செவ்வாய், 24 டிசம்பர், 2019

பயணங்கள்

பயணம் என்றாலே பிடிக்காதவர்கள் உண்டா? 
பேருந்தின் ஜன்னல் ஓர பயணம்..
தொடர்வண்டியின் வளைவுகளுடன் பயணம்..
இருசக்கர வண்டியின் இரவு நேர பயணம்..
நான்கு சக்கர வண்டியின் நெடுந்தூரப் பயணம்..
இருகால் துணையோடு இருகரங்களை இணைந்தபடி  மெல்லிய பயணம்..
குழந்தையின் தத்திதவழும் பயணம்..
ஆகாயத்தில் மேகத்தினுள் நுழைந்தபடி இன்ப பயணம்..
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்..
ஏனென்றால் பயணம் என்பது பிறப்பில் தொடங்கி மரணம் வரை விடைத் தெரியாமல் போகும் ஒரு வழியாகும்..
எனவே போகும்வரை இரசித்து கொண்டே செல்வோம் நமது பயணங்களை ..
பயணங்களை அனுபவத்துடனும் பயனுடவும் சென்றிடுவோம்..வாழ்ந்திடுவோம்..

வெள்ளி, 20 டிசம்பர், 2019

சிறுபஞ்சமூலம்

சிறுவழுதுணை
நெருஞ்சி
சிறுமல்லி
பெருமல்லி
கண்டங்கத்திரி

திருக்குறள் காட்டும் காதல்

கண்ணுள்ளிற் போகார் இமைப்பிற் பருவரார்
நுண்ணியர் எங்காத லவர் 

இயற்கை

மலைக்குப் போர்வை போர்த்தி விட்டது  மேகம்
தாலாட்டுகின்றது  மழை 

வியாழன், 19 டிசம்பர், 2019

காலம்

ஒரு சில நேரங்களில்
ஒரு சில தருணங்களில்
எதிரி நண்பனாகவும்
நண்பண் எதிரியாகவும்
மாற்றிவிடும்

பெண்

மகளிருக்குத் தாய்மை ஒரு பொன்விலங்கு.

விலை பேசாதே

வரதட்சணை
என்ற பெயரில்
பெண்களை
விலைபேசி
விற்பதை நிறுத்திவிட்ட
அற்புத பூமி வேண்டும் 

புதன், 18 டிசம்பர், 2019

படித்ததில் பிடித்தது

"பருத்த  தேங்காயைத் திருகிப் பிட்டு செய்து
  பகற்படத்தை உருவாக்கி
  திருத்தமாகவே  தின்றால்
  இருவேளை  வயிற்று வலி
  தீருமென்றே கும்மி  அடியுங்கடி "

உள்ளுக்குள் புதையல்

நமக்குள் இருக்கும் சுரங்கங்கள் அற்புதமானவை. அவற்றை அன்பெனும் விளக்கு கொண்டு, கனியெனும் கைச்சுடர் கொண்டு,  பணிவென்னும் பார்வை கொண்டு தேடினால் அவை புலப்படும். நம் வாழ்வு திடப்படும்

வெற்றி வாிகள்

இந்த   நிமிடத்தில்  வாழ்க்கை  எவ்வளவு

கடினமாக வேண்டுமானாலும் தொியலாம்

ஆனால் செய்வதற்கும் வெல்வதற்கும்

ஒவ்வொரு நொடியும் ஏதேனும் ஒன்று

இருந்து கொண்டேதான் இருக்கிறது.

                          -ஸ்டீபன் ஹாக்கிங்.

இணையதளம்

பொருள் தேடி சென்றவரையும்
கரை தாண்டி சென்றவரையும்
கப்பலில் கடப்பவரையும்
விண்வெளியில் மிதப்பவரையும்
வீட்டினிலே இணைக்கும்
இன்பத்தினை சுமக்கும் தளமே
இணையதளம் 

செவ்வாய், 17 டிசம்பர், 2019

கலாம் பொன்மொழி

லட்சியத்துடன் வாழவேண்டும்
உயரப் பறந்துகொண்டே இருக்கவேண்டும்
அதனையே இலட்சியமாகக் கொள்ளவேண்டும்

உளியின் வலி

உளியின் வலியாலே
உயிா்த்தெழுந்தன
உயிா் சிற்பங்கள்

அட்டமாசித்திகள்

1.அணிமா
2.மகிமா
3.லகிமா
4.கரிமா
5.பிராத்தி
6.பிரகாமியம்
7.ஈசாத்துவம்
8.வசித்துவம்

குடும்பப் பெண்

சிறு பெண்ணைச் சிறைபிடித்துத்
தாலி  என்ற  விலங்கிட்டு
சமையலறையில் சிறை வைத்து
வேலையென்ற தண்டனைகள்
விஷ நாக்கு சவுக்கடிகள் 

புறமும் - அரிசியும்

ஊன்சோறு
கொழுன்சோறு
நெய்சோறு
புளிசோறு
பால்சோறு
வெண்சோறு
உளுத்தண்சோறு
இவை புறநானுற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன .

தேர்வு

மகிழ்ச்சி சோகம்
இரண்டையும் ஒரே நேரத்தில்
தருவது

திங்கள், 16 டிசம்பர், 2019

இனிமையான நினைவுகள்

வார்த்தை சொல்லமுடியாத நொடி
உன்னைப் பார்த்தபோது எனக்குள் ஏற்பட்ட வலி
கால்கள் கூறுகின்ற வார்த்தையைக்
கண்கள் கேட்க மறுத்தது
அத்தனைபேர் இருந்தும்
உனக்கும் எனக்கும் ஒரு தனிமை
நீ என்னைப் பார்க்கவில்லை
நான் அந்த இடத்தில்
உன்னை மட்டுமே பார்த்தேன்
பார்த்ததை வெறுக்க முடியவில்லை
நினைத்ததை வெறுக்க முடியவில்லை
இதிலிருந்து மீள்வதற்கும் வழி இல்லையே

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

தேடியது கிடைக்குமா

கண்கள் தேடியபொழுது
பார்வை கிடைக்கவில்லையே
கால்கள் நடக்கும்போது
பாதை தெரியவில்லையே
பேசத் துடித்தபோது
வார்த்தை தோன்றவில்லையே
எண்ணம் மாறிவிட்டது
மனம் மட்டும் மாறவில்லையே

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

கதிரவன்

மலர்கள் பூக்கத் தொடங்கின
சேவல் கூவத் தொடங்கியது
இருள் மறையத் தொடங்கியது
உலகம் விழிக்கத் தொடங்கியது
செங்கதிரவன் வருகிறான்

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

பெண் ஒருத்தி

தேன் வடியும் மலரைச் சூடி
செங்கதிரவனைப் பொட்டாக வைத்து
கார் இருள் மேகங்களைக் கண்களுக்கு மையாகத் தீட்டி
விண்மீனைத் தோடாக அணிந்து
சங்குக்கழுத்தில் முத்துகளைச் சேர்த்து
வானவில்லை வளைக் கரங்களில் பூட்டி
செந்தாமரைபோல் கன்னம் சிவக்கப்
பெண்னொருத்தி வந்தாள்

-கன்னிகா, இளங்கலை மூன்றாமாண்டு ஆங்கிலம்.

சிவபெருமான்

காலத்தைக் கண்ணில் காட்டியவன்
கதிரவனுக்கே ஒளியைக் கொடுத்தவன்
கங்கையைச் சடைமுடியில் வைத்திருப்பவன்
இதயத்தில் குடிகொண்டவன்
வாழ்க்கையின் அர்த்தத்தைத் தெரிந்தவன்
வானத்தைவிட உயர்ந்தவன்
நெடிய கூந்தலை உடையவன்
நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவன்
நாகத்தை மாலையாகச் சூடியவன்
உமையம்மைக்கு இடது பாகத்தை அளித்தவன்
உள்ளத்தில் சிறந்தவன்
அன்பால் இணைந்தவன்
அறிவில் உலகைவிடப் பெரியவன்
அவரே நம் எம்பெருமான்

செவ்வாய், 10 டிசம்பர், 2019

வல்லவர்கள்

தமிழில் வெண்பா பாடுவதில் புகழ் பெற்றவர்கர் புகழேந்தி
விருத்தம் பாடுவதில் வித்தகர் கம்பர்
அந்தாதி பாடுவதில் உயர்ந்தவர் ஒட்டக்கூத்தர்
வசை பாடுவதில் வல்லவர் காளமேகப்புலவர்

தமிழில் உள்ள மூன்று மணிகள்

பண்டிதமணி - கதிரேச செட்டியார்
கவிமணி - தேசியவினாயகம்பிள்ளை
ரசிகமணி-  டி.கே.சிதம்பரமுதலியார்

வட்டாட்டம்

வட்டாட்டம்  என்பது தரையின் மேல் கிழிக்கப்பட்ட கட்டத்தில் நெல்லி வட்டத்தைப் போட்டு ஒரு  கட்டத்திலிருந்து மறு கட்டத்திற்க்குத் தள்ளி விளையாடுவர். இவ்விளையாட்டில் குறிப்பிட்ட இடத்தை அடைந்தவர்களே வெற்றி பெற்றவர்கள்  ஆவர். 

தமிழில் உள்ள வேதங்கள்

திராவிட வேதம் - திருவாய்மொழி              
வேளாண்வேதம் - நாலடியார்                        
தமிழ் வேதம் - திருமந்திரம்                            
சைவர் தமிழ்வேதம் - திருமுறைகள்

தந்தை

உள்ளே எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும்
வெளியில் சிரிக்கும் அருமையான ஓர் உறவு
பெண்
வாழ்க்கையிலும் சரி
வார்த்தையிலும் சரி
எதையும் தாங்குபவள்
அதிகாரம்
என்னை தீவிரவாதியாக
மாற்றும் ஓர்
ஆயுதம்

அம்மா            
தாலாட்டு  நீ  பாட 
ஒரு  நொடியும்  நேரமில்லை 
தாய்  மடியில்  நான்  உறங்க 
சொந்தங்கள் விட்டதில்லை 
உன்னுடன் இருக்கையில் 
உனதருமை விளங்கவில்லை 
உன்நிலை வந்தவுடன் 
உணர்கிறேன் இவ்வுலகில் 
உனக்கு நிகர் 
யாருமில்லை......!
காலம்
தோழி கூட
எதிரியாகி விடுவாள்
தாய் மொழி
சிந்தனை எனும் சிற்பத்தை தாய் மொழி  எனும் உழியால் மட்டுமே செதுக்க முடியும்