில்                               கைக்கோர்த்து இணைந்திடுவோம்
சொந்தங்கள் மாறலாம் நட்பு ஒன்று தான் மாறாதது 
தமிழில் இருப்பது வல்லினம் மெல்லினம் நம் இடையில் இருப்பது
நட்பு  னம்.
பூக்கள் கூட உதிரி தான் பூக்கிறது-ஆனால்

நட்பு என்ற பூ உதிராமல் காக்க வேண்டும்.

தமிழ் புத்தகம்




புத்தகம் நல்ல புத்தகமே
புத்தம் புதிய புத்தகமே
தாய்மொழி தமிழின் புத்தகமே
தரத்தின் சிறந்த புத்தகமே

நம்தமிழ்ப் பாடப் புத்தகத்தை
நாளும் நன்கு படித்திடுவோம்
பாடலை, செய்யுளை அனைத்தையுமே
படித்து மனம் செய்வோமே.

நம்தமிழ்ப் பாடல், செய்யுள்களை
நாளும் இசையுடன் பாடிடுவோம்

பாடப் பாட இசைவளரும்
படிக்கப் படிக்கத் தமிழ்வளரும்.

ஒவ்வொரு தமிழனும் தாய்மொழியை
உணர்ந்து முயன்றுக் கற்றிடுவோம்
நல்ல நூல்பல எழுதிடுவோம்

நற்பணி தமிழுக்குச் செய்திடுவோம்.

அன்புத் தமிழ்



           
அம்மா அப்பா அன்பே வா
ஆசான் தந்த அறிவே வா
இருளை நீக்கும் ஒளியே வா
தந்தை விதையே தமிழே வா
தாயின் மொழியே இசையே வா
மூச்சாய் பேச்சாய் தமிழே வா

முத்தமிழ் நாடே கலையா வா…

விண்ணுக்கு சென்றாலும்- அப்துல் கலாம்

                                      விண்ணுக்கு சென்றாலும் – எங்கள்
                                                கண்ணுக்குள் வாழ்கிறீர்                                       


அப்துல்  கலாம்

கடைக் கோடி கடல் மணலில் கால் பதிந்து
உழைப்பால் வட கோடியின் உச்சம் தொட்ட
உன்னத தலைவர் – நீர்…, 
காலன், நேசிக்கும் இதயங்களோடு – நீர் பேசிக்கொண்டிருக்கும்  போதே
                                                                                                                          
எங்களிடமிருந்து பிரித்து விட்டான்
தூங்காமல் செய்வது தான் கனவு என, கனவுக்கு முப்பரிம்மாணம்  தந்தீர்!
                                                                                                                             
உம் இளைஞர்களை கடந்த ஓராண்டுகளாய் தூங்காமல்   செய்திருக்கீறீர்
                                                                                                          
உம் இறப்பும் கனவு தானோ?
நீர் பூமிக்குள் விதைக்கப்பட்டிருக்கலாம்
புன்னகைக்கும் உம் இதழ்கள் எங்கள் மாணவர்கள், இளைஞர்கள்
இதயத்துக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன….

ஏவுகணையில் ஏற்றினாய் தமிழின் பெருமை

உம்மை நினைப்பது எங்களின் பெருமை…… 

முதல் தெய்வம்


             
அம்மா அப்பா முதல் தெய்வம் – அவர்
அடிகளைத் தொழுவதே அருள்பெறுவோம்
இன்றும் என்றும் அவர்வழியில் – நாம்
சென்றே சிறப்பாய் வாழ்ந்துயர்வோம்.

பேசும் தெய்வம் பெற்றோரே – நம்மைப்
பேணிக்ரகாப்பவர் பெற்றோரே
ஊட்டி வளர்ப்பவர் பெற்றோரே – நமக்கு
ஊக்கம் கொடுப்பவர் பெற்றோரே

நல்லதைக் கெட்டதை அறிந்தவர்கள் – இந்த
நாட்டின் நடப்பைத் தெரிந்தவர்கள்
அவர்களைத் தவிர நம்மீது – இங்கு
அக்கறை உள்ளவர் யாருமில்லை.

கல்வியைத் தருபவர் பெற்றோரே – நம்
கவலையைக் களைபவர் பெற்றோரே
அம்மா அப்பா மனம்மகிழ – நாம்

அனைத்தையும் செய்து உயர்வோமே.

நீரோடு

                                                           


அழகாய் பூத்திருக்கும் தாமரையும்
அடி ஆழம் தெரியாமல்  தொட்டுப் பழகும்
தண்டுகள் மிதமாய் மிதந்துபோகும் இலைகள் – எப்போதும்
மலர்ந்து சிரிக்கும் தாமரை ஒன்றோடு ஒன்று  
இணைந்து இருக்கும் நீரோடு

கடல்வாழ் உயிர்யினங்கள் நீர் இல்லாமல்
உயிர்வாழ முடியாது –அதுபோல
மீன்கள் கடல் அடியில் அழகாய் மிதந்து போகும்
இனி  இணைந்தே  இருப்போம் நீரோடு

பரந்த  நிலபரப்பில்  பசுமையான வயல்வெளிகளுக்கு
உணவு  ஆதரமாக விளங்குவது  நீர் மட்டும் தான்
இனி  இனத்தோடு இணைந்து இருப்போம் நீரோடு

மீத்தேன் வாயு  நீரோடு கலப்பதனால்
நீர் கூட விஷமாக மாறிவிடும்
மக்களுக்கு  நோய்வாய்  ஏற்படும்
நிலத்தோடு இணைந்து இருப்பதனால்
நிலம் கூட மாண்டுபோய் விடும்

நீர் நெருப்பாக கூட மாற வாய்ப்பு உண்டு
இதனால்  நம் நாடு  வறண்ட பாலைவனமாக 
மாற வாய்ப்பு உண்டு .
நிலமும்  நீரும் கொஞ்ச கொஞ்சமாக அழிந்து விடும்

நீரியின்றி அமையாது உலகு என்பது போல

நீர் இல்லாமல் நம்நாள் வாழ முடியாது .

இலட்சியம்




நான் ஏறிக்கொண்டே இருக்கிறேன் .
எங்கிருக்கிறது இட்சிய சிகரம்
என் இறைவா !
நான் தோண்டிக்கொண்டே
இருக்கிறேன் , எங்கிருக்கிறது
அறிவுப் பதையல்
என் இறைவா !
நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே
இருக்கிறேன் . எங்கிருக்கிறது
அமைதித் தீவு என் இறைவா !
இறைவா , இறேவா , நூறு கோடி
மக்கள் இட்சியம் சிகரத்தையும் ,
அறிவுப்புதையலையும் ,
இன்ப அமைதியையும் இழைத்து

அடைய அருள்வாயாக !

அன்பு..




உன்னுடைய அன்பைப் பற்றி
முழுவதும் அறியாதவர்களிம்
உன்னுடை கோபத்தை காட்டாதே எனென்றால்
அந்த கோபம் கூட ஒரு விதமான அன்புதான்

பல எதிர்ப்புகளைவும்,
 சோதனைகளைவும் தாடி
வருவது தான் உண்மையான அன்பு

என்னுள் உயிராய் இரு   
       இதயமாய் இருக்க வேண்டாம்
என் ஏன்றால் உன்னைத் துடிக்கவிட்டு
        நான் வாழ் விரும்பவில்லை

கண் சிமிட்டாமல் உன்னை பார்க்க ஆசைபட்டேன்
        ஆனால் இப்போது கண்சிட்டும் நேரம்மாவது
உன்னை பார்க்க ஆசை படுகிறேன்




திருமணம்...



     பத்து பொருந்தங்கள் பார்த்து
      ஒன்பது கோள்நிலை அறிந்து
எட்டு திசையில் இருந்து உறவை அழைத்து
      ஏழு ஸ்வரங்கள் ஒலிக்க
அறுசுவை உணவு படைத்து
      ஐந்து பூதங்கள் சாட்சியாக
நான்கு வேதங்கள் செல்லி
      முன்று முடிச்சுகள் போட்டு
இரு மணம் சேர்ந்து
      ஒரு உயிராக இணையும்