15.12.2015-ல் தொடங்கப்பட்டது எங்கள் கல்லூரி வலைப்பூ.இதன் நோக்கம் கணினி வழியில் தமிழை உலகளவில் பரப்புவதே.நாங்கள் இதற்காக 50 மாணவிகளுக்கு இலவசமாக தமிழ் தட்டச்சு,வலைப்பதிவில் எவ்வாறு தனது சொந்த கருத்துக்களை சுதந்திரமாக வெளியிடுவது மேலும் விக்கிப்பீடியாவிலும் எப்படி எழுதுவது குறித்தும் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் தமிழில் கட்டுரைகள்,கவிதைகள்,அவரவர் துறையைச் சார்ந்த சிலவற்றை எளிமையாக பகிர்ந்து வருகின்றனர்.மேலும் கல்லூரியின் நடப்புகள் குறித்தும் எழுதபட்டு வருகின்றனர்.
எத்தனையோ பதிவுகள் அவற்றிக்கு முகந்தெரியாத நல்ல உள்ளம் படைத்தவர்களின் வருகைகள் மற்றும் கருத்துகள் மற்றும் ஊக்கமும் சேர்ந்தே எங்கள் மாணவிகளின் முன்னேற்றம் மற்றும் அவர்களிடையே உள்ள தாய்மொழி குறித்த பற்று இவையெல்லாம் சேர்ந்தே இன்று நாங்கள் தொட்டுவிட்டோம் நூறாவது பதிவை.
ஆம் மூன்று மாதங்கள் சிறிய தூரம் தான் ஆனால் தொட்டுவிட்டோம் நூறாவது பதிவு என்பது பேரின்பமான தருணம்.மாணவிகள் அனைவருமே சிறந்த முறையிலும் மற்றும் பிறருக்கு பயன்பெறும் வகையிலும் பதிவை எழுத வேண்டும் என்ற வகையில் தேடி தேடி அழகான முறையில் தமிழில் பகிர்ந்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று.
இந்த முறையிலும் தமிழை வளர்க இயலும் என்று எங்களுக்கு அறிமுகப்படுத்தி இது குறித்து விழிப்புணர்வு அளித்து எங்கள்
முயற்சிக்கும் முன்னேற்றத்துக்கும் வழிவகுத்தது என் தமிழ் ஆசிரியர் முனைவர்.இரா.குணசீலன் ஐயா தான்.இந்த கணம் நாங்கள் அனைவரும் அவருக்கு நன்றிகள் பல சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
முனைவர்.இரா.குணசீலன் ஐயா.
குருவிற்கு நிகரில்லை;குருவின்றி நிறைவில்லை; என் குருநாதரே நன்றிகள் பல ஆயிரம்.எங்கள் ஒவ்வொரு முன்னேறவும் தங்களுடையதே குருவே.மாணவிகள் அனைவருக்கும் நன்றிகள் தொடரட்டும் நம் பதிவுகள்..!!